Re:... posted byK S Muhamed shuaib (Kayalpatnam)[02 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21728
நடந்து முடிந்த "நகர மன்ற "கூட்டத்தை முதன் முதலாக பார்க்கும் பேறு பெற்றவர்களில் நானும் ஒருவன். நான் இதய நோயால் சமீபத்தில் பாதிக்கப்பட்டவன். என்றாலும் நடந்த நிகழ்வுகளை மன தைரியத்தோடு தாங்கிக்கொண்டேன். ஒரு வேலை என்னை விடவும் மோசமாக இதயம் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் அங்கிருந்தால் நிலைமை ராசாபாசமாகி இருக்கும். அந்த அளவுக்கு உறுப்பினர்களின் காட்டுக்கூச்ச்சலும், வசைமாரி வார்த்தைகளும் மேஜைகளை போட்டு "டமார் ""டமார் "என்று அடித்தலும் அங்கு நடைபெற்றன.
தலைவி ஒரு பெண்மணி. அவரால் முடிந்த அளவு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நினைத்தார். முடியவில்லை. உறுப்பினர்கள் ஒருவரோடொருவர் பலத்த காரசார விவாதங்களில் ஈடுபட்டனர்.
ஒரு உறுப்பினர் தலைவியை பெண் என்றும் பாராது ஒரு அநாகரீக சொல்லால் விமர்சித்தார். "வந்தான் வரத்தான் "போடா "வாடா "என்ற UN PARLIMENTRY WORD களும் நிறைய புழங்கின.
மீடியாக்களை அழைத்துவந்தது தலைவி அல்ல. உறுப்பினர்கள்தான். தலைவி, அவர்களையும் "ALL ARE WELCOME" என்று வரவேற்கவே செய்தார். இறுதியில் தலைவியை அவர்கள் பேட்டி கண்டபோது நகரமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை அவர்களும் உணர்ந்து கொண்டார்கள்.
உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வேண்டுமாம். சிரிப்புதான் வருகிறது. உறுப்பினர்களிடமிருந்து தலைவிக்கும், அங்குள்ள பணியாளர்கள். வந்திருந்தா பார்வையாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வேண்டும் என நாம் சொல்கிறோம்.
கெட்டதிலும் ஒரு நல்லது இருக்கும் என்பார்கள். கடந்த இரண்டு கூட்டங்களாக 'வீடியோ '"மீடியா 'என்று பிதற்றி திரிந்த உறுப்பினர்கள் இனி அது குறித்து வாய் திறக்க முடியாது. ஏனெனில் எல்லா மீடியாக்களையும் வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து வந்தவர்கள் "மானமிகு (?)உறுப்பினர்கள்தான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross