Re:... posted byK S Muhamed shuaib (Kayalpatinam)[28 August 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21560
ஒருவர் திறமையானவர் என்றோ அல்லது திறைமை குறைந்தவர் என்றோ, இன்னொருவரோடு ஒப்பிட்டு பேசுவதே முதலில் அபத்தம்.
காமராசரும் அண்ணாவும் அவரவர் வழியில் திறமையானவர்கள். எம்.ஜி.ஆறும், கலைஞ்சரும் தனித்தனி வழிகளில் திறமையானவர்கள். ஜெயலலிதா ஒரு மாதிரி, மம்தா இன்னொரு மாதிரி. எனவே அவரை மாதிரி இவர் இல்லை என்றோ, இவரைக் காட்டிலும் அவர் மோசம் என்பதோ, அவரவர் சொந்த மனப்போக்கு. அதை பொது மக்களிடம் வலுக்கட்டாயாமாக திணிக்கக்கூடாது.
பொதுமக்களின் தேவை சார்ந்து அல்லது அவர்களின் துயரங்களை முன் நிறுத்தி ஒரு அரசியல் கட்சி போராடுவது இயல்பானது. நமதூரில் பல கட்சிகளும் பல்வேறு சமயங்களில் இவ்வாறு போராடியுள்ளன.
ஆனால் முஸ்லிம் லீக்கின் போராட்டம் குறித்து அவ்வாறான இயல்பான ஒரு மன நிலை என்போன்றோருக்கு ஏற்ப்படவில்லை. ஏனெனில் முஸ்லிம் லீக்கில் அங்கம் வகிக்கும் பலரும் இன்றளவும் நகரமன்ற தலைவியை அரசியல் ரீதியாக எதிர்த்து செயல்படுபவர்கள். அதிலுள்ள பலரும் ஐககிய பேரவையில் அங்கம் வகிப்பவர்கள். எனவே தலைவிக்கு எதிரான இவர்களின் போராட்டத்தை மக்கள் சார்பானது என்பதை விட வேறு ஏதோ ஒரு "எதிர்நிலை" எடுத்து இவர்கள் போராடுகிறார்களோ... என்றுதான் எண்ணவேண்டியுள்ளது.
தண்ணீர் பற்றாக்குறையால் நகர மக்கள் படும் சிரமங்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை. நிச்சயம் அது நகர்மன்றத்தால் விரைவில் தீர்க்கப்படவேண்டும் என்றே நானும் விரும்புகிறேன்.
பருவ மழை பொய்த்து போனதால் குடிநீர் பற்றாக்குறை நமதூரில் மட்டுமல்ல, மாநிலத்தின் பல பகுதிகளிலும் இன்று இதுதான் நிலை. எனவே இது நமது நகருக்கு மட்டும் ஏற்பட்ட தனி சாபமல்ல. இதை நகராட்சி நல்ல முறையில் எதிர் கொண்டு தீர்க்கவேண்டும்.
காயல் மகபூப் அவர்களின் சர்ச்சைக்கு இடமான பேச்சு குறித்து இங்கு பலரும் எழுதியுள்ளார்கள். அவர் அதை பேசியஇடம்தான் தவறே தவிர அவரது அரசியல் நோக்கின்படி அது தவறான பேச்சு அல்ல.
ஆட்சியை இழந்து நாற்ப்பது ஆண்டுகள் ஆகிய பிறகும் கூட ஊருக்கு ஐம்பது பேர் இன்றும் காங்கிரஸ் கட்சியில் இருக்கத்தான் செய்கிறார்கள். சில பெரிய பணக்கார தனவந்தர் குடும்பங்களும் இதில் அடக்கம். நமதூரிலும் கூட இதைக் காணலாம். பழைய பெருங்காய டப்பாதான் என்றாலும் வாசனை இன்னும் இருக்கத்தான் செய்யும். லீக்கும் அது போல ஒரு காலியான டப்பாதான் (தம்பி அபூபக்கர் என்னை மன்னிப்பாராக.. )
ஆர்ப்பாட்டத்தின் படங்களை கொஞ்சம் உற்று நோக்குங்கள் அடடா... அல்ஹாஜ்கள்... அல்லாமாக்கள், ஊரின் பணக்கார பெருந்தலைகள்.. பச்சை நிற பட்டொளி வீசும் கொடிகளை பிடித்து நிற்கும் அழகுதான் என்ன....
இதெல்லாம் லீக் கலைஞ்சர் பெம்மானோடு கூட்டணி இருக்கும் வரைதான்... இன்னொரு கட்சியோடு லீக் கூட்டணி சேர்ந்தால் இவர்களில் பலரை லீக் மேடையில் பார்க்க முடியாது. ஆ.ராசா கட்சி பக்கம் நடையைக் கட்டி விடுவார்கள்.
இங்கு தாய்சபை, தந்தை சபை என்றெல்லாம் குரல்கள் கேட்க்கின்றன. எல்லா வெந்த சபை.. வேகாத சபை எல்லாவற்றையும் பார்த்து விட்டுதான் அலுத்துப்போய் இருக்கிறோம். வேறு ஜோலி இருந்தால் பார்க்க பொங்கல்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross