Re:... posted byVilack SMA (Nha Be , Vietnam )[29 August 2012] IP: 113.*.*.* Vietnam | Comment Reference Number: 21586
< சகோதரர் ஜியாவுதீன் அவர்களின் கருத்து வக்கீல் வாதம்போன்று சிறப்பாக உள்ளது.
> comment 21576
இவரது கருத்தில் வாதம் இல்லை , விவாதம்தான் உள்ளது .
< தாங்களுக்கு போதுமான குடிதண்ணீர் கிடைத்த பின்பு, தண்ணீர் வால்வை மூட மாட்டார்களாம் > 21579
அனேக வீடுகளில் வாழ்வு கிடையாது . தண்ணீர் நேராக தொட்டிக்குள் விழும் . தொட்டி நிரம்பியபின் வீணாக வழிந்து ஓடும் . அடிபம்பு இருக்கும் வீட்டில் இன்னும் மோசம் . அடிபம்பு அடிக்காமலேயே தண்ணீர் வீணாக வழிந்து ஓடும் .
அடுத்து , < மோட்டார் போட்டு தங்களின் குடிநீர் தேவைக்கு மட்டும், எடுப்பவர்களுக்கு தான் வக்காலத்து வாங்குகிறேனே தவிர, வரம்பு மீறுபவர்களுக்கு அல்ல.
>
தேவைக்கு மட்டும் மோட்டார் வைத்து உறிஞ்சினால் , அது தவறில்லை என்று சொல்லும் நீங்கள் , இன்னும் உங்கள் வீட்டில் மோட்டார் வைக்காதது ஆச்சரியமாக உள்ளது .
என்னதான் மீட்டர் பொருத்தினாலும் , அதற்கும் மேலாக எத்தனுக்கு எத்தன் இருப்பான் . தண்ணீரை திருடியே பழக்கப்பட்டவர்களுக்கு இது ஒன்றும் பெரிய விசயமே அல்ல . மன்னிக்கும் இறைவன் இதையும் மன்னிப்பான் என்ற நம்பிக்கை . அடுத்த 27 இல் அழுது தொழுது பாவமன்னிப்பு கோரினால் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை .
செய்வது தவறு என்று தனக்குத்தானே வருந்தி , திருந்தினால் ஒழிய இதற்கு பரிகாரமே வராது . என்னதான் ஆபிதா மேடம் சுற்றி சுற்றி வந்தாலும் , அல்லாஹ்வையும் , அவன் அளிக்க இருக்கும் தண்டனையையும் மறந்தவனுக்கு இதெல்லாம் ஒரு பெரிய பொருட்டே அல்ல .
இத்தோடு இந்த விவாதத்தை முடித்து , புது பஸ்ஸ்டாண்ட் தண்ணீர் தொட்டியை சம்பத்தப்பட்ட வார்டு மெம்பரை கவனிக்க சொல்வோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross