காயல்பட்டினம் நகர நிகழ்வுகளையும், நகருக்குத் தேவையான தகவல்களையும், உலக காயலர் நிகழ்ச்சிகளையும் செய்திகளாகவும் - தகவல்களாகவும் தாங்கி, மாதமிருமுறை இதழாக துவக்கப்பட்டுள்ளது “நிகழ்காலம்”.
இதன் வெளியீட்டு விழா, 26.08.2012 ஞாயிற்றுக்கிழமை மதியம் 01.30 மணியளவில், காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
அப்பா பள்ளி தலைவர் ஹாஜி எம்.எஸ்.கே.எஸ்.மரைக்கார் என்ற சி.எம்.கே. விழாவிற்குத் தலைமை தாங்கினார். அரிமா சங்க மண்டல தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் முன்னிலை வகித்தார். காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
“நிகழ்காலம்” மாதமிருமுறை நாளிதழின் முதன்மைச் செய்தியாளர் எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் செய்தித் தொடர்பாளர் ஹாஜி ஒய்.எம்.முஹம்மத் ஸாலிஹ் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
வரவேற்புரையைத் தொடர்ந்து, முன்னிலை வகித்த ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் ஹாஜி சாளை ஷேக் ஸலீம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
காயல்பட்டினம் நகரின் பொதுச் செய்திகளைத் தாங்கி, முதல் மாதமிருமுறை இதழ் என்ற பெயரோடு பிறக்கும் இவ்விதழ், மார்க்க - அரசியல் மற்றும் இதர மன வேறுபாடுகளுக்கு ஒருபோதும் இடங்கொடாமல் - நடுநிலை தவறாமல் - ஊடக தர்மத்தை முழுமையாகப் பேணி செயல்பட வேண்டுமென அவர்கள் தமதுரையில் கேட்டுக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினரான - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் சிறப்புரையாற்றினார்.
செய்திகளை அதன் உண்மை நிலையை மக்கள் உணரும் வண்ணமும், உள்நோக்கம் - குறுகிய எண்ணங்கள் - ஒருசார்பு நிலை போன்றவற்றை முற்றிலுமாகத் தவிர்த்தும் இவ்விதழ் வெற்றி நடை போட வாழ்த்துவதாக அவர் தனதுரையில் தெரிவித்தார்.
பின்னர், “நிகழ்காலம்” மாதமிருமுறை இதழ் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. துவக்கப் பிரதியை நகர்மன்றத் தலைவர் வெளியிட, “நிகழ்காலம்” இதழில் முதல் சந்தாதாரராக தன்னைப் பதிவுசெய்துகொண்ட எழுத்தாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது அதனைப் பெற்றுக்கொண்டார்.
விழா தலைவர் ஹாஜி எம்.எஸ்.கே.எஸ்.மரைக்கார் என்ற சி.எம்.கே.,
அரிமா சங்க மண்டல தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர்,
நகரின் மூத்த எழுத்தாளர் காயல் இப்னு அப்பாஸ் என்ற ஏ.லெப்பை ஸாஹிப்,
ரெட் ஸ்டார் சங்க தலைவர் ஷேக் அப்துல் காதிர்,
தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் முன்னாள் துணைத்தலைவர் ஹாஜி எம்.ஐ.மெஹர் அலீ,
துபை காயல் நல மன்றத்தின் துணைத்தலைவர் ஹாஜி சாளை ஷேக் ஸலீம்,
துபை காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஜி டி.ஏ.எஸ்.மீரா ஸாஹிப்,
தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஜி பி.எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ் ஷாதுலீ,
காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன்,
ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.ஏ.ஷேக் தாவூத் இத்ரீஸ்,
இக்ராஃ கல்விச் சங்கத்தின் நிர்வாகியும், எழுத்தாளருமான ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத்,
ஐக்கிய விளையாட்டு சங்க பொருளாளர் எம்.எல்.ஹாரூன் ரஷீத்,
அதன் செயற்குழு உறுப்பினர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா,
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதியும், காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் துணைச் செயலாளருமான கே.எம்.டி.சுலைமான்,
காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தின் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன்,
அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் செயலாளர் முஹம்மத் முஹ்யித்தீன்,
காயல் டைம்ஸ் இணையதளத்தின் நிர்வாகி எம்.பி.எஸ்.செய்யித் அஹ்மத்,
காயல் நியூஸ் இணையதளத்தின் முதன்மைச் செய்தியாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ
ஆகியோர் அடுத்தடுத்த பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.
“நிகழ்காலம்” வெளியீட்டு விழாவை முன்னிட்டு, விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் முதல் பிரதி கட்டணமின்றி வினியோகிக்கப்பட்டது.
துவக்கத்தில், 8 பக்கங்களைக் கொண்டு இவ்விதழ் மாதமிருமுறை இதழாக வெளியிடப்படும் என்றும், காலப்போக்கில் இதன் பக்கங்கள் 16 என்றும் - பின்னர் 32 என்றும் அதிகரிக்கப்படும் என்றும், ஓராண்டுக்குப் பிறகு வார இதழாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் விழாவில் தெரிவிக்கப்பட்டது.
நகர செய்திகளைத் தாங்கி வரும் இவ்விதழை - காயல்பட்டினத்தின் ஒவ்வொரு வீட்டிலும் சந்தா செலுத்தி பெற்றுக்கொள்வதன் மூலம், இவ்விதழ் தொய்வின்றித் தொடர ஒத்துழைக்குமாறும், சந்தா சேர விருப்பமுள்ளோர்,
(1) மாஸ்டர் கம்ப்யூட்டர் அகாடமி
மெயின் ரோடு, காயல்பட்டினம்
(தொடர்பு எண்கள்: +91 4639 282145, +91 98421 88846)
(2) எஸ்.கே.ஸாலிஹ்
49 சித்தன் தெரு, காயல்பட்டினம்
(தொடர்பு எண்: +91 98658 19541)
ஆகியோரில் ஒருவரைத் தொடர்புகொள்ளுமாறும் விழாவில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
நன்றியுரைக்குப் பின் துஆவுடன் விழா நிறைவுற்றது. இவ்விழாவில், உலக காயல் நல மன்றங்களின் அங்கத்தினர், நகர பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள், எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாடுகளை, “நிகழ்காலம்” மாதமிருமுறை இதழின் ஆசிரியர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் ஒருங்கிணைப்பில், எஸ்.அப்துல் வாஹித், ஐ.அப்துல் பாஸித் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
“நிகழ்காலம்” வெளியீட்டு விழாவை முன்னிட்டு, விழா நிறைவுற்ற பின் - நகர் முழுக்க ஆயிரம் பிரதிகள் கட்டணமின்றி வினியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
படங்கள்:
I.அப்துல் பாஸித் |