காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியில் இயங்கி வரும் அடுமனைப் பிரிவில், மாவு பிசையும் கருவி வாங்குவதற்காக, பெங்களூரு காயல் நல மன்றம் சார்பில் ரூபாய் 65,000 தொகை அனுசரணையளிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 21.08.2012 அன்று துளிர் பள்ளியில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில், பெங்களூரு காயல் நல மன்றத்தின் உறுப்பினர்களான சுலைமான், மஸாஹிர் அமீன், பத்ரிய்யா கலீல் ரஹ்மான், ஷேக் அப்துல்லாஹ், கே.கே.எஸ்.ஸாலிஹ், சுப்ஹானீ மற்றும் ஹாங்காங் கஸ்வா அமைப்பின் உறுப்பினர்களான ஷகீல், காமி்ல், காமில் காதிர் ஸாஹிப் ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில், பெங்களூரு காயல் நல மன்றம் சார்பில் வழங்கப்பட்ட ரூபாய் 65,000 அனுசரணைத் தொகையை, துளிர் பள்ளி நிறுவனர் வழக்குரைஞர் அஹ்மத் பெற்றுக்கொண்டார். துளிர் பள்ளியின் வளர்ச்சிக்காக தேவைப்படும் பொருட்கள் குறித்து அவர் இந்நிகழ்வில் விளக்கிப் பேசினார்.
நிறைவில், துளிர் பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் சங்க தலைவர் ஆயிஷா ஸாஹிப் தம்பி நன்றி கூறினார். |