Re:காயலின் கண்ணியம் சீரழிக்கப்பட்டுள்ளது.!!!... posted byceylon fancy KAZHI. (jeddah,Saudi Arabia.)[02 September 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21724
சங்கை மிகுந்த பெரியவர்களான M K T அப்பா ,L K அப்பா ,V M S லெப்பை மாமா ,போன்றவர்கள் கட்டி காத்த பாரம்பரியம் மிக்க நமது காயல் பட்டணத்தின் கண்ணியத்தை சீரழித்து சின்னாபின்னமாக்கி விட்டார்கள்.நமதூர் நலனை பற்றி விவாதிக்காமல் சொந்த கால்புனர்சியின் காரணமாக வெளிநடப்பு செய்யும் இவர்களை தேர்ந்தேடுத்த நமக்கு நல்ல பாடம் கற்று தருகிறார்கள்! நமதூரில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு பற்றி கவலையே கொள்ளாத இந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருப்பது மக்களின் குறைகளில் அக்கறை காட்டாமல் உள்ளார்கள் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
நகரமன்ற நிலைமை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. உறுப்பினர்களுக்கும் தலைவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வின்மை காரணமாக உறுப்பினர்களிடையே கைகலப்பு ஏற்படும் சூழல் தெரிகிறது. ஒரு பக்கம் வெளிநாடு வாழ் காயலர்கள் உள்ளூர் காயலர்களின் கல்வின் தரத்தையும்,வட்டமிட்டுகொண்டு இருக்கும் ஏழ்மை சகோதரர்களின் வாழ்வாதரங்களை உயர்த்த அரும்பாடுபட்டு தத்தம் நாடுகளில் மன்றகளை அமைத்து ஆற்றல் மிகு சேவைகளை செய்துவருகின்றனர் மறு பக்கம் உலகமே பார்க்கும் படி நகர்மன்றத்தை உறுப்பினர்கள் நாறடித்து வருகின்றனர்.
எனவே மக்கி நூஹுத்தம்பி காக்கா அவர்கள் சொன்னது போல் இந்த நகர்மன்றத்தை கலைத்து விடுவது தான் சிறந்தது. வேறு வழி இல்லை.ஒவ்வொரு நகர்மன்ற கூட்டத்திலும் இவர்கள் இப்படித்தான் வெளிநடப்பு!! செய்வார்கள்.
மனம் வெம்பிய காயலர்களில் ஒருவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross