கடந்த ரமழான் மாதத்தை முன்னிட்டு, காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளிவாசல் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 73 ஏழைக் குடும்பங்களுக்கு, அப்பள்ளி நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் மஜ்லிஸுல் கரம் சங்கம் சார்பில் நோன்பு கால சமையல் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
முஹ்யித்தீன் பள்ளியைச் சுற்றியுள்ள - செண்டு ஆலிம் தைக்கா, யாக்கூத்துல் அர்ஷ், ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ், ஜன்னத்துல் காதிரிய்யா, ஸலாமத் தைக்கா, ரஹ்மத் தைக்கா ஆகிய பெண்கள் தைக்காக்கள் மூலமாக தலா எட்டு பயனாளிகளுக்கும், சேதுராஜா தெரு, கோமான் தெரு பொதுப் பயனாளிகள் 25 பேருக்கும் என மொத்தம் 73 ஏழைக் குடும்பத்தினருக்கு,
அரிசி, கோதுமை மாவு, சமையல் எண்ணெய், சீனி, பேரீத்தம்பழம், ரவை, மக்ரோனி சேமியா, சி.பருப்பு, உளுந்தம்பருப்பு, தேங்காய், இஞ்சி - பூண்டு, பால் பவுடர், உப்பு பாக்கெட், புளி, பட்டாணி மாவு, கோழி இறைச்சி (பெருநாள் இரவு), மசாலா தூள், பாதம் - முந்திரி, ரசம் சாமான்கள் ஆகிய சமையல் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
வினியோக ஏற்பாடுகளை, ஹாஜி எம்.டி.சேகு முஹம்மத், ஹாஜி வி.என்.எஸ்.காதர் ஷாம், ஹாஜி எம்.எஸ்.ஷேக் அலி, ஹாஜி கே.ஏ.எஸ்.லியாக்கத் அலீ, ஹாஜி எஸ்.எல்.புகாரி மவ்லானா, ஹாஜி ஊண்டி கிழுறு முஹம்மத், ஹாஜி ஏ.எஸ்.ஸதக்கத்துல்லாஹ் (இ.டி.ஏ. - ஜித்தா), ஹாஜி ஏ.எஸ்.கலீலுர்ரஹ்மான் (ஜெஸ்மின்), ஹாஜி கே.எம்.எம்.ஸலீம், ஹாஜி டி.எம்.எல்.மூஸா நெய்னா, ஹாஜி இசட்.ஏ.ஷேக் அப்துல் காதிர், ஹாஜி கத்தீப் இப்றாஹீம், ஹாஜி எம்.எம்.அப்துல் அஜீஸ், ஹாஜி டி.என்.இக்பால், ஹாஜி எம்.ஏ.செய்யித் அப்துல் காதிர், ஹாஜி குளம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் (செண்டு) ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் பொருட்களுக்கு அனுசரணை வழங்கியுள்ளனர். |