அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில், நகர்நலப் பணிகளுக்கான முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. விபரம் பின்வருமாறு:-
காயல்பட்டினம் சதுக்கைத் தெரு - பெரிய சதுக்கை வளாகத்தில் இயங்கி வரும் அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம், 26.08.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில், மன்ற வளாகத்தில் கூடியது.
ஆசிரியர் இசட்.ஏ.ஷேக் அப்துல் காதிர் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது தலைமையுரையாற்றினார்.
கூட்டத்தில் பங்கேற்றோரின் - நகர்நலன் குறித்த நீண்ட கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
(1) நமது சங்க நிர்வாகிகளின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற ஜாதிவாரி கணக்கெடுப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த அனைவரையும் இக்கூட்டம் மனதாரப் பாராட்டுகிறது.
(2) நமதூரில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கிடுவது சம்பந்தமாக, அதிகாரிகளை அணுகி தகுந்த நடவடிக்கை எடுப்பதெனவும், லாரிகள் மூலம் நடைபெறும் குடிநீர் வினியோகத்தை அந்தந்த வார்டு உறுப்பினர்கள் முறைப்படுத்தித் தரவும் இக்கூட்டம் கோரிக்கை விடுக்கிறது.
(3) நமது நகராட்சியில் நிலவி வரும் தலைவர் - உறுப்பினர்களிடையேயான கருத்து வேறுபாட்டை நீக்க ஹாஜி என்.எம்.இ.மஹ்மூது மானாத்தம்பி அவர்கள் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
(4) நமதூரில் வழங்கப்பட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டையில் மீண்டும் மீண்டும் ஏற்பட்டு வரும் தவறுகளைக் களைய தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
(5) குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் செய்யும் முகாமை நமதூரில் நடத்த ஹாஜி லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹஸன் அவர்களின் உதவியை நாடுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
(6) நமது சங்கத்தை மறுபதிவு செய்துள்ளதால், சங்க உறுப்பினர்கள் அனைவரும் aywakayal@gmail.com என்ற மன்றத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு இதன்கீழ் காணும் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள படி விபரங்களை அனுப்பித் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
(7) சங்கத்தின் வளர்ச்சிக்காக,
என்.எஸ்.இ.மஹ்மூது - ரூ.1,000
பிரபு செய்யித் அப்துர்ரஹ்மான் - ரூபாய் 1,000
ஆசிரியர் இசட்.ஏ.ஷேக் அப்துல் காதிர் - ரூபாய் 1,000
ஆசிரியர் ஸூஃபீ - ரூபாய் 1,000
ஷாஹுல் ஹமீத் (முன்னாள் செயலர்) - ரூபாய் 1,000
நிஃமத் - ரூபாய் 1,000
அபூ (கோழிக்கோடு) - ரூபாய் 1,000
எம்.என்.செய்யித் முஹ்யித்தீன் (கே.வி.எஸ்.) - ரூபாய் 1,000
ஆகிய நிதி தந்துதவியோருக்கு இக்கூட்டம் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துஆ - ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது.
தகவல்
அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில்
W.K.A.ஷாஹுல் ஹமீத்
செய்தித் தொடர்பாளர்.
[செய்தி திருத்தப்பட்டது @ 00:09/05.09.2012] |