திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது...!அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்து கொண்டே இருக்குது...! posted byM.N.L.முஹம்மது ரபீக், ( புனித மக்கா. )[02 September 2012] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21730
தயவு செய்து இந்த விஷயத்தை ஓடுற தண்ணியிலெ எழுதுன கதையா ஆக்கிடாமெ உடனே ஆக வேண்டிய காரியங்களை செய்தே ஆக வேண்டும். ஊர் முழுக்க மோட்டார் வச்சு தண்ணீரை உரிஞ்சாலும் 4 இலட்சம் லிட்டர் சத்தியமா உறிய இயலாது!
பெரிய அளவில் வழிப்பறியே நடக்குது! இதுக்கு என்ன வழி? படித் தொகையை மட்டும் பாக்கெட்டுக்குளே தினிச்சுட்டு படியிறங்கிப் போகும் நகர் மன்றத்தின் பொறுப்பு மிக்க உறுப்பினர்களே? உங்களை நம்பி ஓட்டுப் போட்ட ஊர் மக்களுக்கு ஏதேனும் நல்லது செய்யனும்ன்னு நினைச்சீங்கன்னா இதுக்கெதிராக குரல் கொடுங்க...!
இப்படியெல்லாம் நடக்கும் என அறிந்து என்றைக்கோ பட்டுக்கோட்டையார் எழுதிய பாடல் வரிகள் இச் செய்திக்கு கனக் கச்சிதமாகப் பொருந்துவது அதிசயமே! இதோ! அந்த முத்தான நிதர்சண வரிகள்...
திருடாதே! பாப்பா திருடாதே!
வறுமை நிலைக்குப் பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே
சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து-தவறு
சிறிசா இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாமே நடந்திருந்தா-அது
திரும்பவும் வராமே பார்த்துக்கோ
திட்டம் போட்டுத் திருடுற கூட்டம்
திருடிக்கொண்டே இருக்குது-அதைச்
சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது
திருடராய் பார்த்துத் திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது
கொடுக்கிற காலம் நெருங்குவதால் - இனி
எடுக்கிற அவசியம் இருக்காது
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்கிற வேலையும் இருக்காது
ஒதுக்கிற வேலையும் இருக்காது
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்கிற நோக்கம் வளராது-மனம்
கீழும் மேலும் புரளாது!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross