வாக்காளர் அடையாள அட்டை பிழை திருத்தப்பணியின்போது கவனத்துடன் விபரங்களைப் பதிவு செய்திடுமாறு, காயல்பட்டினம் அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்பார்ந்த காயல்பட்டினம் நகர பொதுமக்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
எமது அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படும் முக்கிய அறிவிப்பு யாதெனில்,
பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டைகளில் உள்ள பிழைகளை திருத்தும் பணி நமதூரில் நடைபெற்று வருகிறது.
எதிர்வரும் 10.09.2012 வரை நடைபெறவுள்ள இப்பணிக்காக, உங்கள் வீடு தேடி வரும் பணியாளரிடம் உள்ள புத்தகத்தில், தங்களின் விபரங்களை சரிபார்த்து - பிழைகள் இருப்பின் மீண்டும் மீண்டும் தவறு வராமல் தடுக்க, தாங்களே எழுதிக் கொடுத்து திருத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்
அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில்
முஹம்மத் முஹ்யித்தீன்,
செயலாளர். |