காயல்பட்டினம் நகர்மன்றத்தின் ஆகஸ்ட் மாதத்திற்கான மாதாந்திர (சாதாரண) கூட்டம், 30.08.2012 அன்று மதியம் 03.30 மணிக்கு, நகர்மன்ற கூட்டரங்கில் நடைபெற்றது.
தொடர்ந்து மூன்றாவது மாதமாக இக்கூட்டத்திலும் கூட்டப் பொருட்கள் எதுவும் வாசித்து விவாதிக்கப்படாத நிலையிலேயே உறுப்பினர்கள் பல்வேறு காரணங்களைக் கூறி வெளிநடப்பு செய்தனர்.
கூட்டத்தின்போது பதிவு செய்யப்பட்ட அசைபட (வீடியோ) காட்சியைக் காண இங்கே சொடுக்குக!
உறுப்பினர்கள் வெளிநடப்பைத் தொடர்ந்து, வெளிநடப்பு செய்த நகர்மன்ற உறுப்பினர்கள் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தனர். அதன் அசைபடத்தைக் காண இங்கே சொடுக்குக!
அதனைத் தொடர்ந்து, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அசைபடத்தைக் காண இங்கே சொடுக்குக!
1. Re:வக்பு செய்தவரின் உயர்ந்த நோக்கத்தை சிதைத்துவிட்டார்கள் ... posted byceylon fancy KAZHI. (jeddah,Saudi Arabia.)[02 September 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21740
எனது மாமனார் காலஞ்சென்ற (மர்ஹூம்) தோல்சாப்பு அஹமது முஹிதீன் அவர்கள் சுமார் 45 வருடங்களுக்கு முன்பு சுமார் 2 ஏக்கருக்கும் மேல்பட்ட இந்த இடத்தை நமது நகர் மன்றத்திற்காக வக்பு செய்துள்ளார்கள். (இப்போது அதன் மதிப்பு பல கோடி) நமதூர் கோசா பெண்கள் அரசாங்க பணி நிமித்தமாக வெளியில் வெகு தூரம் செல்லக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்திற்காக இதை வக்பு செய்துள்ளார்கள். (தோல்சாப்பு அஹமது முஹிதீன் அவர்களால் வக்பு செய்யப்பட்டது என்ற கருப்பு கல்வெட்டு இப்போதும் உள்ளது.)
ஊர் நன்மைக்காக அவர்கள் செய்த அந்த தியாகம் சிதைக்கப்பட்டுள்ளது .இந்த நிகழ்பட தொகுப்பை பார்க்கும் போது கூச்சலும் குழப்பமும், கைக்கலப்பும் , பரபரப்பும், பதட்டமும் தான் தெரிகிறது.
உருப்படியான .ஊருக்கு தேவையான காரியங்கள் எதுவும் நடக்காது என்றே தெரிகிறது.இவற்றை பார்க்கும் போது மிகுந்த மன வேதனை அளிக்கிறது.
2. மொத்தத்தில் இது ஓர் கசப்பான அனுபவமே...! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[02 September 2012] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21744
நகர்மன்றத்தை நாறடித்து நாசமாக்கத் துனிந்து விட்டது ஒரு கூட்டம்! ஏன் இந்த வெறி? யாருக்காக இந்த ஆர்ப்பரிப்பு? எதற்காக இந்தக் கொந்தளிப்பு? வெளிநடப்பு செய்தபின் மீண்டும் மீண்டும் வந்து வெளிநடப்பு செய்யாத ஒரு உறுப்பினரை உருட்டுவதும், மிரட்டுவதும், கைகளை ஓங்குவதும் ஏன்?
தலைவியை பேசக்கூட விடாமல் எடுத்த எடுப்பிலேயே வெளிநடப்பு செய்வதும், மற்ற உறுப்பினர்களையும் வெளியேறும்படி அழைப்பதும், வெளிநாட்டிலிருந்து பார்வையாளர்கள் வந்திருக்கின்றார்கள் என அடிக்கடி உஷார் படுத்துவதும், இதில் இரண்டு பெண் உறுப்பினர்கள் நியாயமாக நடந்துகொள்ள குழாயடிச் சண்டைபோல் ஒரு பெண்மணி ஒரு ஆண் உறுப்பினரிடம் கைநீட்டி வசை மொழிபாடுவதும், கண்ணியமான துணைத் தலைவர் பதவி வகிப்பவர் மிரட்டல், உருட்டல், என நடந்து கொள்வதும், சகிக்க முடியாமல் தலைவி போலீசை அழையுங்கள் என்றதும் அவருக்கெதிரே வாய்க்கு வந்தமாதிரி பேசி, வறட்டுச் சவுடால்(சவால்) விடுவதும், போடா, வாடா,வந்தான்,வரத்தான் அப்பப்பப்பா....! கேட்டுக் கேட்டு செவி சிவந்து போயிற்று! பார்த்துப் பார்த்துக் கண் இருட்டிப் போயிற்று!
இவர்கள் ஒரு நெட்வர்க்காக செயல்பட்டுவருவது தெள்ளத் தெளிவாகப் புலப்படுகின்றது.
சேர்மன் அவர்கள் முறையாக கூட்டத்தில் விவாதித்து தீர்மானம் போட்டு நிறைவேற்றிய வீடியோ ரிக்கார்டிங் செய்யப்பட்டால் எங்கே தமது குட்டு வெளிப்பட்டுவிடுமோ? எனும் அச்சத்தால் அரண்டுபோயி ஆர்ப்பாடம் செய்யும் உறுப்பினர்களின் இருண்ட முகமும், இறுகிய மனமும் கண்டு மக்கள் காரி உமிழ்வார்கள் என்பது உறுதி!
எத்தனியோ மக்கள் பிரச்சனைகள் தீர்க்கப்படாத நிலையில் தத்தம் சுயநலத்திற்காகவும், பிறரது மகிழ்ச்சிக்காகவும் பொன்னான நேரத்தையும்,காலத்தையும் காவு கொடுத்து நகர்மன்றத்தை நகர விடாமல் நரித்தனம் பண்ணுவோரது உண்மை முகம் மக்கள் மன்றத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது. பார்வையாளர்களாக வீற்றிருந்த வெளிநாடு வாழ் காயலருக்கு மொத்தத்தில் இது ஓர் கசப்பான அனுபவமாகவே இருந்திருக்கும்!
- ராபியா மணாளன்.
3. About Mr Samy speach posted byRiyath (HongKong)[03 September 2012] IP: 171.*.*.* United States | Comment Reference Number: 21749
Mr Samy forget that he is member of the management and complaining himself to the Media saying he never seen worst council than kayal.
Mr Samy says chairman was not consult with him before publishing notice, did he consult with chairman before promising people to solve water problem in 2 days?
சாளை-முஹம்மது மெய்தீன் அவர்களின் கருத்தைப் பார்த்தவுடன் சுமார் இருபது முறை வீடியோக் காட்சிகளை மிக கவனத்தோடு பார்த்தேன். கடைசி நேரத்தில் தான் அந்த உறுப்பினர் உதித்த வாசகங்கள் காதில் விழுந்தது. கொதித்துப் போய் விட்டேன்.
சேர்மன் ஒரு பெண் என்றுகூடப் பார்க்காமல் நாகூசும் மிகக் கீழ்த்தரமான வார்த்தைகளை வெளிநாடு வாழ் காயலரோடு ஒப்பிட்டு பேசியதை சகிக்கவே இயலாது. நானும் வெளிநாடு வாழ் காயலன் என்பதால் இதை வன்மையாகக் கண்டிக்கின்றேன். எங்கள் வார்டுக்கு உறுப்பினராகத் ( தெரு வாசி என்பதால்) தேர்ந்தெடுக்க வாக்களித்த என் தாய்,தந்தை,தங்கைமார் அனைவரது சார்பிலும் வேதனைப்படுகின்றேன். வெட்கப்படுகின்றேன்.
அட்மின் அவர்களே! அல்லாஹ் மீது ஆணையாக நான் யாருக்கும் துதிபாடவில்லை! அந்த வல்லோன் ஒருவனைத் தான் துதிப்போம்! துதியும் பாடுவோம்! தனி நபர் விமர்சனம் என்று எடிட் அல்லது கத்திரி போட்டு புண்ணாகிக் கிடக்கும் எமது நெஞ்சைப் பிளந்து விட வேண்டாம்! அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ் தகுந்த பாடம் புகட்டுவான்! ஹஸ்பி அல்லாஹு நிஃமல் வக்கீல் வ நிஃமல் மொலா வ நிஃமல் நஸீர்.
-ராபியா மணாளன்.
5. எச்சரிக்கை எச்சரிக்கை posted byAbdul Razak (Chennai)[03 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21756
அஸ்ஸலாமு அலைக்கும்,
இந்த newsai படித்தவுடன் அது தொடர்பான video-க்களை பார்த்தவுடன் பல சிந்தனைகள் என் மனதில் ,
1)மார்க்கமறிந்த ஒரு ஊரில் இப்படியா ? நிச்சயம் இது சம்மந்தமாக மார்க்கம் என்ன சொல்கிறது
என்று அலசி ஆராய்ந்து ஒரு கட்டுரை போல் கமெண்ட்ஸ் கொடுக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் , உடனே search பண்ண ஆரம்பித்தேன் , சில நேரத்தில் அதற்கு ஒரு முற்றுபுள்ளி , நாம் ஒன்றும் மார்க்க நுணுக்கங்கள் தெரிந்த ஆலிம் இல்லையே .. கப் சிப் ..
2)ஊரில் உள்ள மார்க்க பண்டிதர்கள் இது சம்மந்தமாக அவர்களுக்கு ஏதும் கருத்து சொல்வது
பர்ளா(Farl) என்று search பண்ண ஆரம்பித்தேன் , பிறகும் கப் சிப் (first பதிலே இதற்கும் காரணம் )..
3)சரி , இதெல்லாம் அரசியல் விஷயம் , நமக்கெதுக்கு வம்பு என்று வேறு வேலையை பார்க்கலாம்
என்று ஒதுங்கலாம் என்று நினைக்கும் போது ஒரு உறுத்தல் , "நீ இப்படிப்பட்ட செயல் ஒன்றை
பார்த்தாயே , உனக்கு மார்க்கம் sonna 2-ஆவது வழி (வாயால் தடுப்பது -கமெண்ட்ஸ் section)"
open ஆக இருந்ததே , ஏன் உனக்கு தெரிந்ததை சொல்லவில்லை என்று என்னிடம் இறைவன் கேட்டால் ? எனவே , ஒன்று முடிவு செய்தேன் இந்த ஒரு செய்திக்கு மட்டும் நமக்கு தெரிந்ததை சொல்வோம் , அதன் இது போன்ற செய்திகளை ஓபன் பண்ணவே வேண்டாம் , யா அல்லாஹ் இதை பயனுள்ளதாக ஆக்கி வை என்று இறைவனிடம் துஆ செய்துவிட்டு என் கருத்துக்களை பதிக்கிறேன் .
என் கருத்து : 3 விஷயங்கள்
உமர் (ரலி ) அவர்கள் , (ஒரு பெரிய சாம்ராஜ்ஜியதயே ,அல்ஹம்துலில்லாஹ் , ஆட்சி செய்தவர்) உமரின் ஆட்சி இந்தியாவுக்கு வேண்டுமென்று காந்தியே சொல்லுமளவுக்கு மாற்று இறை கொள்கையிலிருப்பவர்களால் கூட பாராட்டப்பட்டவர் ,
Point# 1) அவர்கள் , ஏதாவது முக்கியமான ஒரு முடிவெடுக்க மஷூரா/அவையை கூட்டினால் நன்கு (குரானையும் / மார்க்கத்தையும் ) கற்றறிந்த சஹாபாக்களை/அறிஞர்களை எப்போதுமே பக்கத்தில் வைத்து கொள்வார்களாம்
Point# 2) அவர்கள் , ஏதாவது முக்கியமான ஒரு முடிவெடுக்க மஷூரா/அவையை கூட்டினால் நன்கு (குரானையும் / மார்க்கத்தையும் ) கற்றறிந்த சஹாபாக்களை/அறிஞர்களை எப்போதுமே பக்கத்தில் வைத்து கொள்வார்களாம்
Point# 3) அவர்கள் , ஏதாவது முக்கியமான ஒரு முடிவெடுக்க மஷூரா/அவையை கூட்டினால் நன்கு (குரானையும் / மார்க்கத்தையும் ) கற்றறிந்த சஹாபாக்களை/அறிஞர்களை எப்போதுமே பக்கத்தில் வைத்து கொள்வார்களாம்
6. Re:... posted byM.S. Shah Jahan (Kayalpatnam)[03 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21759
Town Council meeting.
I attended the Kayal Town Council meeting on 30/08/2012. There is no word to describe the hooliganism taken place there. Despite of efforts from overseas well-wishers, a large segment deliberately walked out on flimsy reasons. It was understood their intention was to disrupt and disturb the meeting.
Language used there was derogatory. A member linked overseas Kayalites and internet provider with the lady president in a defaming manner which provoked anger from the observers that almost led to a scuffle.
So many unnecessary questions were raised, leaving the much needed topic of shortage of water supply, power etc. The roads are littered with dirt and garbage is scattered all over. During my three week stay, I may say, our road was never swept. Poor plight of the town.
The Town Council should function at any cost. People's representative must realize that they are subject to some rules that govern their behavior. If the Council is not allowed to function , why should the members be paid their salary? No work no pay rule should apply to them too.
I suggest the overseas Kayalites must take some interest to correct the situation. Otherwise the town will be doomed.
M. S. Shah Jahan
President, Kawalanka
Colombo. Sri Lanka.
7. பிங்கி.. பிங்கி.. பாங்கி posted byசாளை S.I. ஜியாவுத்தீன் (அல்கோபார்)[03 September 2012] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21764
நடைபெற்றுக்கொண்டு இருக்கும் நிகழ்வுகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று "ஈகோ".
பிங்கி.. பிங்கி.. பாங்கி.. என்று குழந்தைக்கு பாட்டு சொல்லிக்கொடுத்தவர், நகராட்சி தலைவி ஆவதா..!
இந்த தலைவி "ஐக்கிய பேரவை" உடைய ஆதரவு தலைவியாக இருந்தாலோ, அல்லது ஏதாவது ஒரு கட்சியுடைய ஆதரவு தலைவியாக இருந்தாலோ அல்லது பண/படை பலமிக்க குடும்பத்து ஆளாக இருந்தாலோ.. இந்த மாதிரியான நிகழ்வுகள் நடந்து இருக்காது.
அட்லீஸ்ட்.. பொதுக்கூட்டம் போட்டால் மூன்று நபர்கள் இருப்பார்களே, அந்த கட்சியுடைய ஆளாக தலைவி இருந்து இருந்தால், இந்த மாதிரியான மிரட்டல்கள், உரசல்கள், தகாத வார்த்தைகள் எல்லாம் வந்து இருக்குமா. வந்து இருந்தால் அந்த கட்சிக்காரர்கள் சும்மா இருந்து இருப்பார்களா.? ஏதோ நாதியற்று இருப்பவர், என்ன செய்தாலும் யாரும் கேட்க மாட்டார்கள் என்று நினைப்பு.
** புரிந்து கொள்ளுங்கள், மக்களால் தெரிவு செய்யப்பட தலைவி இவர்கள். மக்கள் அணைத்து நிகழ்வுகளையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள் **
* யாரிடம் கேட்டு இதை செய்தீர்கள், யாரிடம் கேட்டு அதை செய்தீர்கள், யாரிடம் கேட்டு தண்ணீரை டெஸ்டுக்கு அனுப்புனீங்க, அங்கு ஏன் உட்கார்ந்தீர்கள், இங்கு ஏன் எழுந்து நின்றீர்கள்.. எங்களின் ஆலோசனையை ஏன் கேட்க வில்லை.. அப்பப்பா.. புளித்து போன இந்த விசயங்களை திரும்ப.. திரும்ப.. சொல்லுறீங்க, திரும்ப.. திரும்ப சொல்லுறீங்க..!
• அனுபவம் இல்லாத தலைவி, நிர்வாகத்தை நடத்த தெரியாத தலைவி - இது ஐயா சாமி உடைய பேட்டி.
** ஐயா.. யாரும் அனுபவத்தோட எந்த வேளைக்கும் வருவது இல்லை. நீங்கள் BHEL நிறுவனத்தில் சேர்ந்த போது அனுபவத்தோடா சேர்ந்தீர்கள். பலருடைய ஒத்துழைப்புடன் தானே இத்தனை காலம் அங்கு சிறப்பாக பணிபுரிந்தீர்கள். ஆனால் நகராட்சியில் யாரும் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டர்கள். பேட்டியோ.. "நிர்வாகத்தை நடத்த தெரியாத தலைவி". சரிதான் ஐயா.. சரிதான்..
வீடியோவை பார்க்க பார்க்க டென்ஷன் தான் வருகிறது. அருவருப்பு.. என்னத்தை கமெண்ட்ஸ் எழுத.
பேசாமல் பிங்கி.. பிங்கி.. பாங்கி என்று பாடிவிட்டு போய்விடலாம்.
8. வீடியோ பதிவை உடனே நீக்கவும்.! posted byM.S.Kaja Mahlari1 (Singapore)[03 September 2012] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 21767
(கூட்டத்தின்போது பதிவு செய்யப்பட்ட அசைபட (வீடியோ) காட்சியைக் காண...............)
முதன்முதலில் இந்த வீடியோ பதிவை யூடூபில் இருந்து நீக்கி விடுங்கள். இல்லாவிட்டால் காயல் நகரின் கண்ணியத்தை, கலாட்சாரத்தை காற்றில் பறக்க விடுகிறீர்கள் என்பது நிரூபணமாகிவிடும்.
இதனை இன்டர்நெட்டில் பதிவு செய்ததை "மிகவும், வன்மையாக கண்டிக்கிறேன். தயவு செய்து நமதூர் கண்ணியத்தை இப்படி பலரும் பார்த்து கேவலப்படுத்துவதை உடனே கைவிடுங்கள்.
பொதுநலம் என்ற பெயரில் "தனது சுயநலம்" அரசியல் நோக்கத்தில் செயல்பட்டு, லஞ்சம், ஊழல், உருட்டல், மிரட்டல், அநியாயம், அட்டூழியம் புரியும் நகர்மன்ற (இந்த நடவடிக்கை உள்ளவர்கள் மாத்திம்) உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் உடனே மானம், மரியாதை, ரோசம் உள்ளவர்கள் ராஜினாமா செய்து விட்டு நகர்மன்ரத்தை நியாயமாக நடத்தும் தகுதியுள்ள நபர்களுக்கு வாய்ப்பளியுங்கள்.
நமதூர் வலிமார்கள், ஆலிம்கள், ஹாபிழ்கள், கல்விமான்கள், கண்ணியமானவர்கள், தனவந்தர்கள், வியாபாரிகள் உலகம் முழுதும் நிறைந்து வாழும் நல்லோர்கள் என பெயர் பற்ற இந்நகரின் கண்ணியத்தை காப்பதும், அவ்விதம் செயல்படுவதும் நம் அனைவரின் மீதிலும் கடமை என உணருங்கள்.
உண்மையிலேயே இந்த வீடியோ காட்சிகள் மிகவும் வருத்தத்தை அளிப்பதுடன் நமது கலாச்சாரம் இவ்வாறெல்லாம் சீரளிக்கப்படுகிறதே என்று மிகவும் வருத்தம் ஏற்படுகிறது.!
ஆகவே ! மீண்டும் ஒருமுறை இந்த வீடியோ பதிவு செய்ததை மிகவும் வன்மையாக கண்டிப்பதுடன் ,அதனை அறவே எந்த சைட்டிலும் இடம்பெறாமல் உடனே நீக்கி விடுங்கள் என அவசியம் கேட்டுக்க் கொள்கிறேன்.
எல்லாம் வல்ல இறைவன் நமதூரின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவைகளை காப்பதற்கும், இதுபோன்ற செயல்பாடுகள் இனி வருங்காலத்தில் இடம்பெறாமல் இருக்க நல்லருள் புரியவேண்டும் என அவனிடத்திலே இருகரமேந்தி இறைஞ்சிகிறேன் ! ஆமீன்! வஸ்ஸலாம். !
9. Re:... posted byMuhammad Ibrahim (Guangzhou)[03 September 2012] IP: 183.*.*.* China | Comment Reference Number: 21768
கொஞ்ச கால முன் நடந்த ஒரு சட்ட சபை கூட்டத்தில் அம்மாவுக்கும் விஜய காந்திற்கும் எற்பட்ட சலசலப்புக்கு நம்ம ஆளு புல்லா இருந்ததா மீடியா நியூஸ்ல பார்த்த நியாபகம் அப்போ இது!
சில பேரு நகராச்சி தேர்தலுக்கு முன்னாடி நாக்க மக்கள் தொண்டேன்னு சொனாங்கோ இப்போ என்னடான்டா என்னோ சே ரும், துண்டும் தான் பெரிசுன்னு சொல்லுற மாதிர தெறியுது.
11. காஜா ஆலிம் அவர்களுக்கு! posted byFirdous (Colombo)[03 September 2012] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 21778
உண்மையில் பார்பதற்கு மிகவும் கடினமாக உள்ளது. அதிலும் பெண் உறுப்பினர் நடந்துகொண்ட விதம் மிகுந்த வேதனையை அளித்தது. இம்மாதிரி நடக்கும் நிகழ்வுகளை பார்க்க கூடாது என்பதர்க்காதான் வீடியோ பதிவு வேண்டாம் என்று நினகிரர்களோ நமது கண்ணியத்திற்குரிய (?) கவுன்சிலர்கள்?
நான் பலமுறை கருத்தை பதிவு செய்துள்ளேன். மீண்டும் கூற விளைகிறேன் "என்று பெருபான்மையான கவுன்சிலர்கள் பணம் வாங்கிக்கொண்டு துணை தலைவர் தேர்தலில் ஒட்டு போட்டார்களோ, அன்றே நகர்மன்றம் நாறிவிட்டது. என்னதான் பன்னீரில் குளிபாட்டினாலும், அவர்களது இயல்பை மாற்ற இயலாது" கல்பை மாற்ரக்கூடியவன் இறைவன் ஒருவனே! வல்ல இறைவனிடம் நாம் இறைஞ்சுவோம்.
12. Re:... posted byRilwan (Michigan)[03 September 2012] IP: 99.*.*.* United States | Comment Reference Number: 21781
I tried to refrain from posting comments on about Panchayat, but after watching the despicable behaviors video, can't stay patient any more.
Send this video to the collector and take necessary action.
However costly it may be, please take necessary steps to broadcast the panchayat activities live. People should know who misbehave and it could be a learning opportunity so that people will know more about whom they elect and who should they vote for the next term.
We despised the era of scandalous "kayals" who made a living out of political clouts when we were young. We thought those days would be gone as we grow and the next generation politicians in the town would behave responsibly, but it seems, we always select and elect devoid and thuggish representatives. May be it is convinient for those who want to keep kayalpatnam society under their thumb.
Those who claim to represent kayal must know one thing. Kayalpatnam don't need your freebies. The people needs dignity and self respect. You cannot put yourself above rest of the kayalites and show yourself like a ruling class. If you are for the people of kayalpatnam, you have to stand with what is humanly right. Do not assume your money is that making kayalpatnam flourish. For all your charities you should be asking only Almighty for any return and not from the people of kayalpatnam. Serving people should be of no expecations.
13. Re:... posted byFazul Rahuman (Jeddah) (saudiarabia)[03 September 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21783
உண்மையில் பார்பதற்கு மிகவும் கடினமாக உள்ளது. அதிலும் பெண் உறுப்பினர் நடந்துகொண்ட விதம் மிகுந்த வேதனையை அளித்தது. இம்மாதிரி நடக்கும் நிகழ்வுகளை பார்க்க கூடாது என்பதர்க்காதான் வீடியோ பதிவு வேண்டாம் என்று நினகிரர்களோ நமது கண்ணியத்திற்குரிய (?) கவுன்சிலர்கள்?
நான் பலமுறை கருத்தை பதிவு செய்துள்ளேன். மீண்டும் கூற விளைகிறேன் "என்று பெருபான்மையான கவுன்சிலர்கள் பணம் வாங்கிக்கொண்டு துணை தலைவர் தேர்தலில் ஒட்டு போட்டார்களோ, அன்றே நகர்மன்றம் நாறிவிட்டது. என்னதான் பன்னீரில் குளிபாட்டினாலும், அவர்களது இயல்பை மாற்ற இயலாது" கல்பை மாற்ரக்கூடியவன் இறைவன் ஒருவனே! வல்ல இறைவனிடம் நாம் இறைஞ்சுவோம்.
14. Re:...அரசியல் சாக்கடை posted bys a m mohideen thambi (jeddah)[03 September 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21785
அஸ்ஸலாமு அழைக்கும்
30.08.2012 அன்று நடந்த காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டம் (வீடியோ) தொகுப்பு! கண்டேன் அரசியல் சாக்கடை என்பது பழமொழி அதில் நம்மஊர் விதிவிலக்கல்ல மற்றும் தலைவியிடமும் தவறு இருக்கலாம். உறு்பபினர்களிடமும் தவறு இருக்கலாம். அவற்றை முறையாக பேசித் தீர்க்க வேண்டுமேயொழிய கூட்டத்தை இரத்து செய்து வெளிநடப்பு செய்வது தவறு. காயல் நகரமோ வீதியெங்கும் குப்பையும் - கூளமுமாக, பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்கிறது. தண்ணீர் பிரச்சினை தலையாய பிரச்சினையாக உள்ளது
இன்னும் பலப்பல உள்ளன. இவற்றைப் பேசுவதை விட்டுவிட்டு ஒருவரையொருவர் ஏசுவதற்காகவா மக்கள் இவர்களைத் தேர்ந்தெடுத்தனர். வேதனைக்குப் பஞ்சமில்லை.
வீடியோ கேமராவுடன் பலர் இங்கு இருந்தனர். புகைப்படத்தை பார்க்கும்போது நடப்பது நகர்மன்றகூட்டமா அல்லது மீன் சந்தையா என்ற ஐயப்பாடாக இருக்கிறது.. உறுப்பினர்கள் யார் யார் , பார்வையாளர்கள் யார் யார் என்ற பேதமில்லாமல் கலந்து இருக்கின்றனர் .இதற்கு மத்தியில் மீடியாக்களின் தள்ளு முள்ளு வேறு....
மீடியாக்களின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதை காண முடிகிறது. எல்லாவற்றிற்கும் ஒரு எல்லைதான். மீடியாக்களின் ஆதிக்கத்தை ஒரு வரைமுறை படுத்தவேண்டும் ஆனால் இது நடக்க சாத்தியம் இல்லை ஆகையால் இந்த நகர்மன்றதை கலைத்து விட்டு புதிதாக தேர்தல் நடத்த நகரமன்ற ஆணையர் பரிந்துரை செய்ய சட்டத்தில் இடமிருக்கிறதா என்று பார்த்து ஆவன செய்யுங்கள்.
இதைதான் மக்கள் இப்போது எதிர்பார்க்கிறார்கள்.
ஆகையால் இந்த நகர்மன்றத்தை கலைத்து விடுவது தான் சிறந்தது.
15. நமது வரி பணம் வீன்போகிறது... உறுப்பினர்களுக்கு... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (KAYALPATNAM )[03 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21789
நான் கூட்டம் நடக்கும் என்ற நம்பிக்கையில் நகர்மன்றம் காண சென்று இருந்தேன்.. ஆனால் கூட்டம் நடக்காமலே.. உறுபினர்களுக்கு எனது வரி பணம் வீணானது..! விரயமானது..
வெளிநடப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே சில பெரும்பான்மை உறுப்பினர்கள் திட்டமிட்டு வந்தது கூட்ட ஆரம்பத்திலேயே இவர்களின் நடவடிக்கைகளில் உணர முடிந்தன...
முதலில் மாதந்திர கூட்ட படி (ஊதியம்) ரூபாய் 600 வீதம் 18 உறுப்பினர்களும் ரூபாய் - 10,800 நமது வரி பணத்தை நமக்கு நல்ல திட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றமலேயே பணத்தை பெற்று கொண்டார்கள்... நமது வரி பணம் இந்த மாதிரி நமக்கு புரோஜனம் (நன்மை) இல்லாமல் சில உறுப்பினர்கள் வசம் மாதம் மாதம் செல்வது வேதனையாக உள்ளது...!
செய்யாத வேலைக்கு கூலி பெற்று கொள்வது நியாயமா...?
கூட்டத்தில் நகருக்கு குடி தண்ணீர், குப்பை அள்ளுதல், மின் விளக்கு, சாலை வசதிகள், மற்றும் எத்தனையோ தேவைகள் மிக முக்கியமானதாக இருக்கும் பட்சத்தில்... மீடியா வரகூடாது... ! வர வேண்டும்...! என்ற கேள்வி... பதில்... த்தூ.. காரசாரமான விவாதம்.. கைகலப்பு முயற்சிகள்... மிக.. மிக..கேவலமான வார்த்தைகள் வெளிநாட்டு வாழ் காயலர்களை நோக்கி ஒரு உறுப்பினர் உங்களுக்கு நகரமன்ற தலைவி [edited] என்று நாகூசாமல் பேசுகிறார்... ஓ... என்று கூச்சல் இடுகிறார்... த்தூ... மேலும் மிக அருவருப்பான வார்த்தைகள் பேசி கூட்டம் நடைபெறாமலே களைந்து சென்றது... த்தூ... த்தூ...
கூடிய விரைவில் நகர்மன்றம் கலைக்க படவேண்டும்... பார்வையாளர்களின் வெறுப்பை கோபத்தை இந்த உறுப்பினர்களின் சில பேர்கள் சம்பாதித்து கொண்டார்கள்...
நமது நகர்மன்றதிர்க்கு வரி கட்டும் காயல் சகோதரர்களே... வெளிநாட்டு வாழ் காயல் நடுநிலைவாதிகளே...! இது இப்படியே போனால் நாளை நமது நகர்மன்றம் பண வெறி..! கொலை வெறி..! பிடித்த போரிக்கிகளின் கூடாரமாக மாறுவது சந்தேகத்திற்கு வேறு கருத்து இல்லை...
மரியாதைக்குரிய காவாலங்காவின் தலைவர் ஜனாப் சாஜகான் துரை அவர்களின் என் பார்வையில் நகர்மன்றம் என்ற கட்டுரை வரிகள் வாசிக்கின்ற ஒவ்வொருவரையும் நியாயமாகவும் நடுநிலையாகவும் சிந்திக்க வைக்கும் என்று நம்புகிறேன்.. அது உண்மையாக நடந்த நடப்புகளை கட்டுரையாக வரைதுள்ளர்... (நான் இன்று வரை நகரமன்ற மக்கள் செல்வாக்கு தலைவி திருமதி ஆபிதா அவர்களின் ஆதரவாளன்தான் நான் ஒப்பு கொன்கிறேன்)
கடந்த நகரமன்ற பணபலம் படைத்த, நல்ல குணம் கொண்ட கொடையாளி தலைவருக்கே மிக பெரிய வேதனை கொடுக்க பட்டது... நெருக்கடிகள்... அசிங்கமான வார்த்தைகள் அதனால் அவர் தனது பதவியை ராஜனாமா செய்யும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டார்... இந்த தலைவிக்கும் இப்போது நெருக்கடி அசிங்கமான வார்த்தைகள் ஆரம்பம்...
ஆகவே... நகர்மன்றம் கலைக்க பட மாண்புமிகு முதல் அமைச்சருக்கு தனி அறைக்கு நமதூரில் இருந்து நடுநிலைவாதிகள் ஈ மெயில் மற்றும் தந்திகள் மூலம் அனுப்பி கொண்டு இருப்பதாக செய்திகள் அறிந்தேன்...
கூடிய விரைவில் நமது நகர்மன்றம் மொத்தமாக எந்த தேதியுலும் கலைக்க படலாம்...
16. Re:... posted bysulaiman (abudhabi)[03 September 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21790
அஸ்ஸலாமு அழைக்கும்,
சகோதரி ஆபிதா அவர்களுக்கு தெளிவான சிந்தனையும்,நிர்வாக திறமையும் இல்லை. இவரின் இந்த தலைமைத்துவம் மிகவும் வருத்தபட கூடியதாக இருக்கிறது.
சகோதரி ஆபிதா அவர்களுக்கு வெளிபடையான நிர்வாகம் என்றால் என்ன என்றே தெரியவில்லை. நகர்மன்ற நிகழ்வுகளை வீடியோ பதிவு செய்து நகரின் கேபிள் டீவீ இல் ஓடவிடுவதுதான் இவரின் வெளிபடையான நிர்வாகத்துக்கு அர்த்தம் என்றால். இதை விட நமது ஊரு கடற்கரை திறந்த வெளியில் அஸர் நேரத்தில் நகாராச்சி கூட்டங்களை நடத்தட்டும். வீடியோ பதிவு மற்ற பண வீண் விரையமாவது மிச்சப்படும்.
பத்திரிகை காரர்கள் கேட்கிற கேள்விக்கு சரியான பதிலை சொல்லமுடியாமல் திசைதிருப்புகிற பதிலையும், குழப்பமான பதிலைத்தான் சொல்லுகிறார் தலைவி அவர்கள். அரசு கேபிள் டீ வீ யின் ரூல்ஸ் கூட தெரியாமல் தலைகுனிகிறார் தலைவி அவர்கள்.
சகோதரி ஆபிதா அவர்கள் தனது தன்னிச்சையான முடிவு மற்றும் கவுன்சிலர்களை கலந்தாலோசிகாமலும் தன்னை சுற்றி இருப்பவர்களால் இயக்கபடுகிறார். வாழ்க இவரின் வெளிபடையான நிர்வாகம் !!!!!!
காலம் காலமாக கட்டிகாத்த நமது நகாராச்சி மன்ற தலைமைத்துவம். சரியான சிந்தனை, நிர்வாக திறமை இன்மை, வழிகாட்டுதல் இல்லாமல் நாற்றம் எடுக்கிறது. எப்பொழுது இதுக்கு விடிவு ஏற்றப்படும். மனம் வருந்துகிறது.
இந்த தருணத்தில் நமது ஊரின் சமுதாயத்தில் கண்ணியமும், அனுபவமும் வாய்ந்த வயதில் மூத்த பெரியவர்களை எண்ணிப்பர்க்கிறேன்.
17. எங்கே செல்லும் இந்த பாதை யார் தான் இதை அறிவாரோ posted byS.A.MUHAMMAD ALI (Dubai)[03 September 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21798
மாதமொரு முறை கூட்டம், மக்கள் மனதில் ஏமாற்றம். அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவார்கள் என்று பார்த்தால், அடிதடி நடத்தி கொண்டு இருக்கிறார்கள். உலகெங்கும் பறந்து விரிந்து சொந்த பந்தங்களை பிரிந்து பணி செய்யும் நம் மக்கள் ஊருக்கு ஒரு நற்பணி மன்றம் வைத்து உதவிகள் பல செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இங்கே நடக்கும் காட்சிகளை பார்த்தால் முதலில் இதற்கு தான் அணைத்து உலக காயல் நல மன்றங்களும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
தண்ணீர் இல்லாமல் கிணற்று தவளைகள் கூட கதறுவதில்லை. ஆனால் இங்கே இவர்கள் போடும் கூப்பாடு இந்த நகராட்சி மன்றம் தேவைதானா என்று கேட்க தோன்றுகிறது.
தண்ணீர் நீ எங்கே?: அங்கே அண்டை மாநிலத்தார் அணைகட்டி தடுக்கிறார்கள். நடுவில் யாரோ திருடுகிறார்கள். பருவத்தில் நீ வானிலிருந்தும் வராது ஏமாற்றினாய் இங்கே இவர்கள் நடத்தும் நகராட்சியை பார்த்து எங்கள் கண்ணில் இருந்து நீ மழையாய் வருகிறாயே. இது என்ன நியாயம்.
நகர்மன்ற கூட்ட நிகழ்வுகளை வீடியோவில் பார்த்தேன். மிகவும் வருந்ததக்கது, வேதனைக்குரியது. நகரமன்ற உறுப்பினர்கள் ஏன் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறார்கள்? நமதூர் பஞ்சாயத்தை மரியாதைக்குரிய MKT அவர்கள், LK மாமா, அனுசுத்தீன் ஹாஜி,பாவலர் அப்பா,விளக்கு மாமா போன்ற பெரியவர்கள் தலைமை வகித்தார்கள். அப்போதெல்லாம் இந்த மாதிரியான வருத்தப்படக்கூடிய நிகழ்சிகள் எதுவும் நடந்ததாக தெரியவில்லை. இப்பொழுது நகரமன்ற தலைவர் பெண் என்பதால் இவ்வாறெல்லாம் நடக்கிறதோ என்ற ஐயம் எனக்கு எழுகிறது. நமது நகரமன்ற உறுப்பினர்கள் நல்ல குடும்பத்தை சார்ந்தவர்கள். நமதூரின் கண்ணியமும், கட்டுக்கோப்பும் அவர்களுக்கு நன்றாகவே புரியும். சரி, நடந்தது நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பது நல்லவையாக நடக்கட்டும். அல்லாஹ் போதுமானவன்.
ஐக்கிய பேரவை இந்த விஷயத்தில் ஏன் மவுனமாக இருக்கிறது? நகர்மன்றத்தில் ஒரு பிரச்னை என்றால் ஐக்கிய பேரவைதானே அந்த பிரச்சனையை தீர்த்து வைக்கவேண்டும். ஆகவே, ஐக்கிய பேரவை காலம் தாழ்த்தாமல் நகரமன்ற தலைவர் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்து பேசி சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்தவேண்டும். இன்னும் மவுனமாக இருந்தால் ஐக்கிய பேரவையின் மீது நம் மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
20. Re:...முத்தான மூன்றாவது முறையும் மாநகராட்சி முடக்கம் . posted bykalava aboobacker (Yanbu (KSA))[04 September 2012] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21820
முத்தான மூன்றாவது முறையும் மாநகராட்சி முடக்கம் .
வீர வசனம் பேசி உறுப்பினர்கள் வெளிநடப்பு.
இவ் வேதனை செய்திகளுக்கு ஒரு வடிகாலே வராதா?
ஒரு விடிவு காலமே பிறக்காதா?
இந்த அட்டூழிய அத்து மீறல்களும்,அதைதட்டி கேட்க
ஆள் இல்லை என்ற இறுமாப்பும் இவர்களுக்கு எப்படி வந்தது?
இவர்களின் பக்கபலமாக பெரிய சக்திகளின் பினாமிகள் பம்பரம்போல் சுழன்று தேடிசென்று திருப்தி படுத்துகிறார்கள் என்ற தைரியம் தானே!
ஊரை ஒற்றுமைபடுத்தவும் ,ஊர் மக்கள் நலனுக்காகவும் நாம் நினைத்துபார்க்க முடியாத அளவிற்கு பொருள் செல்வத்தை வாரி வழங்கிய வள்ளல்கள் வாழ்ந்து மறைந்த (இன்றும் நம் மனசாட்சியில் வாழ்ந்து கொண்டிருக்கும்) வரலாற்று புகழ் மணக்கும் புண்ணிய ஊர்தான் நம் காயல்பதி!
இப்புண்ணிய பூமியில் இன்றும் சிலர் நமக்கிடையே பிளவை ஏற்படுத்தி,ஒற்றுமைக்காக உழைக்க முயற்சிப்பவர்களை ஓரம் கட்டி,அவர்களெல்லாம் அந்த அணி,இந்த அணி என்று நம்மை பிரித்தாளும் கூட்டம் கூத்தாடி கொண்டாடி கொண்டிருப்பதற்கு காரணம் என்ன?
அவர்களுக்கு அவ்வப்போது அகம்மகிழ மடியில் விழும் மாணியம் தான். தீர்க்கமான சிந்தனை திறனாலும்,தளராத முயற்சியாலும் தேடிபெற்ற செல்வத்தை இப்படி சிதறடிக்கிறீர்களே,சிறிது கனமாவது சிந்தித்தீர்களா?
இது நமக்குள்ள மானப்பிரச்சனை,இவர்களெல்லாம் நம்மை எதிற்பதா? இரண்டில் ஒன்று பார்த்து விட வேண்டியதுதான் என்ற வெறுப்புணர்வை உங்கள் உள்ளத்தில் வளரவிட்டு வேடிக்கைபார்க்கும் வீணான கூட்டத்தோடு தயவு செய்து கிஞ்சித்தும் கலந்தும் விடாதீர்கள்,உங்கள் காசை கரியாக்க நீங்களே காரணமாகவும் ஆகி விடாதீர்கள்.
ஊர்மக்களின், ஊர்மக்களால், ஊர்மக்களுக்காக செயல்படும் பேரவை என்று பெருமையாக பல பண்பாளர்களையும்,
பல பெரியவர்களையும் வைத்து ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு. அழகாகவும்,அமைதியாகவும் சென்றுகொண்டிருந்த
அந்த அமைப்பிலும், ஊர் மக்கள் மன ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் சில குறுக்குபுத்தியுடையோர் புகுந்து பெரியோர்களையும், பண்பாளர்களையும் புறம் தள்ளிவிட்டு,
இப்புல்லுரிவிகள் கிழித்த கோட்டை தாண்ட முடியாத அளவிற்கு
அப்பண்பாளர்களும் ,பெரியோரகளும் பேசா ம்டந்தைகளாகவும், பொம்மைகளாகவும் மாறிவிட்ட மாயம் நடந்தேறிவிட்டது.
இந்த போக்கை பலமுறை தட்டிகேட்ட மக்களையும், மீடியாக்களையும் மதிக்காத காரணத்தினால், பொறுத்து, பொறுத்து பார்த்த மக்கள் பொங்கியெழுந்து, தங்கள் தீர்ப்பை மாற்றி எழுதி விட்டார்கள்.
மக்கள் தீர்ப்பை மனிதாபத்தோடு ஏற்க மறுக்கும்
பல பிரிவினை வாதிகளின் வெறித்தனம் இன்னும் வடிந்தபாடில்லை.
எந்த சீமான்களின் சிந்தனைகளையும் தங்கள் பக்கம் திருப்பியாவது, எந்த வியபாரியின் உதவியை பெற்றாவது
ஒருநாள் கூட நகராட்சியை நடைபெறவிடக்கூடாது என்பதுதான்
இக்கூட்டத்தின் கொள்கையும் குறிக்கோளும் ஆகும்!
யாருக்கு நஷ்ட்டம்? யார் பாதிக்கபடுகிறார்கள்? பக்கத்து ஊர்காரர்களெல்லாம் நம்மை கேவலமாக பார்கிறார்களே என்ற தன்மான உணர்வு ஒரு சதவீதமாவது உள்ளத்தில் உறைக்க
வேண்டாமா ?
அதெல்லாம் எங்களுக்கு தெரியாது,. எங்களுக்கு தலைவி தகுதி இழக்கவேண்டும், அப்புண்ணிய எண்ணத்தின் தீவிர தன்மையானவர்கள் எங்களின் தவப்புதல்வர்கள்!
அவர்களின் குதூகலமும், குத்தாட்டமும் இன்றைய சூழ்நிலைகேற்ப இன்றியமையாததே என்று எக்காளமிடுகிறார்கள்!
போரா என்ற நம் புனித மார்க்கத்தின் கலாச்சார செயலை கேலிசெய்து பேசிய உறுப்பினர்கூட இவர்களுக்கு இனிப்பானவர்கள்,
மத நல்லிணக்கத்தை மதிக்கும் மாண்புடையவர் என்று மகுடம் சூட்டி மகிழ்கிறார்கள். இந்த மதி இழந்தோரின் "மிதப்பு கட்டை" கவனமெல்லாம் தலைவியை தொலைத்து கட்டுவதென்ற குறிக்கோள் ஒன்று மட்டும் தான்.
அவர்களின் அகராதியின் ஆத்திசூடி யாதெனில், தலைவியை எதிர்க்கும் எவரும் எங்களின் இறுக்கமான நண்பர்களே!
இது காயல்தானா? அல்லது காயல் போன்ற சாயலா?
அந்த சாயலுக்கும் கூட ஒரு ஒழுக்கம் இருக்கும்.
ஒழுக்கமும், கண்ணியமும் நிறைந்த காயலை சீர்குலைக்க எவனோ ஒருவன் முயன்றால் ........... .
ஆனால் பெற்ற தாய், மற்றும் உற்ற சகோதரனுக்கு துரோகம் செய்வதைப்போல் பிறந்த மண்ணிற்கும், நம் சமூகத்திற்கும் துரோகம் செய்வது கப்ரையும் மறுமையையும் மறந்த ஒருவனின் செயல்.
தவித்த நாயிக்கு தண்ணீர் கொடுத்து சுவர்க்கம் சென்ற பெண்ணும்,
கிடைத்த பேரீத்தம் கனியை இரு துண்டாக பிய்த்து இரு மகளுக்கும் கொடுத்த பொது அந்த செயலே இந்த தாயை நரகிலிருந்து பாதுகாக்க போதும் என்ற நாயக வாக்குகளெல்லாம் நம் காதுகளில் பலமுறை ஒலித்தும் கூட.
சமூகத்திற்கு சேவை செய்து சீரான மறுமையை அமைத்துக்கொள்ளும் மாபெரும் வாய்ப்பு கிடைத்தும் நேர்வழியிலிருந்து மாறிய இந்த சமூகத்தை நினைத்து வருந்துகிறேன்.
யா அல்லாஹ் எங்கள் காயல் மண்ணை கண்ணியத்துடன் காப்பாயாக. ஆமீன்.
22. Re:...முள்ளை முள்ளால்... posted byS.A.C. Salih (Kayalpatnam)[04 September 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 21824
நகராட்சி தலைவி அவர்களே ஆளும் கட்சியில் உடனடியாக இணைவதே ராஜதந்திரம். எக்காரணம் கொண்டும் நீங்கள் ராஜினாமா செய்யாதீர்கள்.
முள்ளை முள்ளால் மட்டுமே எடுக்க முடியும். பண முதலைகளை கூண்டில் அடைக்க இது ஒன்றே தீர்வு. விரைந்து செயல்படுங்கள். உங்களின் உண்மையான சேவை தடையின்றி தொடரட்டும்.
24. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[04 September 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21830
அஸ்ஸலாமு அலைக்கும்
நான் ஏற்கனவே என் மன வேதனையோடு முன்பே எழுதியும் விட்டேன்....... நம் நகர் மன்ற வீடியோ கிளிப்பை பார்த்து நம் மனம் வேதனை பட்டு விட்டது. ஒரு நகர் மன்ற தலைவி பெண் என்றும் பாராமல். நம் நகரமன்ற உறுப்பினர்கள் தம் வாய்க்கு வந்த படி பேசுகிறார்கள். இது நியாயமா ?????
உண்மையில் நம் நகரமன்ற உறுப்பினர்கள் இந்த நகர் மன்றத்தை கண்டிப்பாக செயல்பட விட கூடாது..... என்ற நல்ல எண்ணத்தோடுதான் நகர் மன்றத்துக்கே வந்து உள்ளார்கள் போல் தெரிகிறது. இப்படி பட்ட இவர்கள் எல்லாம் எப்படி தான் நம் ஊருக்கு ( பொது மக்களுக்கு ) நல்லது செய்வார்களாம் ??? ஒன்றுமே நமக்கு புரிய வில்லை ????
கொஞ்ச நேரம் நகர் மன்றத்தை நடத்த விட்டு..... நம் ஊருக்கான நல்ல திட்டங்களை நிறைவேற்றிய பின்பு ..... இவர்கள் தங்களின் பிரச்சனைகளை வைத்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.... ஆனால் இவர்கள் நகர் மன்றம் வந்ததுமே முதலில் தங்களின் மாத படியைதானே வாங்கினார்கள்..... இது மட்டும் சரியா?? ஊர் மக்களுக்கு சேவை செய்யாமல் எப்படி மாத படி வாங்கலாம்???
நம் அருமை சகோதரர் Mr.Kalava.Aboobacker காக்கா அவர்கள் எழுதிய வாசகம் எல்லாம் ....ரொம்ப அருமையான கருத்து. இவருடைய எல்லா கேள்வியுமே நியாயமானது தானே .... இவருடைய இந்த கேள்விக்கு நம்மால் கண்டிப்பாக பதில் கூறவே முடியாது ..... போரா என்ற நம் புனித மார்க்கத்தின் கலாச்சார செயலை கேலிசெய்து பேசிய உறுப்பினர்கூட இவர்களுக்கு இனிப்பானவர்கள்........உண்மைதானே.....
ஓன்று மட்டும் நிச்சயம் ....நம் ஊருக்கு இனிமேல் எந்த ஒரு நல்ல காரியங்களும் கண்டிப்பாக நடக்காது.... என்று தெரிந்து விட்டது. இவர்களிடம் ஒற்றுமை என்பது அரவே கிடையாது. இதில் மீடியா வேறு அளவுக்கு அதிகமாக நம் நகர் மன்றத்துக்குள் உள்ளே புகுந்து விட்டார்கள். இனி குழப்பம்தான் அதிகமாகும். நல்லதோர் தீர்வும் வராது......ஊருக்கு நல்லதும் நடக்காது.......
தலைவியும் சரி & உறுப்பினர்களும் சரி வெளியே நல்ல ஒரு அரங்கில் உட்காந்து நிதானமான முறையில் பேசி. ஒருவருக்கு ...ஒருவர் விட்டு கொடுத்து நல்லதோர் முடிவு எடுத்து செயல் பட்டால் தான் ....நம் ஊர் நகர் மன்றத்துக்கும் சரி / நம் ஊருக்கும் சரி / நம் பொது மக்களுக்கும் சரி ..... ஒரு விடிவு காலம் புரக்கும்.
முதலில் இவர்கள் இருவரும் ( தலைவியும் & உறுப்பினர்களும் ) தங்களின் அகபாவதை விட்டு ... விட்டு ... கண்ணியத்தை கடை பிடிக்கணும் அதுதான் அவசியம். தங்கள் யாவர்களையும் தேர்வு செய்த இந்த நம் ஊர் பொது மக்களுக்கு வேண்டியாவது .... நீங்கள் தங்களின் நிதானத்தை கடை பிடிக்கவும் .....
ஊர் பொது மக்கள் தங்களை தான் முழுமையாகவே நம்பி உள்ளார்கள் .....தயவு செய்து அப்பாவி பொது மக்களை ஏமாற்றி விடாதீர்கள்...........
தங்கள் யாவர்களையும் தேர்வு செய்து அனுப்பிய எங்களுக்கு நீங்கள் இந்த ஒரு வருஷத்தில் என்னதான் நல்ல காரியங்கள் செய்தீர்கள் என்று கொஞ்சம் தனிமையில் உட்காந்து யோசித்து பார்த்தல் தங்களுக்கே தெரியும்..... நாம் எவ்வளாவு தப்பு செய்து விட்டோம்.... என்று உணர்வீர்கள். அப்படியும் தாங்கள் இருவரும் உணரவில்லை என்றால் நாங்களும் சரி .... வல்ல இறைவனும் சரி தங்கள் யாவர்களையும் கண்டிப்பாக மன்னிக்கவே மாட்டோம்...........
PLZ நம் ஊர் நகர் மன்றத்தை கலங்க படுத்தாரீர்கள். நம் ஊர் கண்ணியமான நம் மரியாதை குரிய பெரிய மனிதர்கள் எல்லாம் நல்ல முறையில் வழி நடத்தி சென்ற இடம். அதற்காவது தாங்கள் யாவர்களும் கொஞ்சம் மரியாதை கொடுக்கவும்.
நகர் மன்றதின் வீடியோ கிளிப்பை பார்க்கவே நம் மனதுக்கு சங்கடமாக இருக்கிறது......நம் ஊர் தானா ??? நம் நகர் மன்றம் தானா ??? வெளி ஊர் நபர்கள் பார்த்தல் நமக்கு தானே அசிங்கம்.
சாராய கடை ஏரியாவும் ..... மீன் கடை ஏரியாவும் நம் ஊர் நகர் மன்றத்தை விட ..... எவ்வளவோ தங்கம்.... GOLD ....... போல் தோண்டுகிறது .......
நம் ஊருக்கு நல்லது செய்ய நினைக்க கூடிய ஒரு தலைவியை செயல் படுத்த விடாமல் தடுக்காதீர்கள்.
வஸ்ஸலாம்
26. Re:... posted bysulthan (yanbu ksa)[04 September 2012] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21843
அஸ்ஸலாமு அலைக்கும்
நகரமண்ட வீடியோவை பார்த்து மனம் வேதனை அடைந்தது, ஒரு உறுப்பினர் தரங்கெட்ட வார்த்தை உபயோகித்தது மிகவும் கண்டிக்கத்தக்கது ,உறுப்பினரை தரம் பார்த்து தேர்வு பண்ண வேண்டும் என்பது நாம் இதிலிருந்து படித்து கொண்ட பாடம்.
27. அயல் நாடு வாழ் காயலர்களின் கவனத்திற்கு! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (Yanbu)[05 September 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21858
அன்பு அயல் நாடு வாழ் காயல் நெஞ்சங்களே. அஸ்ஸலாமு அலைக்கும்!
கடைசியாக நடந்த நமதூர் நகர்மன்ற கூட்டத்தில் ஒரு உறுப்பினர் தலைவியை பார்த்து, வெளிநாட்டில் வாழும் காயலர்களையும் தலைவியையும் இணைத்து தரக்குறைவான ஆபாச வார்த்தைகளை, அத்தனை ஆண்கள் பெண்கள் மத்தியில் கூச்சலிட்டு கூறி இருக்கிறார் என்றால், என்ன அசிங்கம் அரங்கேறுகிறது? அந்த அளவிற்கு தைரியம் வரக் காரண சக்தி எது? சிந்திக்க வேண்டும்.
அந்த அவையில் அனைத்து மீடியோவும், வீடியோவும், வருகை புறிந்த பார்வையாளர்கள் மத்தியிலேயே இதை கூறும் இவர் இவைகள் எதுவுமே அரங்கத்திற்கு வராமல் இருந்திருந்தால்,
எண்ணிபார்க்கவே மனம் கூசுகிறது. அந்த அவல நிலை நிகழாமல் அல்லாஹ் காப்பாற்றினான்!
இதுவரை நடந்த வெளிநடப்பு விளையாட்டு வரும் காலங்களிலும் தொடருமானால், நாம் எதிர் பார்த்து ஏங்கும் அந்த இனிய நகராட்சி கூட்டத்தை இமியளவும் எதிர்கொள்ள முடியாது!
உலகத்தில் நடவாத அதிசயங்கள் கூட நடக்கலாம். ஆமாம்,
கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்க்கே உதயமாகலாம்,
காளை மாட்டிற்கு பால் ஊறலாம், ஊசிமுனை காதுக்குள்ளே ஒட்டகம் புகுந்திடலாம், பூப்படையா பெண்னொருத்தி பிள்ளை கூட பெறலாம்.
இவ்வளவு நிதர்சனமற்ற நிகழ்வுகளெல்லாம் நிகழ்தாலும்,
நம் நகராட்சியில் ஒருநாள் கூட ஒற்றுமையாக
வெளி நடப்பில்லாத வெற்றிகூட்டம் நடைபெற சாத்தியமில்லை.
ஒரே ஒரு சாத்தியம் மட்டும் உண்டு,தலைவி அவர்கள் தானாகவே முன்வந்து தன் பதவியை துறந்தாலன்றி,
வேறு எந்த விமோசனமும் நம் நகராட்சிக்கு இல்லை!
ஊரின் எந்த வில்லாதி வில்லனுக்கும், வளைந்து கொடுக்காத வைர நெஞ்சமுடைய வைராக்கிய வித்தின் மகளாக பிறந்து மலர்ந்த முத்தல்லவோ,அவ்வளவு எளிதில் இந்த ஈனபுத்தியுடையோர்களின் மிரட்டலுக்கு மசிந்து, தன் கொள்கையை காற்றில் பறக்கவிட்டு,தன் தலைவி பதவியை துறந்து விடுவாரா? என்பது
கோடி டாலருக்குறிய கேள்விக்குறியே?
இதற்கு என்னதான் விடிவு காலம்?
இறுதியாக ஒருமுயற்சியை வல்ல அல்லாஹ்வின் துணையை நெஞ்சில் நிறுத்து, வெற்றி பெறுவோம் என்ற வைர என்ன உறுதியோடு,களத்தில் இறங்குவோம்!இன்ஷா அல்லாஹ!
வெளிநாட்டில் வாழும் வளைகுடா காயல் கண்மணிகள் முதல் அனைத்து அயல் நாட்டில் வாழும் அக்கறையுள்ள அன்புள்ளங்களே,
நாம் அனைவர்களும் ஓரணியில் ஒன்று சேர்வோம்.நீதியான,நேர்மையான,நல்லாட்சி நமதூரில் மலர்ந்திட நம்மால் இயன்ற எல்லா முயற்சிகளையும் செய்ய முனைப்புடன் முற்படுவோமேயானால்,
நமதூரின் அனைத்து நடுநிலை நீதவான்களும்,அனைத்து பொது நல அமைப்புகளும்,அனைத்து சங்கங்களும்,அரசியல் கட்சிகளும் நம்முடன் நிச்சயம் கைகோர்ப்பார்கள் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது!
நம்மை எவரும் விலை கொடுத்து வாங்கி விடமுடியாது.
நம் கையை கசக்கி கஞ்சி குடிக்கிறோம்.எவரையும் கெஞ்சி,கொஞ்சி காலம் கடத்தகூடியவர்களாக
நாம் வாழ்ந்துகொண்டிருக்க வில்லை!
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் துணையை முன்னிறுத்தி
இப் புண்ணிய போரில் களமிறங்குவோம்!.
முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை.அல்லாஹ் வெற்றியை தருவான்!.
விரைவில் நமதூர் மக்கள் விழிப்படைந்து,உண்மை உணர்வணியில் ஒன்றாக கலந்து கை கொடுப்பார்கள்!
எங்களுடைய இந்த இனிய வேண்டுகோளை,வெளிநாடுகளில் வாழும் எல்லா அன்புள்ளங்களும் அக்கறையுடன் பரிசீலிப்பீர்களாக!
அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான் மற்றும்
யான்போ "காயல் ஹௌசின்" ஹாஜி கலவா அபூபக்கர் அவர்களுடன் வசித்து வரும் அனைத்து காயல் சகோதரர்கள்!.
28. Re:... posted byJalali (Kayalpatnam)[05 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21873
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மாதம் மாதம் நமதூர் முனிசிபல் சாதாரண கூட்ட செய்திகளை நெட் வாசகர்கள் மட்டுமே அறிந்து கொள்ளும் வகையிலேயே இருக்கின்றோம். ஊர் மக்கள் அனைவரும் இந்த நிகழ்வுகள் போய் சேர்ந்திருக்குமா என்றால் அவை போய் சேரவில்லை என்பதே நம் அனைவரது கருத்துகளும், நமதூரின் இதய பிரச்சனையான குடிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் ஒரே அமர்வு முனிசிபல் மன்றம்தான். அந்த முனிசிபல் மன்றத்தில் குடிநீர் தீர்வு உள்ளிட்ட எந்தவித தீர்வுகளும் காணப்பெறாமல் இருப்பது நமது குறைபாடே ஆகும்.
தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இடையே இந்த பொது விஷயங்களில் ஒற்றுமையின்மையே இவற்றுக்கெல்லாம் மூல காரணம். இவர்கள் ஏன் தலைவி ஆபிதா அவர்களுடன் ஒருமித்த கருத்துக்கள் ஏற்படாததன் காரணம் என்ன? வெளிநடப்பு செய்யும் உறுப்பினர்கள் மன்றத்திற்குள் நுழையும் போதே வெளிநடப்பு கோஷத்தை முன் வைக்கவில்லையே? அவர்களது இத்தியாதிகளை முடித்து விட்டு தானே வெளிநடப்பு செய்ய வருகின்றனர். இதிலிருந்து புரிகின்றதா? உள்நோக்கம் என்ன வென்று எய்தவர் இருக்க அம்பை நோவானேன்? என்பது யாவரும் அறிந்த மொழி. அதற்காக அம்பை சும்மா விட்டு விடுவார்களா? அம்பையும் சேர்த்து முறித்து, சகாப்தத்தை படைக்க வேண்டும் என்பதே வீர வெறியர்களின் அவா.
எய்தவரின் மறைவிற்கு பின்பு (யாவருக்கும் மறைவு இயற்கையே) அம்புகளின் பாடு திண்டாட்டம் தானே. அம்புகளாக பார்த்து திருந்த வேண்டும். ஊர் நன்மையை கருத்தில் கொண்டு, உழைக்கனும் சுயமாக தொழில் புரியவேண்டும். மக்களின் தேவைகளை புர்த்தி செய்ய அனைவருடன் ஒத்துழைக்க வேண்டும்.
தலைவி அவர்கள் மீதும் குறையிருக்கின்றது. இந்த நேரத்தில் சுட்டிகாட்டியே ஆகவேண்டும். நகராட்சியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடக்கும் அந்த கூட்டத்தில் நகராட்சி சார்பில் குடிநீர் தட்டுப்பாடு விளக்க நோட்டீஸ் வினியோகம் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாதது. அதற்கு அந்த இடம் தான் கிடைத்ததா? அதற்கு அடுத்த நாள் (அல்லது அதன் பின்பு) நோட்டீஸ் முனிசிபல் நிர்வாகிகளின் முழு தெரியப்படுத்துதலின் பேரில் வினியோகம் செய்து இருக்கலாம்.
எங்கே தலைவி சிறு பிழை செய்யமாட்டார்கள் என்று கண்ணில் விளக்கெண்ணை விட்டும், புதக்கண்ணாடியாலும் அலசுவதற்கு காத்துக் கொண்டு இருக்கும் இவ்வேளையில் தலைவி இந்த நோட்டீஸ் வினியோகம் தவறே. பொது நல அமைப்பின் நிறுவனர் என்ற முறையில் தலைவிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன். ஒரு கணம் செய்யுமுன் என்னிடம் கருத்து கேளுங்கள் என்று. அதை அவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
சரி இந்த (ஆரஉியட ஊசளைளை) பிரச்சனைகள் முடிவுக்கு கொண்டு வர மக்கள் சக்திக்கு உட்பட்டவைகள் மூன்று 1. தலைவி உறுப்பிகள் இடையே நல்லுறவு ஏற்படுத்த வேண்டும் (என்றென்றும் நீடித்தாக இருக்க வேண்டிய கட்டாயம்) 2) நகர்மன்றத்தை கலைத்துவிடுவதற்கு ஏகோபித்த மக்களின் ஒப்பத்தை பெற்று, மனுவாக அளித்து முறைப்படி மாவட்ட ஆட்சியர் மூலம் சிஎம்ஏ நகராட்சிகளின் ஆணையர், சென்னை அவர்களின் அனுமதியை பெற்று அதற்குரிய ஆவணம் செய்படுத்த வேண்டும். 3) நீதிமன்றத்தை நாடி நகர்மன்றத்தை கலைத்திட முனைய வேண்டும்.
அன்பான காயலர்களே! இவற்றிற்கெல்லாம் யார் முடிவு கட்டுவார்கள் (புனைக்கு மணிக்கட்டுவது யார்) காயலர்களே! சிந்திப்போம் செயல்படுவோம். ஒற்றுமைக்கு வழிவகுப்போம்.
இப்படிக்கு
பா.மு.ஜலாலி
நிறுவனர்
மக்கள் சேவா கரங்கள்,
காயல்பட்டினம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross