காயல்பட்டினம் துளிர் பள்ளி கேளரங்கில் நடைபெற்ற பொலிஸ் - பொதுமக்கள் நல்லுறவு சங்க விழாவில், திருச்செந்தூர் டி.எஸ்.பி. ஞானசேகரன் பங்கேற்றார்.
பொலிஸ் - பொதுமக்கள் நல்லுறவுச் சங்க விழா, 01.09.2012 அன்று மாலை 05.30 மணியளவில் காயல்பட்டினம் துளிர் பள்ளி கேளரங்கில் நடைபெற்றது.
சமூக சேவகர் வாவு கே.எஸ்.எம்.புகாரீ விழாவிற்குத் தலைமை தாங்கினார். அரிமா சங்க காயல்பட்டினம் நகர செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை, நெல்லை தொழிலதிபர் பி.ஏ.ஸிராஜுத் தவ்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேட்மாநகரம் இக்பால் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். எச்.ஏ.செய்யித் அஹ்மத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
இவ்விழாவில், திருச்செந்தூர் டி.எஸ்.பி. ஞானசேகரன், ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் ஆகியோர் சிறப்பழைப்பாளர்களாகப் பங்கேற்று, சிறப்புரையாற்றினர்.
காயல்பட்டினம் நகர்மன்ற 15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால், மூன் டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஷமீம் ஷேக் முஹம்மத், இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான், பொலிஸ் - பொதுமக்கள் நல்லுறவு சங்க மாவட்ட தலைவர் எஸ்.எம்.ரஸ்மி ரூமி ஆகியோரும் பேசினர்.
இவ்விழாவின்போது, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அவற்றை சிறப்பழைப்பாளர்களும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் வழங்கினர்.
பின்னர், மேடையில் வீற்றிருந்த அனைவருக்கும் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
இவ்விழாவில், காவல்துறை ஆய்வாளர்களான திருச்செந்தூர் - தில்லைழ நாகராஜன், ஆத்தூர் தங்கராஜ் ஆகியோரும், இலங்கை ஜுவைரிய்யா முஸ்லிம் மகளிர் கல்லூரி நிறுவனர் அரிஸ் மவ்லானா, பொலிஸ் - பொதுமக்கள் நல்லுறவு சங்க மாவட்ட செயலாளர் அப்பாஸ், காயல்பட்டினம் நகர தலைவர் முஹம்மத் மீரான், செயலாளர் செய்யித் அஹ்மத் அஜ்வாத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
படங்களில் உதவி:
ஃபாஸில் ஸ்டூடியோ |