காயல்பட்டினம் தாயிம்பள்ளி ஜமாஅத் கல்வி நலச்சங்கம் சார்பில், நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி - மாணவ மாணவியர் பங்கேற்கும் பல்வேறு போட்டிகளுடன் முதலாவது முறையாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிகழ்ச்சி குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
நமதூர் தாயிம்பள்ளி ஜமாஅத் கல்வி நலச்சங்கம் (TEWA) சார்பில் முதலாம் ஆண்டு நிகழ்ச்சி மஜ்லிஸூல் கௌது சங்க வளாகத்தில் வைத்து 23.08.2012 அன்று வியாழன் மாலை 5.00 மணியளவில் (கே.டி.எம். தெரு, அலியார் தெரு) தாயிம்பள்ளி ஜமாஅத்தைச் சார்ந்த உள்ளுர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கின்ற, நோன்பு பெருநாளை முன்னிட்டு ஊருக்கு வந்துள்ளவர்களும் ஒன்று கூடிய இனிய நிகழ்ச்சிகளும், அதோடு மாணவ, மாணவிகளையும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செய்து அவர்களின் மார்க்க அறிவை அறிந்திடவும், அதை மெருகூட்டும் வகையில் பாங்கு சொல்லும் போட்டி, திருமறை குர்ஆன் ஓதும்போட்டி, சன்மார்க்க வினா-விடை போட்டிகளும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி அல்-அமீன் ஆங்கிலப்பள்ளியின் நிறுவனர் எம்.ஏ.புகாரி எம்.காம், எம்.பில், எம்.ஏட் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஹாமிதிய்யா மார்க்க கல்வியின் ஹிப்ழு மாணவர் ஓய்.எம். மூஸா நிழா இறைமறை குர்ஆனின் வசனங்களை ஓதி துவங்கி வைத்தார். தாயிம்பள்ளி தலைவர் எஸ்.டி. வெள்ளைத்தம்பி ஹாஜி, செயலாளர் எம்.அஹ்மது ஹாஜி, துணைத்தலைவர் ஏ.கே. யாஸீன் மௌலானா ஹாஜி, பொருளாளா; கே.எம்.தவ்லத் ஹாஜி பி.ஏ., கௌரவ ஆலோசகர் எம்.மூஸா ஹாஜி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். சிறப்பு விருந்தினராக எல்.கே.மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மது ஹனீபா எம்.எஸ்.சி., எம்.ஏட். அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். அப்துல் மஜீத் ஆலிம் மஹ்ழரீ வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சி பற்றிய அறிமுகத்தையும் வரவேற்புரையையும் இக்ரா கல்வி சங்கச்செயற்குழு உறுப்பினர் ஏ.ஆர். தாஹா ஹாஜி அவர்கள் நிகழ்த்தினார்கள். கே.எம். செய்யது இஸ்மாயில் எம்.காம், (கொமந்தார்) அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். பள்ளியின் பேஷ் இமாம் எஸ்.எல். அகமது காஸீம், சீதக்காதி நினைவு நூலகம் மற்றும் TEWA அமைப்பின் தலைவர் ஹாஜி ஏ.எல்.எஸ்., மஜ்லிஸூல் கௌது சங்கத்தின் துணைத்தலைவர் எம்.ஹெச். சம்சுதீன் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கான வினா-விடைகளை தயாரித்து அளித்தார்கள். எம்.ஏ. முஹம்மது ஜாபிர் ஆலிம் யூசுபி அவர்கள் மாணவ, மாணவிகளுக்கான கேள்விகளை கேட்டு சிறிய உரையும் நிகழ்த்தினார்கள். தாயிம்பள்ளியின் துணைச் செயலாளா; எஸ்.ஹெச். முஹம்மது நியாஸ் அவர்கள் நன்றி தெரிவித்து பேசினார்கள்.
இக்கூட்டத்தில் பேசியவர்கள் அனைவர்களும் குழந்தைகளின் மார்;க்க அறிவையும், ஆற்றலையும் மிகவும் பாராட்டி பேசியதுடன், இன்றைய இளைஞா;களின் எதிர்காலங்களைப் பற்றியும் கவலை தொpவித்தார்கள். தொலைக்காட்சியினால் ஏற்படக் கூடிய விபரிதங்களையும் செல்போன் இணைய தளங்களினால் ஏற்படும் அபாயங்களையும் பற்றி எச்சாpத்து நல்ல பயனுள்ள தகவல்களை மட்டுமே பார்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்கள். நல்ல நண்பா;களுடன் பழக வேண்டும். நல்ல நூல்களை தோ;ந்தெடுத்து படிக்க வேண்டும், பழக வேண்டும், நல்ல நூல்களை தோ;ந்தெடுத்து படிகக் வேண்டும். பெற்றோர்கள் இவைகளையெல்லாம் கண்காணித்து நல்ல தீனியத்தான மக்களாக வளா;க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்கள்.
நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:
Ø எல்.கே.ஜி முதல் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான வினா-விடை, கிராஅத் ஓதுதல், பாங்கு சொல்லுதல் முதலியவை நடத்தப்பட்டன.
Ø நிகழ்ச்சியில் இளஞ்சிறுவர்களும், சிறுமிகளும் தங்களது மார்க்க அறிவையும், திறமையையும் வெளிப்படுத்தியது வந்திருந்தவர்களின் மனதை கொள்ளை கொண்டது. அனைவர்களும் வாழ்த்தி துஆ செய்தார்கள்.
Ø நிகழ்ச்சி நிரலில் இடம் பெறாத பேச்சுப்போட்டியில் மிகுந்த ஆர்வத்துடன் மூன்று மாணவிகள் கலந்து கொண்டார்கள். (நிகழ்ச்சியில் அறிவித்திருந்தால் அதிக மாணவ, மாணவிகள் கலந்து கொண்டிருப்பார்கள்.)
Ø வினா-விடை நிகழ்ச்சியில் 39 மாணவ, மாணவிகளும், 49 மாணவ, மாணவிகள் கிராஅத் ஓதியும், 19 மாணவர்கள் பாங்கு சொல்லும் நிகழ்விலும் கலந்து கொண்டார்கள்.
Ø நிகழ்ச்சியின் இடையில் மஃரிபு தொழுகைக்கு இடைவேளை விடப்பட்டு நோன்பாளிகளுக்கு நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வந்திருந்தவர் அனைவர்களுக்கும் சிற்றூண்டிகள் பரிமாறப்பட்டு உபசரிக்கப்பட்டது.
Ø 5 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி நேரம் இல்லாத காரணத்தால் பல மாணவ, மாணவிகளின் நேரத்தை சுருக்கி 8.30 மணி வரை நடத்தப்பட்டது.
Ø முத்தாய்ப்பாக, ஜமாஅத்தைச் சார்ந்த, சமீபத்தில் பட்டம் பெற்ற இரு ஹாபிழ்களான பி.செய்யது இஸ்மாயில், எஸ்.ஏ.கே. ஜதுருஸ் பாஸில் ஆகியோருக்கும் சிறப்பு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Ø தென் ஆப்பிரிக்கா நாட்டின் சிஸில் எனும் தீவில் நடைபெற்ற மரத்தான் போட்டியில் கலந்து பதக்கம் வென்ற ஜமாஅத்தைச் சார்ந்த பதூர் ஜமான் அவர்களை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
Ø இந்நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கியது. மாணவ மாணவிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதுபோன்ற பரிசுகள் வழங்கப்பட்டதை பெற்றோர்கள் மிகவும் மகிழ்ந்து பாராட்டினார்கள்.
Ø மேடையில் இடம்பெற்ற பொpயவர்கள் அனைவரையும் கௌரவித்து நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
Ø இந்நிகழ்ச்சியில், வெளிநாடு - வெளியூர் - உள்நாட்டின் பல பகுதிகளில் வசிக்கும் ஜமாஅத்தார்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொண்டனர்.
Ø இந்த இனிறய நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை TEWA நிர்வாகிகளுடன் இணைந்து, தாயிம்பள்ளி நிர்வாகிகளும், மஸ்லீஸில் கௌது சங்க உறுப்பினர்களும் சிறப்பாக செய்திருந்தார்கள். மேலும், ஆயிஷா மளிகை சகோ. உஸ்மான் அவர்கள் கலந்து கொண்டு ஜமாஅத்தில் ஒருவராக இணைந்து, அனைத்து ஒத்தாசைகளையும் செய்து தந்ததற்காக நன்றி தொவிக்கப்பட்டது.
Ø இறுதியில் கஃப்பாராவுடன் நிகழ்ச்சிகள் யாவும் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு தாயிம்பள்ளி ஜமாஅத் கல்வி நலச்சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.H.முஹம்மத் நியாஸ்
(துணைச் செயலாளர், தாயிம்பள்ளி)
படங்கள்:
ஹஸன் |