Re:... posted byVilack SMA (kayalpatnam)[24 August 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21450
சகோதரர் MSS ,
நகராட்சியின் இப்போதைய அவசர நடவடிக்கை , மின்வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்வது. தண்ணீர் விடும் நேரத்தில் மின்தடை. இது ஒன்றுதான் சிறந்த வழி . எங்கள் பகுதி பெண்கள் சொல்வது , " காலை நேரத்தில் தற்போது உள்ள மின்தடை , தண்ணீர் வரும் நேரத்தில் இருக்காது பாருங்கள் " என்கிறார்கள் .
-- தங்கள் கண்முன்னே நடைபெறும் அநியாயத்தை ஏன் உரியவரிடம் புகார் அளிக்க கூடாது? >-- MSS
இந்த அநியாயத்தை நான் நேரில் பார்க்க நேரிட்டால் , அது என் உறவினராக இருந்தாலும் புகார் கொடுப்பேன் . ஏனெனில் பெருநாள் காலையில் தண்ணீர் எடுப்பதில் அந்த அளவுக்கு சிரமப்பட்டேன் . 5 நிமிடம் மட்டுமே தண்ணீர் வந்தது . இந்த 5 நிமிடம் பெற்ற தண்ணீரைத்தான் இன்றுவரை , ஏதோ மருந்து சாப்பிடுவதைப்போல் சொட்டு சொட்டாக உறிஞ்சிக் கொண்டிருக்கிறோம் . நொந்து noodles ஆகிக்கொண்டிருக்கிறோம் .
இருக்கும் தண்ணீரை அனைவரும் சமமாக பகிர்ந்தாலே போதும் , சிரமமின்றி இருக்கலாம் . இங்கே என்னவென்றால் தண்ணீர் திருடுபவர்கள் வீட்டில் நல்ல தண்ணீர் , வாய் செத்தவன் வீட்டில் குடிப்பதற்கு ஒரு கிளாஸ் தண்ணீரை அடுத்தவர் வீட்டில் கையேந்தும் நிலை . சகோதரர் MSS நீங்கள் ஊர் வரும்போது இதை நேரில் தெரிந்து கொள்வீர்கள் .
மொத்தத்தில் இந்த நகர்மன்றம் ஒரு செயல் இழந்த நகர்மன்றம் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross