Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:04:20 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9064
#KOTW9064
Increase Font Size Decrease Font Size
திங்கள், செப்டம்பர் 3, 2012
மத்திய அமைச்சர் கபில் சிபல் தலைமையில் மதரஸா கல்வி மேம்பாட்டுக்கான தேசிய ஆலோசனைக்குழு அமைப்பு உறுப்பினராக கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் நியமனம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3812 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (25) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபலை தலைவராகவும், இத்துறையின் இணையமைச்சர் இ.அஹமதுவை துணைத்தலைவராகவும் கொண்டு மதரஸா கல்வி மேம்பாட்டிற்கான தேசிய ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் உறுப்பினராக இடம் பெற்றுள்ளார்.

இந்தியாவின் அனைத்து மதரஸாக்களிலும் கல்வி தரத்தை உயர்த்தும் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது இதற்காக ஆலோசனை வழங்க தேசிய அளவில் மத்திய மனித வளமேம்பாட்டுதுறை அமைச்சர், இணையமைச்சர் மற்றும் 31 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் தலைவராக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் துணைத் தலைவராக இணை அமைச்சர் இ.அஹமத் ஆகியோர் உள்ளனர். இக்குழுவின் உறுப்பினராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கர் இடம்பெற்றுள்ளார்.

பள்ளிக்கல்விச் செயலாளர், இணைச் செயலாளர், நோயிடா, நியாஸ் சேர்மேன் டாக்டர் எஸ்.எஸ்.சனா, உத்திர பிரதேச மாநில சிறுபான்மை நலத்துறை, மத்திய பிரதேச பொதுக் கல்வி துறை செயலாளர் , பீகார் கல்வித்துறை செயலாளர் கேரள கல்வி துறை இயக்குனர் மத்திய பிரதேச மதரஸா வாரியத் தலைவர் ராஜஸ் தான்,மதரஸா வாரியத் தலைவர், பீகார் மதரஸா வாரியத் தலைவர் தனியார் சட்ட வாரிய மௌலானா வலி ரஹ்மான், மும்பை ஹபீன் பக்கீம்,

புதுடெல்லி முப்தீ, இஜாஸ், அர்ஷத் காசிமி, டாக்டர் காலித் அன்வர், டாக்டர் சையதா முபீன் ஷஹரா, மத்திய பிரதேச மத்திய மானியம் மற்றும் உதவிக்குழு உறுப்பினர் பேராசிரியர் ஹலீம் கான்,

உத்திரபிரதேச மதரஸா நவீனத்துவ ஆசிரியர் சங்க தலைவர் இஜாஸ் அஹமது, அகில இந்திய மதரஸா அதுனிக்கரன் சிக்ஷாக் சங்க் தலைவர் முஸ்லிம் ரசாக் கான், ஒடிசா மதரஸா அசோஷேசியன் பொது ச்செயலாளர் முனவ்வர் அஹ மது, அஸ்ஸாம் மதரஸா ஆசிரியர் சங்கத் தலைவர் பசலுதீன் பஸ்ஸானி, உத்தர் காண்ட் ஐமாஸ் பொதுச்செய லாளர் ஜியா வுதீன், பீகார் மதரஸா சையன்ஸ் டீச்சர்ஸ் அசோஷேசன் செயலாளர் எஹ்தாசம் சத்ரி, உத்திர பிரதேசம் அகில இந்திய மதரஸா நவீனத்துவ சங்கத் தலைவர் சமியுல்லாகான், துணைத் தலைவர் முஹம்மது அஹமது,

மத்திய பிரதேச மதரஸா டீச்சர்ஸ் சோஷேசன் முஹம்மது சுஹப் குரைஷி, புதுடெல்லி ஜாமிய மில்லியா இஸ்லாமியா பேராசிரியர் எம்.எச்.குரைஷி,

கேரள பதிப்பிறையம் உஸ்மான் மதனி, கோழிக்கோடு பி.எம்.கோயா மாஸ்டர், கன்னூர் எஸ்.கே.ஹம்சா ஹாஜி, தமிழ்நாடு கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், உத்திர பிரதேசம் மவ்லானா கவ்சர் ஹயாத்கான் ஆகியோர் உறுப்பினராக இடம் பெற்றுள்ளனர். இக்குழுவின் உறுப்பினர் செயலாளர் மற்றும் அமைப்பாளராக மனித வள மேம்பாட்டுத்துறை துணைச் செயலாளர் வீரேந்திர சிங் இருப்பார் எனவும்,

ஆண்டுக்கு இருமுறை இக்கூட்டங்கள் நடைபெற்று ஒவ்வொரு மாநிலத்திற்கும் மதரஸா கல்வி மேம்பாட்டிற்கான தேவையான ஆலோசனைகள் பெறப்பட்டு அமுல் படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என மத்திய மனித வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
சென்னையிலுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்திலிருந்து
உஸ்மான்,


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Congrats
posted by Muthu Magdoom VSH (Jeddah) [03 September 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21766

Congrats Abu Kaka,

Eligible post to a perfect personality.

But this is not enough for your priceless effort to our community.

Wish you all success to you.

- Muthu Magdoom VSH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by P.S.ABDUL KADER (KAYAL PATNAM) [03 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21769

வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. HEARTY CONGRATULATION TO MY DEAREST
posted by V.M.T.MOHAMED HASAN (HONG KONG) [03 September 2012]
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 21770

DEAREST ABUBACKER SAHIB

ASSALAMU ALAIKUM.

AL-HAMDULILLAH AND SUKRUN LILLAH, INDEED VERY HAPPY TO HEAR THIS NEWS VIA KAYALPATNAM.COM AND THIS ALL WE EXPECTED AND WE WANT TO SEE YOU AS A CENTRAL MINISTER SOON, INSHA ALLAH.

THIS IS JUST A BEGINNING FOR YOUR WORK TOWARDS THE UMMAH FOR THE SAKE OF ALMIGHTY ALLAH, INSHA ALLAH YOU WILL SUCCEED IN ALL YOUR VENTURE.

WE UNITE WE STAND
WORK FOR THE UMMAH ONLY FOR THE SAKE OF ALMIGHTY ALLAH..

(REMEMBERING OUR QYSS SLOGAN)

FEE AMANILLAH

YOURS
V.M.T.MOHAMED HASAN
CAMP :HONG KONG


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by mohmed younus (trivandram) [03 September 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 21775

வாழ்த்துக்கள். சரியான நபரை தேடி, சரியான பதவி வந்து அடைந்துள்ளது. தம்பி முத்து மொக்தூம் தெரிவித்த மாதிரி, உங்களின் அயராத சமுதாய உழைப்பிற்கு, இந்த பதவி போதுமானதல்ல.

எல்லா புகழும் இறைவனக்கே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Peena Abdul Rasheed (Riyadh) [03 September 2012]
IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21776

தம்பி ஆபுபக்கர் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துகள் இறைவன் இன்னும் சிறப்பாக்கி வைப்பான் அமீன்.

நீங்கள் நம் ஊருக்கு பல பல நன்மை செயுங்கள். நீங்கள் ரியாதில் இருக்கும் சமயம் உங்கள் திறமைய வைத்து என் வீட்டில் வைத்து நான் சொன்ன வார்த்தை மறந்து இருக்க மாட்டிர்கள்.

ரியாதில் இருந்து
பீனா அப்துல்றஷீத்
பதாஹ் ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. வாழ்த்துக்கள்!
posted by Firdous (Colombo) [03 September 2012]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 21779

தங்கள் பணி சிறக்க வல்ல இறைவனிடம் பிரார்த்திகின்றோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by mohamed mukthar (chennai) [03 September 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 21782

மாஷா அல்லாஹ் புகழ் அனைத்தும் இறைவனுக்கே!!!

தங்களை இப்பதவி தேடி அது மகிழ்வடைகிறது!!! சென்ற இடம் எல்லாம் உங்களுக்கு வெற்றி கிட்டும். நமது நகருக்கு நன்மை கிடைக்கட்டும். வல்ல இறைவன் உங்கள் ஆயுளை நீடித்து வைப்பானாக!!!.

என்றும் அன்புடன்
முக்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...வாழ்துக்கள்
posted by Ruknudeen Sahib (China) [03 September 2012]
IP: 116.*.*.* China | Comment Reference Number: 21786

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு நண்பன் அபூபக்கர் அவர்களுக்கு உன் வாழ்வில் மென்மேலும் உயர் பதவிகள் பெற்று நண்பன் ஹசன் கூறியதை போல் இன்ஷா அல்லாஹ் ஒரு மத்திய அமைச்சராக பதவி ஏற்று ஊருக்கு நன்மைகள் பல செய்து நம் ஊருக்கு நற் பெயரும் பெருமையும் சேர்த்திட வல்ல நாயனிடம் துஆ செய்கிறேன் வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [03 September 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21787

சந்தோசமான செய்தி.

காயலருக்கு ஒரு சிறு உயர்வு என்றாலே சந்தோசம் வருகிறது, அதுவே பெரிய உயர்வு என்றால்...!! மாஷா அல்லாஹ்.

காயிதே மில்லத், சிராஜுல் மில்லத், முனீரே மில்லத் போன்றவர்களின் வரிசையில் தாங்களும் இடம்பெற்று, அனைத்து மக்களுக்கும் நற்சேவை செய்திட வாழ்த்தி துஆ செய்கின்றேன்.

சாளை S.I.ஜியாவுத்தீன்,
துணைத்தலைவர்,
காயல் நற்பணி மன்றம்
தம்மாம், சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [03 September 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21794

அஸ்ஸலாமு அலைக்கும்.

நம் ஊர் நம் சகோதரர் ஒருவர் இவ்வளவு முன்னேற்ற பாதையில் போவதை நாம் நினைக்கும் போது. நமக்கு பெருமையாக உள்ளது. இந்த செய்தியை படித்ததும். நம் மனதுக்கு சந்தோசமாக இருந்தது.

உன்னால் நம் ஊருக்கும் பெருமை...... உன்னுடைய முன்னேற்ற பாதையில் நாங்கள் மலர்களாக இருப்போம். மேலும் தம்பி நீ நம் ஊர் மக்கள் பெருமை படக்கூடிய அளவுக்கு உயாரந்த பதவிகளை பெற்றிட வேணும். இது தான் எங்களின் ஆசை..............

>>>>> அருமை தம்பிக்கு என்னுடைய நல் வாழ்த்துக்கள் உரித்தாகுக <<<<<<<<

வல்ல நாயன் இவரின் முன்னேற்றத்தில் பெயரோடும் / புகழ்ளோடும் நற்பெயர் எடுக்க அருள் புரிவானாகவும் ஆமீன். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...வமா தஷா வூன இல்லா அன் யஷா அல்லாஹ்.
posted by T,M,RAHMATHHULLAH (74)yr phn 280852 (KAYALPATNAM 04639 280852) [03 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21796

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பு தம்பி அபூ அவர்களுக்கு தமது சேவய்யை பொருந்தி இந்த நிஃமத்தை தந்த இறைவன் இன்னும் உயர்வாக்குவானாக்..

வமா தஷா வூன இல்லா அன் யஷா அல்லாஹ். என்று கூறியபடி அவன் நாடி இந்த பதவியையும் தந்த தற்கு நன்றி கடனாக ரண்டு ரகா அத் நஃபில் தொழுது இதில் இருந்தே உயர் பதவிகளை பெற்று இன்னும் ஊருக்கும் நாட்டுக்கும், சன்மார்க்கததுக்கும் மென்மேலும் சேவைகள் செய்திட மேலும் இரண்டு ரகாஅத் இஸ்த்திகாறா தொழுகையும் தொழுது இரறை வனிடம் கையேந்தி கேளுங்கள். நாங்களும் துஆ செய்கிரோம் றோம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by Kulam Muhammad Thamby (Chennai ) [03 September 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 21799

Allah chooses the right person for the right job, Indeed he is All Knower and All Powerful.

Abu Kaka is without any doubt a selfless personality with keen interest and involvement in social welfare of our community.

We wish him all the best in all his endeavours .......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. வாழ்த்துக்கள்
posted by umar rilzwan jamali (singapore) [03 September 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 21800

சமூகத்தின் மீது அக்கறை கொண்ட தங்களுக்கு - சமூகத்துக்காக உழைத்திட இறைவனால் வழங்கப்பட்ட பொறுப்புக்களில் இதுவும் ஒன்று. அதை உணர்ந்த தாங்கள் சிறந்து செயல் படுவீர்கள். ஏற்றம் காண இந்த எளியோனின் வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. விளையும் பயிர் முளையிலேயேத் தெரியும்...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [04 September 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21801

அருமை நண்பரே! (இன்ஹா அல்லாஹ்) உமது எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். தாங்கள் ஜித்தா காயல் நல மன்றத்தின் செயலாளராக இருந்த போதே எமக்குத் தெரியும் விளையும் பயிரின் விளச்சளைப் பற்றி! உமது சுறுசுறுப்பும், பழகும் விதமும்,சமூக அக்கறையும் உம்மை இன்னும் பல படி உயர்த்தும் என்பதில் சந்தேகமில்லை! பிறந்த மண்ணுக்கும், வாழும் நாட்டிற்கும், வழிநடத்திச் செல்லும் சமுதாயத்திற்கும் நன்மைகள் பல செய்து நல்லோர் பலரது ஆசியுடன் வாழ்வாங்கு வாழ வாத்துகின்றேன். -ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. துஆக்களுடன் வாழ்த்துகள்
posted by முஹம்மது புகாரீ (காயல்பட்டினம்) [04 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21811

அன்புச் சகோதரர் அபூபக்கர் அவர்களுக்கு துஆக்களுடன் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அல்லாஹ் உங்களுக்குக் கிடைத்துள்ள இப்பொறுப்பை முறையாகப் பயன்படுத்தி சமூகத்திற்குப் பலனளிக்கும் வாய்ப்பை நல்குவானாக.

சில ஆலோசனைகளை உங்கள்முன் வைக்கிறேன். அதை உரிய இடத்திற்குக் கொண்டுசெல்வீர்கள் என நம்புகிறேன்.

கடந்த காலங்களில் தமிழகத்தில் மதரசா கல்விக்கு நல்ல வரவேற்பும் மதிப்பும் இருந்துவந்ததை நாம் அறிவோம். அது போன்று மார்க்கக் கல்வி பயின்றவர்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைத்துவந்தது.

ஆனால், இன்றைய மதரசாக்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதை நாமெல்லாம் மிகவும் அறிவோம். மார்க்கக் கல்வி கற்க யாரும் முன்வருவதில்லை. மார்க்க அறிஞர்களுக்கும் சமூகத்தில் உரிய அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை.

காய்தல் உவத்தலின்றி இவற்றை நீங்கள் ஆராய வேண்டும். அதற்காக கருத்துகளையும் ஆலோசனைகளையும் நீங்கள் திரட்டக் கடமைப்பட்டுள்ளீர்கள். இதில் எந்த சார்புமின்றி நடுநிலையான கண்கொண்டு நீங்கள் செயல்பட்டால், காலம் முழுக்க சமூகம் உங்களை நன்றியோடு நினைவுகூரும் என்பதில் ஐயமில்லை.

கடந்த காலங்களில் ‘மதரசா வாரியம்’ பற்றிய கருத்து விவாதிக்கப்பட்டது. தமிழகத்தின் பெரும்பாலான மதரசாக்களும் மார்க்க அறிஞர்களும் இதை ஏற்க மறுத்துவிட்டனர். தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் இது சம்பந்தமான கூட்டம் ஒன்று இப்போதைய துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி அவர்களின் முன்னிலையில் நடத்தப்பட்டதாக அறிந்தேன். அதில் மதரசா வாரியம் பற்றிய கலந்துரையாடலில் அதிருப்தியான கருத்துகள் முன்வைக்கப்பட்டதாக அறிந்தேன்.

எனவே, இது குறித்த தெளிவான பார்வையை சமூக மட்டத்தில் கொண்டுபோய்ச் சேர்ப்பது உங்களின் பொறுப்பும் கடமையும்கூட. கேரளாவில் பள்ளிப் பருவத்திலேயே மார்க்கக் கல்வி போதிக்கப்படுகிறது. பீகாரிலும் மதரசா வாரியத்தின் மூலமாக சமூகம் பயனடைவதாக அறிகிறோம். அது போன்று தமிழகத்தின் நிலையும் முன்னேற்றம் அடைய வேண்டும்.

சமீப காலமாக தமிழக மதரசாக்கள் மிகவும் பின்தங்கிய நிலைக்குச் செல்வதாக அறிகிறோம். இதை பின்வரும் இணைப்பைச் சொடுக்கி நீங்களும் அறியலாம்.
http://khanbaqavi.blogspot.in/2011/09/blog-post.html

இந்த விஷயங்களில் எங்களால் ஆன ஒத்துழைப்புகளை உங்களுடன் அளிக்க என்னைப் போன்ற சகோதரர்கள் ஆர்வமாக உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

அல்லாஹ் உங்களுக்குக் கிடைத்த இப்பொறுப்பை (அமானத்தை) சரியாக நிறைவேற்றுவதற்கான வழிகளைக் காட்டுவானாக.

தங்களன்புச் சகோதரன்
முஹம்மது புகாரீ


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. பிறைக்கொடி உயர்ந்தே பறக்கட்டும்!
posted by kavimagan (kayalpatnam) [04 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21812

இந்திய முஸ்லிம் சமூகத்திற்காக, பன்னிரண்டரை மணி நேரம் பாராளுமன்றத்தில் முழங்கிய சிங்கம் பனாத்வாலா சாகிப் அவர்களது நேரிய வழியில், யாராலும் விலைக்கு வாங்க முடியாத சமுதாயப் போராளியாக, நண்பர் அபூபக்கர் அவர்கள் செயலாற்றி, சிறந்துயர வல்லவனை வேண்டுகின்றேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [04 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21814

தம்பி அபூபக்கருக்கு நமது நல்வாழ்த்துக்கள்...! அவர் இந்த பணியில் சிறப்பாக ஈடுபட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். நமது "மதராசாக்களின் நிலைமை வெகு பரிதாபமாக உள்ளது. நூற்றாண்டுக்கு முந்தைய பாடத்திட்டங்கள், நவீன கல்வியின் போதாமை, வேறு எதற்குமே போக வழியில்லாதவன்தான் "மதரசா "கல்வி பெற வருவார்கள் என்ற இழிநிலை இனியாவது மாறவேண்டும்.

மற்ற பல அரசு பள்ளிகளுக்கு அரசு மானியம் வழங்குவதைப் போல மதரசாக்களுக்கும் அரசு மானியம் வழங்க வேண்டும்.

கல்வி சார்ந்த ஒரு அகில இந்திய நிறுவனத்தில் ஒரு உறுப்பினராக நியமனம் பெற்றிருக்கும் தம்பிக்கு மீண்டும் ஒரு முறை நமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் ...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by Mohamed Abdul Kader - Khobar (Al Khobar) [04 September 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21815

Good Welldone , nice to hear .

Keep it up


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...எல்லா புகழும் இறைவனக்கே!
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [04 September 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21816

எல்லா புகழும் இறைவனக்கே!

தம்பி ஆபுபக்கர் அவர்களுக்கு என்னுடைய மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.

உங்களின் குரல் வரும் காலங்களில் சட்டமன்றலோ அல்லது பாரளுமன்றலோ ஒலிக்க வேண்டும், அதன் மூலம் நமது காயல் மண் பெருமை படவேண்டும் என்பதே எனது ஆவல்.

வல்ல நாயன் அருளால் உங்களின் இந்த சேவை இன்னும் பலவகைகளில் பயன் பெற எனது வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Felicitation
posted by Riyath (HongKong) [04 September 2012]
IP: 171.*.*.* United States | Comment Reference Number: 21818

Excellent move of kayal brother in national level politics. Insha allah, this appointment will bring goodness to all muslim college especially our town colleges. All the best

My dream is to see atleast one MLA/MP from our town for raising our people problems.

**Wassalam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by Salai Syed Mohamed Fasi (AL Khobar Saudi Arabia) [04 September 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21825

Applause

First of all thanks to Almighty Allah.For his herculean task he has obtained this post.He is dedicated his life for the welfare of the peoples.For his excellent effort we organised Jeddah kayal association.He did many good works it is countless.

Almighty will provide more and more power for him

My greetings to him to success each and every things.

Best regards
Salai Syed Mohamed Fasi
AL Khobar Saudi Arabia


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...மனமார்ந்த வாழ்த்துக்கள்
posted by S.A.C. ஹமீத் (அபுதாபி. ) [04 September 2012]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21826

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் சகோ.அபூபக்கர் அவர்களுக்கு என் சார்பாகவும், அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சுறுசுறுப்பும், துடிப்பும், ஆற்றலும், கண்ணியமும், சிந்தனை தெளிவும் மிக்க சகோ.அபூபக்கர் அவர்களே! தங்களது இந்த நியமனம் என்பது, ஏற்கனவே சமுதாயப் பணியில் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கும் தங்களுக்கு கூடுதல் சுமை மற்றும் பொறுப்புமாகும் என்பதனை நான் நன்கறிவேன்.

அவற்றையெல்லாம் தாண்டி அரசியல் மற்றும் சமுதாய வானில் தாங்கள் மென்மேலும் சாதனைகள் படைக்க எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு என்றென்றும் உதவி செய்வானக!

காயலர்களே! வருங்கால தேசியத் தலைவரை அடையாளம் கண்டு கொள்க! அவரை முழுமையாக ஆதரியுங்கள்.

S.A.C. ஹமீத்.
அபுதாபி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by syed omer kalami (chennai) [04 September 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 21836

congrats n wishes to u.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...
posted by Jahir Hussain VENA (BAHRAIN) [05 September 2012]
IP: 89.*.*.* Bahrain | Comment Reference Number: 21872

No doubt at all Right Person for the Right post... We pray for our achievement..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. வாழ்த்துக்கள்!
posted by Muthu Muhammad (Dubai) [06 September 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21897

நல்வாழ்த்துக்கள். இப்பொறுப்பினை சிறப்பாக நிறைவேற்ற வல்ல ரஹ்மான் துணை புரிவானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved