Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[23 August 2012] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21440
பாராட்டுக்கள்... மிகவும் அருமையான தேவையான சேவை.
சிங்கபூர் காயல் நலமன்றமும், எங்கள் தம்மாம் காயல் நற்பணி மன்றமும், ரியாத் மற்றும் மலபார் மன்றங்களும் இந்த சேவையை செய்து முடித்துள்ளார்கள். கூடவே நம் நகர முஸ்லிம் லீகும் பித்ரா அரிசி விநியோகமும் செய்து வருகிறார்கள். இந்த சேவையில் பங்கு கொண்ட அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் நற்கூலியை அளிப்பானாக.
இதிலும் ஒரு கண்ணீர் நிகழ்வு நடந்தது.
எங்கள் தம்மாம் மன்றம் சார்பில் இரண்டு பயனாளிகளுக்கு கொடுக்க, உணவுப்பொருட்களை என் வீட்டிற்கு அனுப்பினார்கள். நான் போன் பண்ணி இந்த இந்த ஆட்களுக்கு கொடுத்து விடுங்கள் என்று கூறினேன்.
ஒரு சில மணித்துளிகளில் வீட்டில் இருந்து போன்.
- என்னங்க.. நீங்க சொன்ன ஆட்களை விட இந்த இந்த ஆட்கள் மிகவும் வறுமையில் இருக்கின்றார்கள், இவர்களுக்கு கொடுக்கவா..!!!!! என்று அம்மணி கூறிய ஆட்களின் விபரத்தை கேட்டு கண்ணீர் வந்து விட்டது. இவர்கள் எல்லாம் வறுமையில் வாடுகிறார்களா என்றே நம்ப முடியவில்லை.
** பொருட்களை பலரும் கண்ணீர்மல்க வாங்கிய விசயத்தையும் சகோதரர்கள் சொன்னார்கள். ஒரு எழை உடைய துஆ அங்கீகரிக்கப்பட்டலே போதுமே..!!இன்ஷா அல்லாஹ்..
வல்ல ரஹ்மான் இல்லாமை, கல்லாமை இல்லாத, நோய்கள் இல்லாத நிம்மதியான ஊராக ஆக்கி வைப்பானாக.
** இப்படி பல மன்றங்களும், நிறுவனங்களும் தனித்தனியாக கொடுத்ததால் சிலருக்கு 3 நிறுவனங்கள் கொடுத்த உதவிகள் கிடைத்துள்ளன, பலருக்கு ஒன்றுமே கிடைக்கவில்லையாம்.. !!??..!
ஆக இந்த உதவி திட்டத்தை அனைவர்களும் ஒருங்கினைந்து, முறைப்படி பரவலாக பல ஏழைகளுக்கு கிடைக்கும்படி செய்யலாமே.. **
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross