இயல்பான காலங்களில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் - மேல ஆத்தூரில் இருந்து - காயல்பட்டினம் நகராட்சிக்கு 20 லட்சம் லிட்டருக்கும் மேலான அளவில் குடிநீர் வழங்கி வந்தது. தற்போது நிலவும் தட்டுபாடு நிலையினால் - இது குறைக்கப்பட்டு, செப்டம்பர் 1
முதல் தினமும் 12 லட்சம் லிட்டர் என்ற அளவில் வழங்கப்பட்டு வருகிறது.
மூடப்பட்ட குழாய்மூலம் அனுப்பப்படும் இந்த தண்ணீர் குறைந்தளிவிலேயே வந்து சேருவதாக காயல்பட்டினம் நகராட்சி ஊழியர்கள் பல ஆண்டுகளாக கூறிவருகின்றனர். 21 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்ட காலங்களில் - 16 லட்சம் லிட்டர் தண்ணீர் தான்
வழங்கப்படுவதாக கூறிவந்தனர். தற்போது 11 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படும் காலத்தில் - 6 லட்சம் லிட்டர் தண்ணீர் தான் வழங்கப்படுவதாக கூறினர்.
இருப்பினும் காயல்பட்டினம் நகராட்சி அலுவலர் - செப்டம்பர் 2 இரவு முதல் செப்டம்பர் 3 அதிகாலை வரை 9.1 லட்ச லிட்டர் தான் பெறப்பட்டது என கூறுகிறார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தரப்பில் 12 லட்சம் லிட்டர் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
3 லட்ச லிட்டர் மாயம். செப்டம்பர் 3 இரவு முதல் செப்டம்பர் 4 அதிகாலை வரை 9.2 லட்ச லிட்டர் தான் பெறப்பட்டது என கூறுகிறார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தரப்பில் 12 லட்சம் லிட்டர் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 2.8 லட்ச லிட்டர் மாயம்.
செப்டம்பர் 3 இரவில் செய்தியாளர்கள் - மேல ஆத்தூரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நீர்தேக்கத்திற்கு சென்றிருந்தனர். காயல்பட்டினதிற்கு குடிநீர் வழங்கப்படும் பம்பிங் துவக்கப்படும் நேரமான இரவு 8 மணி அளவில் அங்கிருந்த செய்தியாளர்கள் -
நவீன மீட்டர் மூலம் ஒவ்வொரு வினாடியும் காயல்பட்டினம் நகராட்சிக்கு வழங்கப்படும் குடிநீர் அளவினை காண முடிந்தது.
மோட்டார் கருவி இயக்கப்பட்டவுடன் நிமிடத்திற்கு சுமார் 3500 லிட்டர் அளவில் பாய துவங்கிய தண்ணீர், படிப்படியாக நிமிடத்திற்கு 2300
லிட்டர் அளவில் காயல்பட்டினதிற்கு அங்கிருந்து அனுப்பப்பட்டது. அதிகாலை 6 மணி வரை தொடர்ந்து இந்த தண்ணீர் அனுப்பப்படும் என அங்கிருந்த அலுவலர்கள் தெரிவித்தனர்.
தினமும் அதிகாரிகளால் - பயன்படுத்தப்படும் மின்சார அளவும், வழங்கப்படும் குடிநீர் அளவும் - லாக் புத்தகத்தில் துல்லியமாக பதிவு செய்யப்படுகிறது என்பதனையும் அங்கு காண முடிந்தது.
2. Re:... posted byP.S.ABDUL KADER (KAYAL PATNAM)[05 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21853
ஆத்தூர் பம்பிங் நிலையத்தில் உள்ள மீட்டரையும், மோட்டார் கருவியையும் பார்வையிட்டால் மட்டும், தவறுதலை எளிதாக கண்டுபிடிக்க முடியாது.
பம்புசெட் உழியர்கள் சுட்சை போடுவதும், தண்ணீர் விழுவதை பதிவேட்டில் பதிவதும் சரிதான். ஆத்தூரில் பம்பை ஓட விட்டுவிட்டு நமதூர்க்கு வரும் தண்ணீரை ஒவ்வெரு தொட்டியிலும் சரிபாருங்கள், அங்கு திறந்து விட்ட தண்ணீர் அளவு நமதூர்க்கு வந்து இருக்கும்.
All ok. We understood from the posted news that meter reading is recorded very accurate as per meter display. Very Good.. Who will assure the accuracy of the meter, when its (meter) Calibration done?
If meter is ok!! Where this water is by passing (disappearing)??? Who is doing this good job? Who is beneficiary???
4. Re:... posted bySalai Syed Mohamed Fasi (AL Khobar Saudi Arabia)[05 September 2012] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21875
It is very sad and bad news for us. How many years such a nasty and hasty things are going on? The executive people should alert and arrange to investigate regarding this matters. If fail we will loss many lakhs rupees.
Anticipating action is very significant.
Thanks for awarness
அங்கிருந்து திறந்து விடும் தண்ணீர் சரியாக காயல்பட்டினம் வந்து சேருகிறதா...? அதை கவனிப்பதற்கு பைபாஸ் ரோட்டில் மீட்டர் பொருத்துவதற்காக அதற்க்கான தனி அறையும் கட்டி முடிக்க பட்டு விட்டது பின்பு ஏன்.. இன்னும் மீட்டர் பொருத்தாமல் காலம் தாழ்த்த படுகிறது...? இதில் ஊழியர்களும்.. அதிகாரிகளும்... ஏன்... நமது கவுன்சிலர்களில் சில நபர்களும் இந்த மீட்டர் பொருத்தும் தீவிரத்தை தட்டிகழித்து கொண்டே இருப்பார்கள்... மாதாந்திர கூட்டத்தை உறுப்பினர்கள் ஒழுங்காக நடத்த விட்டால் தானே நல்ல தீர்வு கிடைக்கும்...!
எதற்கு எடுத்தாலும் மீடியா... மீடியா...மீடியா... உள்ளே வர கூடாது என்று சொல்லி... சொல்லி.. மக்களின் நலத்திட்டங்கள் வரவிடாமல் கூட்டம் நடைபெற விடாமல் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து வருகிறார்கள்... தடையாக இருக்கும் உறுப்பினர்களை அந்த அந்த வார்டு மக்கள் புறக்களிக்க வேண்டும்.. மீட்டர் பொருத்தாமல்..! பின்னே எப்படி ஊருக்குள்ள ஒழுங்கா.. தண்ணீர் வரும்...?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross