நகராட்சின் அறிவிப்பின்படி பொதுமக்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எதையும் சாதிப்பது சிரமமே!
அடுத்து நகர்மன்றமும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இணைந்து நமதூரில் உள்ள அணைத்து "குடிநீர்" இணைப்புகளையும் அதிரடி சோதனை மேற்கொள்ளவேண்டும்.
அப்போது திருட்டுத்தனமாக பெறட்டபட்ட குடிநீர் இணைப்புக்களையும், மின் மோட்டார் மூலம் பிறரின் குடிநீரை (இரத்தத்தை) உறிஞ்சிடும் "தண்ணீர் திருடர்களையும்" அடையாளம் காண முடியும்.
அவ்வாறு இவ்வித மோசடியில் தொடர்ப்பான நபர்களின் இணைப்பை உடனடியாக துண்டிப்பதுடன், கடுமையான அபராதங்களும் விதிக்கப்பட வேண்டும்.
தயவு செய்து இவ்வித மார்க்க மோசடியில், (பிறர் உரிமையில்) அநியாயமாக ஈடுபடுபவர்கள் உடனடியாக அல்லாஹ்,ரசூலுக்கு பயந்து இந்த ஈனத்தனமான, இழிவான செயல்பாடுகளில் இருந்து உடனடியாக நீங்கி விடுங்கள். இந்தவித செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டு மார்க்கம் பேசுவதை உடனடியாக கைவிடுங்கள்.
பிறருக்கு இவ்வித மோசடிகளை செய்துக் கொண்டு ,பிறருக்கு உபதேசம் புரிவதற்கு இதுபோன்ற அயோக்கியர்களுக்கு அறவே உரிமையில்லை!
ஆகவே! இந்த அறிவுரை இவ்வித செயல்பாடுகள் உள்ள அனைவருக்கும் பொருந்தும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அனைவருக்கும் நல்ல அறிவை, நற்குணத்தை தந்து, எவ்விதத்திலும் பிறர் உரிமையை பறிக்காமல் வாழ வழி செய்வானாக! ஆமீன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross