அவையை முடக்கும் சதி posted byV D SADAK THAMBY (Guangzhou-China.)[02 September 2012] IP: 113.*.*.* China | Comment Reference Number: 21714
நகரமன்ற நிலைமை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. தலைவியின் கட்டுப்பாட்டில் நகர் மன்றம் இல்லை.இவரால் அவையை நடத்த முடியவில்லை.
போதிய வழிகாட்டுதலின்றி நகரமன்ற தலைவி தத்தளிக்கிறார்.
உறுப்பினர்களிடையே கைகலப்பு ஏற்படும் சூழல் தெரிகிறது. இவர்களுடன் பார்வையாளர்களும் கூட கைகலப்பில் எளிதாக கலந்துகொள்ளும் சூழ்நிலை உள்ளது. கூட்ட அரங்கிற்குள் உறுப்பினர்களுடன் ஒன்றாக கலந்திருக்கும்படி பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது.அவர்களுக்கு தனியாக பிரித்து இடம் ஒதுக்க வேண்டும்.
புகைப்படத்தை பார்க்கும்போது நடப்பது நகர்மன்றகூட்டமா அல்லது மீன் சந்தையா என்ற ஐயப்பாடாக இருக்கிறது.. உறுப்பினர்கள் யார் யார் , பார்வையாளர்கள் யார் யார் என்ற பேதமில்லாமல் கலந்து இருக்கின்றனர் .இதற்கு மத்தியில் மீடியாக்களின் தள்ளு முள்ளு வேறு....
மீடியாக்களின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதை காண முடிகிறது.
எல்லாவற்றிற்கும் ஒரு எல்லைதான்.மீடியாக்களின் ஆதிக்கத்தை ஒரு வரைமுறை படுத்தவேண்டும்.
மீடியாக்களின் கட்டுமீறிய ஆதீக்கத்தால் நகர் மன்றத்தில் கலவரத்தை ஏற்படுத்தி , தலைவியின் தரப்பினர் நகர்மன்றத்தை முடக்கும் சதி நடப்பதுபோல தெரிகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross