தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் சார்பில், அந்நாட்டிலுள்ள கடற்கரை சுற்றுலா தளத்தில் - திரளான உறுப்பினர்களின் குடும்பத்துடன் கூடிய பங்கேற்புடன் இன்பச் சுற்றுலா நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.எஸ்.செய்யித் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
தாய்லாந்து காயல் நலமன்றத்தின் இன்பச் சுற்றுலா பாங்காக்கிற்கு கிழக்கே 180 கி.மி. தொலைவில் உள்ள ரயாங் கடற்கரை விடுமுறை தலத்தில் 25,26 -08-2012 சனி, ஞாயிறு தினங்களில் நடைப் பெற்றது. 72 நபர்கள் கலந்து கொண்டனர். 16 உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தது மிகச் சிறப்பாக இருந்தது. 51 இருக்கைகள் கொண்ட ஒரு பேரூந்து, ஒரு வேன் மற்றும் ஒரு காரில் சென்றனர்.
பேருந்தில் ஒலி உள்வாங்கி அமைப்பு (MIC AND SPEAKER) இருந்ததால் சுட்டிகள் தங்கள் திறமைகளை பாடல், ஓதல், நகைச்சுவை சொல்லுதல், பிறரைப் போல் பேசுதல், பேட்டி காணுதல் என கலக்கினர்.
அனைவரும் P.M.Y.BEACH HOTEL AND RESORT COTTAGEகளில் தங்கினர். இந்த விடுமுறைத் தளத்தில் SWIMMING POOL, SAUNA, BILLIARD போன்ற நிறைய பொழுதுபோக்கு வசதிகள் இருந்தன. சமையலுக்காக 3 நபர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
மழலையர்கள், சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் அனைவருக்கும் பொழுது போக்கு அம்சங்கள், நகைச்சுவை சொல்லுதல், விளையாட்டுக்கள், இடம் பெற்றிந்ததால் சுட்டிகளிலிருந்து வயதான கம்மா வரை எல்லோருக்கும் புறப்பட்டதிலிருந்து திரும்பி வரும் வரை படு அமர்களமாக இருந்தது.
ஆரம்பமாக மதிய உணவு மற்றும் ஓய்வுக்குப் பின் சிறுவர்களுக்கான MUSICAL CHAIR COMPETITION நடைபெற்றது.
பிறகு ஆண்களுக்கான ஞாபகத் திறனாய்வுப் போட்டி நடைபெற்றது. ஒரு அணிக்கு 7 நபர்கள் வீதம் 4 அணிகள் பங்கு பெற்றன. மிகவும் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும், பரபரப்பாகவும் இருந்த இவ்விளையாட்டு 2 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, ஆண்கள் பங்கேற்கும் - பந்தைத் தாங்கிய கரண்டியை வாயில் வைத்துக்கொண்டு ஓடும் போட்டி நடைபெற்றது.
அதன்பின், குடும்பத்துடன் வந்திருந்தவர்களுக்கு இடையே ஜோடிப் பொருத்தம் விளையாட்டு வைக்கப்பட்டது. முதலில் 10 கேள்விகள் பெண்களிடம் தனியாகப் பெண் நடுவர்களால் கேட்கப்பட்டு பதிலை பதிவு செய்து கொண்டனர். பின்னர், அதே கேள்விகளை அவர்களின் கணவர்களிடம் கேட்கப்பட்டது. ஒரே ஒரு ஜோடி மட்டும் தான் 10 ல் 9 க்கு ஒரே மாதிரியான சரியானப் பதிலைத் தந்தனர். சிலரின் பதில்கள் படுதமாஷாகவும், நகைச்சுவையாகவும் இருந்தன.
இவை முடிய இரவாகி விட்டதால் காட்டேஜ் புல்வெளித் தரையில் BARBEQUE CHICKEN AND BEEF உடன் உணவு வழங்கப்பட்டது.
அடுத்த நாள் ஞாயிறு காலை 7.30 மணியளவில் நீச்சல் குளத்தில் நீர் பந்து, நீர் கபடி, நீச்சல் போட்டி நடைப்பெற்றன.
கோழிக்கறி மக்ரோனி பசியாறுக்குப் பின் கால்பந்து போட்டி லீக் முறையில் நடைப்பெற்றது.
பின்னர், மழலையர்கள், சிறுவர்கள் என 2 பிரிவுகள் பிரிக்கப்பட்டு அந்தந்த பிரிவுகளுக்குள் BALOON BURSTING, LEMON BALANCING RACE போட்டிகள் நடைபெற்றன.
பின்னர் பெண்களுக்கான ஞாபகத் திறனாய்வுப் போட்டி நடைபெற்றது. ஆண்களைப் போலவே 4 அணிகளாகப் பிரிந்து விளையாடினர். மிகவும் ஆரவாரத்துடனும், கலகலப்பாகவும், தங்களின் ஞாபகத் திறன் மற்றும் பொது அறிவு விளப்பத்தையும் வெளிப்படுத்தி நன்றாக விளையாடினர்.
லுஹர், அஸர் ஜம்வு கஸ்ரு தொழுகைக்குப்பின் மதிய உணவு உண்டதும் சிறிது நேரம் ஓய்வு கொடுக்கப்பட்டது. அதன் பின் ஆண்களுக்கான LEMON BALANCING RACE நடைபெற்றது.
மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை தக்வாவின் பொதுக்குழுக் கூட்டம் பசுமையான புல்வெளித் தரையில் நடைபெற்றது.
மாலை 6.30 மணியளவில் அருகில் உள்ள கடற்கரையில் அனைவரும் ஒன்று கூடினர். சுற்றுலாவில் கலந்து கொண்ட 72 நபர்களின் பெயர்களும் தாளில் எழுதப்பட்டு குலுக்கப்பட்டு 28 பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசாக MICRO OVEN வழங்கப்பட்டது.
மழலையர்கள், சிறுவர்கள் போட்டியில் வென்ற வெற்றியாளர்களுக்கு பரிசுகளும், சுற்றுலாவில் கலந்து கொண்ட அனைத்து மழலையர்கள், சிறுவர்களுக்கும் நிறைய அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன.
இரவு உணவுக்குப்பின் 9.30 மணியளவில் இன்பச் சுற்றுலாவை இனிதே முடித்துக்கொண்டு இன்னொரு நாள் கூடுதலாக இருந்திருக்கலாமே என்ற ஏக்கத்துடன் பயணமாகி இரவு 12 மணியளவில் பாங்காக் வந்தடைந்தனர்.
தக்வா சுற்றுலா நிகழ்வுகளின் படங்களை தொகுப்பாகக் காண இங்கே சொடுக்குக!
இவ்வாறு, தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) செயலாளர் எம்.எஸ்.செய்யித் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
படங்கள்:
கம்பல்பக்ஷ் அஹ்மத் இர்ஃபான் & ஃபியாஸ் இத்ரீஸ் |