லட்ச கணக்கில், மாயமாக மறையும் காயல்பட்டினத்திற்கான குடிநீர்! என்ற தலைப்பில் ஆகஸ்ட் 31 அன்று காயல்பட்டணம்.காம் செய்தி வெளியிட்டிருந்தது. அதனை தொடர்ந்து இது குறித்து விசாரிக்க திருநெல்வேலியில் உள்ள நகராட்சித்துறை மண்டல அதிகாரிகள் - காயல்பட்டினம் நகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.
முந்தைய செய்தியில் - ஆகஸ்ட் 28 - 31 தேதி வரையிலான நிலவரம் வெளியிடப்பட்டிருந்தது.
காயல்பட்டினம் நகராட்சி அலுவலர் - ஆகஸ்ட் 31 இரவு முதல் செப்டம்பர் 1 அதிகாலை வரை 7.2 லட்ச லிட்டர் தான் பெறப்பட்டது என கூறுகிறார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தரப்பில் 11 லட்சம் லிட்டர் அனுப்பப்பட்டதாக மீண்டும் தெரிவிக்கப்படுகிறது. 3.8 லட்ச லிட்டர் மாயம்.
செப்டம்பர் 1 அன்று காயல்பட்டினத்திற்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவு 12 லட்ச லிட்டராக உயர்த்தப்பட்டது. இருப்பினும் காயல்பட்டினம் நகராட்சி அலுவலர் - செப்டம்பர் 1 இரவு முதல் செப்டம்பர் 2 அதிகாலை வரை 8 லட்ச லிட்டர் தான் பெறப்பட்டது என கூறுகிறார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தரப்பில் 12 லட்சம் லிட்டர் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 4 லட்ச லிட்டர் மாயம்.
1. Re:... posted byK S Muhamed shuaib (Kayalpatinam)[02 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21729
"தோல் இருக்க சுளை பறிபோன "கதையாக அல்லவோ இருக்கிறது?
யார் இதை களவாடுகிறார்கள்? நமது நகராட்சி குடி நீர் வடிகால்வாரியத்திடம் இது குறித்து முறைப்படி புகார் செய்யவேண்டும். சட்ட ரீதியாக ஆறுமுகநேரி காவல் நிலையத்திலும் புகார் தர வேண்டும்.
ஒரு தொழிற்சாலையை மட்டும் தவறான கண்ணோட்டத்தில் அணுகக்கூடாது. வழியில் எவர் வேண்டுமானாலும் நீரை களவாட வாய்ப்பு உண்டு.
2. திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது...!அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்து கொண்டே இருக்குது...! posted byM.N.L.முஹம்மது ரபீக், ( புனித மக்கா. )[02 September 2012] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21730
தயவு செய்து இந்த விஷயத்தை ஓடுற தண்ணியிலெ எழுதுன கதையா ஆக்கிடாமெ உடனே ஆக வேண்டிய காரியங்களை செய்தே ஆக வேண்டும். ஊர் முழுக்க மோட்டார் வச்சு தண்ணீரை உரிஞ்சாலும் 4 இலட்சம் லிட்டர் சத்தியமா உறிய இயலாது!
பெரிய அளவில் வழிப்பறியே நடக்குது! இதுக்கு என்ன வழி? படித் தொகையை மட்டும் பாக்கெட்டுக்குளே தினிச்சுட்டு படியிறங்கிப் போகும் நகர் மன்றத்தின் பொறுப்பு மிக்க உறுப்பினர்களே? உங்களை நம்பி ஓட்டுப் போட்ட ஊர் மக்களுக்கு ஏதேனும் நல்லது செய்யனும்ன்னு நினைச்சீங்கன்னா இதுக்கெதிராக குரல் கொடுங்க...!
இப்படியெல்லாம் நடக்கும் என அறிந்து என்றைக்கோ பட்டுக்கோட்டையார் எழுதிய பாடல் வரிகள் இச் செய்திக்கு கனக் கச்சிதமாகப் பொருந்துவது அதிசயமே! இதோ! அந்த முத்தான நிதர்சண வரிகள்...
திருடாதே! பாப்பா திருடாதே!
வறுமை நிலைக்குப் பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே
சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து-தவறு
சிறிசா இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாமே நடந்திருந்தா-அது
திரும்பவும் வராமே பார்த்துக்கோ
திட்டம் போட்டுத் திருடுற கூட்டம்
திருடிக்கொண்டே இருக்குது-அதைச்
சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது
திருடராய் பார்த்துத் திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது
கொடுக்கிற காலம் நெருங்குவதால் - இனி
எடுக்கிற அவசியம் இருக்காது
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்கிற வேலையும் இருக்காது
ஒதுக்கிற வேலையும் இருக்காது
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்கிற நோக்கம் வளராது-மனம்
கீழும் மேலும் புரளாது!
3. Re:... posted byNMZ.Ahamedmohideen (KAYALPATNAM)[02 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21738
திருடுவதற்கு வழி இருக்கும் காலம் எல்லாம் திருட்டு போய் கொண்டுதான் இருக்கும். திருடப்படும் வழி முழுமையாக அடைக்கப்பட்டாலே தவிர, திறந்து விடப்படும் லட்சக்கணக்கான தண்ணீர் முறையான முறையில் சென்று அடைய வேண்டிய மக்களுக்குபோய் சேரும் ...இல்லையானால் ????????? தண்ணீர் மாயமோ மாயம்தான் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross