'தூய எண்ணத்துடன் செயல் பட அருள் புரிவானாக ! posted byM.S.Kaja Mahlari. (Singapore)[29 August 2012] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 21582
" நிகழ்காலம் " மாதமிருமுறை பத்திரிக்கை ஊர் நல செய்திகள், ஊர் நடப்பு, நகர்மன்ற செய்திகள், பொதுவான செய்திகள் இவைகளை உள்ளடங்கியதாக இருத்தல் அவசியம்.
இதில் கொள்கை ,கோட்பாடுகள், இயக்க செய்திகள், கருத்து வேறுபாடு ,முரண்பாடு போன்ற செய்திகள் போன்றவை இல்லாமல் இருப்பது அவசியம்.
மார்க்க சம்பந்தமான அனைவருக்கும் பொதுவான செய்திகள் இருப்பது பிரச்சனை இல்லை.
இவ்வாறு இருக்கும் நிலையில் இந்த பத்திரிக்கை நீண்ட ஆயுளுடன் ,நிறைந்த செய்திகளுடன் நீடித்து இருக்கும்.
இல்லாவிட்டால் "பெயருக்கு ஏற்ற பிரகாரம் " பத்திரிக்கையும் "நடப்புக்காலம் ,வருங்காலம் " என்று இல்லாமல் ஆகிவிடும்.
அடுத்து இது ஒரே சார்பான கருத்துக்களை கூறாமல் இருப்பதோடு ,ஊர் நலங்களில் அக்கறையுள்ள அணைத்து சார்பான செய்திகளையும் கூறும் பத்திரிக்கையாக இருக்கவேண்டும்.
குறிப்பாக நகர் நல மன்றம், ஐக்கியப்பேரவை இவைகளுக்கு மத்தியில் இடம்பெறும் நீயா/ நானா ? என்ற போட்டித் தன்மை இல்லாமல் அனைத்தும் காயல்பதியின் ,காயல் மக்களின் நன்மைக்கே ! என்ற ஒரே எண்ணமே நிறைந்து இருக்கவேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் "நிகழ் காலத்தின் வருங்காலத்தை ,எதிர் காலத்தை 'தூய எண்ணத்துடன் செயல் பட அருள் புரிவானாக ! ஆமீன் !
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross