தமிழ்நாட்டில் 20.08.2012 அன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளியில் அன்று காலை 08.30 மணிக்கு பெருநாள் தொழுகை நடைபெற்றது.
பெருநாள் தொழுகையை ஷேக் அப்துல் காதிர் வழிநடத்த, அதனைத் தொடர்ந்து, பள்ளியின் இமாம் ஹாஃபிழ் ரஹ்மத்துல்லாஹ் குத்பா பேருரை நிகழ்த்தினார்.
இத்தொழுகையில், அப்பள்ளியைச் சுற்றி வசிக்கும் முஸ்லிம் மக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
பெருநாள் தொழுகைக்காக, ஆண்களுக்கு உள்பள்ளி மற்றும் பள்ளியின் வடபுற பாதை ஒதுக்கப்பட்டிருந்தது. பெண்களுக்கு வெளிப்பள்ளியில் தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது. அனைத்துப் பகுதிகளிலும் ஆண்களும் - பெண்களும் நிறைந்து காணப்பட்டனர்.
பெருநாள் தொழுகை சிறப்பேற்பாடுகளை, பள்ளியின் தலைவர் ஜுவெல் ஜங்ஷன் கே.அப்துர்ரஹ்மான், செயலாளர் ’முத்துச்சுடர்’ ஹாஜி என்.டி.இஸ்ஹாக் லெப்பை, பொருளாளர் கோமான் மீரான் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். |