வரலாற்று சிறப்புமிக்க புதிய குடிநீர் திட்ட டெண்டர் - செப்டம்பர் 4 அன்று காயல்பட்டினம் நகராட்சியில் திறக்கப்பட்டது. இ-டெண்டர் முறையில் பெறப்பட்ட இந்த ஒப்பந்தபுள்ளிகள் மாலை 3:30 அளவில் - ஒப்பந்ததாரர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. இறுதி
தினமான நேற்றுவரை - இரண்டு நிறவனங்கள் ஒப்பந்தபுள்ளிகளை சமர்ப்பித்திருந்தனர். அவை சென்னையை சார்ந்த Shriram EPC Limited மற்றும் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை சார்ந்த Megha Engineering and Infrastructure
Limited.
காயல்பட்டினம் நகரமன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக், ஆணையர் அசோக் குமார், நகராட்சி பொறியாளர் (பொறுப்பு) முத்து, இதர காயல்பட்டினம் நகராட்சி அலுவலர்கள், ஒப்பந்தப்புள்ளிகளை சமர்ப்பித்திருந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள்
ஆகியோர் ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும்போது அங்கிருந்தனர்.
இந்த டெண்டர் குறித்து மேலதிக விபரம் வழங்கிய பொறியாளர் முத்து - இந்த டெண்டர் இரண்டு கவர் முறையில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், முதலில் ஒப்பந்தப்புள்ளிகள் சமர்ப்பித்துள்ள நிறுவனங்களின் தொழில்நுட்ப தகுதி (TECHNICAL BID) பரிசீலிக்கப்படும்
என்றும், அதன் பிறகே - அதில் தகுதி வாய்ந்த நிறுவனங்களின் ஒப்பந்தபுள்ளிகள் (PRICE BID) திறக்கப்படும் என்றும் தெரிவித்தார். இன்னும் ஒரு வாரத்தில் இப்பணிகள் அனைத்தும் நிறைவுபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
டெண்டர் அறிவிப்பு ஜூலை 28 அன்று நாடு முழுவதும் - தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிலும், தமிழகம் முழுவதும் தின மலர் நாளிதழிலும் வெளியிடப்பட்டது.
சுமார் 28 கோடியே, 30 லட்சத்து, 82 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த பணிகளுக்கான டெண்டர், இ-டெண்டர் முறையில் வெளியிடப்பட்டு, ஆவணங்களை ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 3 வரை - இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்
என அறிவிக்கப்பட்டிருந்தது. ஒப்பந்தப்புள்ளிகள் திறப்பதற்கு முன்னர் விளக்க கூட்டம் (Pre-Bid Meeting) ஆகஸ்ட் 23 அன்று காலை 11 மணி அளவில், காயல்பட்டினம் நகராட்சியில் நடைபெற்றது.
இந்த திட்டம் மத்திய அரசின் UIDSSMT (Urban Infrastructure Development Scheme for Small and Medium Towns) திட்டத்தின் கீழ் அமல்படுத்தப்படவுள்ளது. மொத்த திட்ட தொகையில் 80 சதவீதம் மத்திய அரசும், 10 சதவீதம்
மாநில அரசும், 10 சதவீதம் காயல்பட்டினம் நகராட்சியும் பங்களிக்கும். அதன்படி காயல்பட்டினம் நகராட்சியின் பங்கு சுமார் 3 கோடி ரூபாய் இருக்கும். திட்டம் துவக்கப்பட்டு 18 மாதங்களில் (மழை காலங்களையும் சேர்த்து) நிறைவு செய்யப்படவேண்டும்..
புகைப்பட உதவி:
ஹாபிழ் எம்.எம். முஜாஹித் அலி |