ஒவ்வொரு ஆண்டும் - தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் - ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 அன்று - சிறந்த மருத்துவர், சிறந்த ஆசிரியர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் என மூன்று விருதுகளை வழங்கி வருகிறது.
இவ்வாண்டு வாழ்நாள் சாதனையாளர் (LIFETIME ACHIEVEMENT AWARD) விருதினை பெற திருநெல்வேலியில் பணியாற்றி வரும் காயல் பூர்விக குழந்தைகள் மருத்துவர் டாக்டர் முஹம்மது தம்பி M.B., M.D. (Paed.), DCH தேர்வு செய்யப்பட்டார்.
இந்த விருது செப்டம்பர் 5 அன்று காலையில் ௦ பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.
2. டாக்டர் முஹம்மது தம்பிக்கு வாழ்நாள் சாதனை விருது! posted byMD Abdul Cader Hong Kong (Kayalpatnam)[06 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21902
He is deserved as Doctor with his service and age. He is one of the best and well experienced doctor in Tamil Nadu. May Allah make his life time longer and longer and do service to the peoples in his rest of his life.... Masha Allah,
3. பல்லாண்டு வாழ்க posted bySolukku M.I. Seyed Mohamed Sahib (Jeddah.)[06 September 2012] IP: 84.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21903
பெயரில் மட்டும்தான் தம்பியே ஒழியே இவர்கள் எப்போதும் பொது சேவையிலும் கவனமான மருத்துவத்திலும் எல்லோருக்கும் அண்ணனாகவே இருந்து வருகிறார்கள்.
இறைவன் டாக்டர் முஹம்மத் தம்பி அவர்களுக்கு நீண்ட ஆயுளை தந்து திடமான ஆரோக்கியத்தை அளித்து சமுதாயத்துக்கு எப்போதும்போல் சேவை செய்திட அருள்புரிவானாக அமீன்.
4. Re:... posted byNMZ.Ahamedmohideen (KAYALPATNAM)[06 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21904
அஸ்ஸலாமு அலைக்கும். இவ்வாண்டு வாழ்நாள் சாதனையாளர் (LIFETIME ACHIEVEMENT AWARD) விருதினை பெற திருநெல்வேலியில் பணியாற்றி வரும் காயல் பூர்விக குழந்தைகள் மருத்துவர் டாக்டர் முஹம்மது தம்பி M.B., M.D. (Paed.), அவர்கள் நீடுழி காலம் வய்யத்துள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.மாஷா அல்லாஹ் ! உங்களின் மகத்தான மருத்துவ சேவை என்றென்றும் எல்லா மக்களுக்கும் பிரயோஜனம் தர பிராத்திக்கின்றோம் ;
7. அன்பொழுகும் உள்ளதால் வாழ்த்துகிறோம்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (Yanbu)[06 September 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21913
வாழ்நாள் சாதனை பட்டம் பெற்ற Dr.தம்பி அவர்களை அன்பொழுகும் உள்ளதால் வாழ்த்துகிறோம்!
தன்னுடைய மருத்தவ சேவை நம் எல்லோருக்கும் கிடைக்கும் வண்ணம் தன் தொழில்தூரத்தின் எல்லையை நெல்லையாக அமைத்து, அனைவர்களுக்கும் எளிதான தொடர்பை ஏற்படுத்தி தந்திருக்கும் அவரின் தூயதொண்டு வாழ்நாள் காலமெல்லாம் வெற்றியடைய வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறோம்!
வாழ்த்தும் உள்ளங்கள்,
முஹம்மது ஆதம் சுல்தான் மற்றும்
யான்போ "காயல் ஹெசின்" ஹாஜி அபூபக்கர் அவர்களுடன் வசிக்கும் அனைத்து காயல் சகோதரர்கள்!
8. Re:...தாமதமாக வந்த விருது posted bymackie noohuthambi (kayalpatnam)[07 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21915
டாக்டர் தம்பி அவர்கள் குழந்தைகள் டாக்டர் என்ற பெயர் நெல்லை மாவட்டத்தில் எல்லோருக்கும் தெரியும்.
நான் சில இடங்களில் என் பெயரை நூஹுத்தம்பி என்று சொல்லும்போது தம்பி டாக்டரின் சொந்தக்காரரா என்று கேட்பார்கள். நானும் பெருமையாக தூரத்து உறவு என்று சொல்வேன்.நான் பாளையம்கோட்டையில் புனித சவேரியார் கல்லூரியில் படிக்கும்போது நடந்த செய்தி இது. 30 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் புகழ் அப்போதே உச்சகட்டத்துக்கு போய்விட்டது. நமது நாட்டில் ஒரு கெட்டிக்காரர் வாழும் காலத்தில் அவரை முறையாக கௌரவித்து பாராட்ட மாட்டார்கள். பாரத ரத்னா என்ற உயரிய விருது நிறையபேருக்கு அவர்கள் மறைந்த பிறகுதான் கொடுப்பார்கள். என்ன சிந்தனையோ தெரியவில்லை.
" நான் மறைந்த பிறகு எனக்கு ஒரு தாஜ்மஹால் கட்ட வேண்டாம், நான் வாழும் காலத்தில் எனக்கு குடியிருக்க ஒரு குடிசை கட்டி தாருங்கள்" என்று ஒரு புது கவிதை சொல்கிறது..உண்மை.
நமது மண்ணின் மைந்தனுக்கு நாம் செய்யவேண்டியது, உடனடியாக KMT மருத்துவமனையின் தலைமை பொறுப்பேற்றுள்ள டாக்டர் அஷ்ரப் அவர்கள் நமது தம்பி டாக்டர் அவர்களுக்கு ஓர் வரவேற்பு விழா வைத்து நமதூர் டாக்டர்கள் முக்கிய பிரமுகர்கள், பெரியவர்கள் எல்லோரையும் அந்த நிகழ்ச்சிக்கு அழைத்து இந்த வாழ் நாள் சாதனையாளருக்கு ஒரு சிறப்பு மருத்துவருக்கு நல்லதொரு விருதை வழங்க வேண்டும் என்று இந்த இனைய தளம் மூலம் வேண்டிக்கொள்கிறேன்
விருதுகளால் சிலருக்கு பெருமை. சிலரால் அந்த விருதுக்கு பெருமை. தம்பி டாக்டர் அவர்களால் இந்த விருது பெருமை பெறுகிறது.
HE ALONE LIVES WHO LIVES FOR OTHERS, OTHERS ARE MORE DEAD THAN ALIVE.
9. Re:... posted byA.H.Mohamed Ismail (Hyderabad)[07 September 2012] IP: 59.*.*.* India | Comment Reference Number: 21918
மருத்துவர் தம்பி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அல்லாஹ் மருத்துவர் அவர்களுக்கு நீண்ட ஆயுளை கொடுத்து மக்களுக்கு மென்மேலும் சேவைபுரியகூடிய வாய்ப்பை தந்தருள்வானாக! ஆமீன்.
10. Re:... posted byKader K.M (Dubai)[07 September 2012] IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21921
வாழ்த்துக்கள்! அல்லாஹ்வின் பெரும் அருளால் மக்களின் பிணிகளை நீக்கும் தங்களுக்கு நோயற்ற வாழ்வையும் ,நீண்ட ஆயுளையும் தந்து சேவைகள் பல செய்து பல விருதுகள் பெற அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன்!
11. Re:..தம்பி டாக்டர். posted byPSA.Syed Ahamed (HONG KONG)[07 September 2012] IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 21922
. டாக்டருக்கு இந்த விருது கொடுத்ததினால் அந்த விருது பெருமை படுகிறது. அவர் மனித நேய மிக்க ஒரு மாமனிதர். அவர் இதை விடவும் மேலான பரிசினை எல்லா தரப்பு மக்களிடமும் இருந்து பெற்று பேறு பெற்று விட்டார். அல்ஹம்து லில்லாஹ்.
அவருக்கு நீடித்த ஆயுளை கொடுத்து இன்னும் பல உயரிய விருதுகளை பெற வல்ல இறைவன் அருள் புரிவானாக. .
12. மேலும் பல விருதுகள் பெற துவா செய்கிறோம். posted byV D SADAK THAMBY (Guangzhou,China)[07 September 2012] IP: 113.*.*.* China | Comment Reference Number: 21923
"வாழ்நாள் சாதனை விருது" பெற்ற எங்கள் மச்சான் Dr முஹம்மது தம்பி அவர்கள் மேலும் பல விருதுகள் பெற துவா செய்கிறோம்.
14. Re:... posted byK S Muhamed shuaib (Kayalpatinam)[07 September 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 21937
டாக்டர் மாமாவுக்கு எனது இதையபூர்வமான வாழ்த்துக்கள்...!"மக்களுக்கு செய்யும் சேவை இறைவனுக்கு செய்யும் சேவைக்கு சமமானது "என்பார்கள். உங்களது மக்கள்பணி என்றேண்டும் தொடர வாழ்த்துக்கள்...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross