சஊதி அரபிய்யாவில் 19.08.2012 அன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. பெருநாள் விடுமுறையையொட்டி, ரியாத் வாழ் காயலர்கள் சிலர் மூன்று நாட்கள் இன்பச் சுற்றுலா சென்று வந்துள்ளனர். இதுகுறித்து, சுற்றுலாக் குழுவினர் தெரிவித்துள்ள விபரங்கள் பின்வருமாறு:-
ரியாத் வாழ் காயலர்கள் சிலர் தமது பெருநாள் விடுமுறையில், ஜுபைல் மற்றும் தம்மாம் நகருக்கு இடையில் அமைந்துள்ள ராஸ்-தநூரா என்ற சிறு நகரத்தில் வசிக்கும் - காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சார்ந்த கலீல் அவர்களின் இல்லத்தில் அனைவரும் ஒன்றிணைந்து பெருநாளைக் கொண்டாடினர்.
ரமலான் கடைசி தினத்தன்று இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்வுடன் துவங்கியது பெருநாள் ஒன்றுகூடல். பெருநாளைக்கு முந்தைய இரவில் அல்ஃகபர் நகரில் அமைந்துள்ள லூ லூ ஹைபர் மார்க்கெட்டில் அனைவரும் பெருநாள் புத்தாடைகளை கொள்முதல் செய்தனர்.
பெருநாளன்று அதிகாலையில் நோன்புப் பெருநாள் சிறப்புத் தொழுகையை நிறைவேற்றிய பின்னர் இல்லம் திரும்பிய அவர்களுக்கு, அங்கு நெய்ச்சோறு - கறி - கத்திரிக்காய்-மாங்காய் ஆகிய உணவுப் பதார்த்தங்களுடன் விருந்து உபசரிப்பு செய்யப்பட்டது.
அன்று மாலையில், ஜுபைல் நகரில் அமைந்துள்ள கடற்கரைக்கு சென்று, அரட்டையுடன் இன்பமாகப் பொழுதைக் கழித்தனர். இரவு உணவு Chicken Broasted-உடன் அன்றைய தினம் சிறப்பாக அமைந்தது.
இரண்டாவது நாள் மதிய உணவுவாக அரேபியர்களின் உணவான சிக்கன் மந்தி பரிமாறி மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள். அன்று மாலையில், அருகில் உள்ள ரஹீமா கடற்கரைக்குச் சென்று கால்பந்து, கைப்பந்து, பலூன் உடைத்தல் போன்ற விளையாட்டினூடே - காயல்பட்டினம் எல்.எஃப்.ரோட்டைச் சார்ந்த ஃதாகிப் அவர்களின் தலைமையில் BAR-BQ அமைத்து, சிக்கன் தந்தூரி தயாரித்து பரிமாறப்பட்டது. இரவு உணவாக Chicken Broasted-உடன் அன்றைய தினம் சிறப்பாக அமைந்தது.
மூன்றாவது நாள் மதிய உணவாக பிரியாணி பரிமாறப்பட்டது. அன்று மாலை மீண்டும் அருகில் உள்ள ரஹீமா கடற்கரைக்கு சென்று கால்பந்து, கைப்பந்து போன்ற விளையாட்டுகள் குழுக்களாக அமைத்து விளையாடப்பட்டது.
அத்துடன் இனிதே நிறைவுபெற்றது எங்களின் இன்பச் சுற்றுலா. அன்றிரவு அனைவரும் கனத்த இதயத்தோடு அடுத்த விடுமுறையை எதிர்நோக்கியவர்களாக தத்தம் இல்லத்தை நோக்கி பயணித்தனர்.
இந்த ஒன்றுகூடலில் ரியாதிலிருந்து பீனா அப்துல் ரஷீத், தைக்கா சாஹிப், ஃபைஸல் அஹ்மத், இப்றாஹீம் ஃபைஸல், புகாரீ ஷரீஃப், சித்தீக் ஆகியோரும், அல்ஃகபர் நகரத்திலிருந்து அப்துல் அஜீஸ், முத்துவாப்பா ஆகியோரும், தம்மாமிலிருந்து சுலைமான் ஃதாகிப், ஜுபைலிலிருந்து மஹ்மூத் புள்ளலெப்பை, ராஸ்-தநூராவிலிருந்து கலீலுர் ரஹ்மான் ஆகியோரும் இணைந்து பங்கேற்றனர்.
இச்சுற்றுலாவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து படக் காட்சிகளையும் தொகுப்பாகக் காண இங்கே சொடுக்குக!
இவ்வாறு, சுற்றுலாக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தகவல் & படங்கள்:
செய்யித் அஹ்மத் புகாரீ
மற்றும்
முத்துவாப்பா |