மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபலை தலைவராகவும், இத்துறையின் இணையமைச்சர் இ.அஹமதுவை துணைத்தலைவராகவும் கொண்டு மதரஸா கல்வி மேம்பாட்டிற்கான தேசிய ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு, சிங்கப்பூர் காயல் நல மன்றம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இத்தேர்வு குறித்து, சிங்கப்பூர் காயல் நல மன்றம் மகிழ்ச்சி தெரிவிப்பதாகவும், மத்ரஸா கல்வி மேம்பாட்டுப் பணிகளில் அதிக ஈடுபாடுடைய - பொருத்தமானவரைத் தேர்ந்தெடுத்தமைக்காக இந்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், சமுதாய மேம்பாட்டுப் பணிகளில் அவர் சிறப்புற செயலாற்றிடும் பொருட்டு இன்னும் பல நல்ல பொறுப்புகளில் அவர் நியமிக்கப்பட வேண்டுமென்று ஆவல் தெரிவிப்பதாகவும் சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |