Re:... posted bymackie noohuthambi (kayalpatnam)[02 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21707
ஆழமாக படித்து பார்த்தால் ஒரு விஷயம் புரிகிறது.
தமிழகத்தில் எல்லா நகர்மன்றங்களிலும் மாநகராட்சிகளிலும் நடக்கிற சாதாரண நிகழ்சிகள்தான் இவை. முன்பு நடந்த நகர்மன்றத்தில் இந்த கார சார விவாதங்கள் எல்லாம் வீடியோ பிடிக்கப்பட்டு, இணைய தளங்களில் மக்கள் பார்வைக்கு வெளியிடப்பட வில்லை.
தற்போது "பாராளுமன்றத்தில் இன்று, சட்டமன்றத்தில் இன்று" என்று தொலைக்காட்சியில் பார்கிறோமே அதே போல் "நகர் மன்றத்தில் இன்று " என்று நமதூர் எல்லா டீவீயிலும் ஒளி பரப்பினால் வீட்டில் கணினி வசதி இல்லாதவர்கள் டீவீயில் பார்த்து நகரமன்ற நடவடிக்கைகளை தெரிந்து கொள்ளலாம். பாராளுமன்றம் 10 நாட்களாக முடங்கி கிடப்பதையும் ஒரு மணி நேரத்துக்கு 20 ,௦௦௦ ரூபாய் இழப்பீடு என்று புள்ளியியல் கூறுகிறதே அதைவிட இது எவ்வளவோ பரவாயில்லை. ஆனால் எல்லா மாதங்களிலும் இதே வெளிநடப்பு நடந்தால், இந்த நகர்மன்றம் நகரா மன்றமாக , தூங்காநகரம் என்று மதுரையை சொல்வார்களே அதே போல் எந்த மக்கள் பணியும் நடக்காத மன்றமாக தொடர்ந்து இருந்து வருவதில் அர்த்தமில்லை.
இந்த நகர்மன்றதை கலைத்து விட்டு புதிதாக தேர்தல் நடத்த நகரமன்ற ஆணையர் முதல்வர் அவர்களுக்கு பரிந்துரை செய்ய சட்டத்தில் இடமிருக்கிறதா என்று பார்த்து ஆவன செய்யுங்கள். இதைதான் மக்கள் இப்போது எதிர்பார்க்கிறார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross