இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் காயல்பட்டினம் நகர சார்பில் நடத்தப்பட்டு வரும் சிராஜுல் மில்லத் பயிற்சிப் பாசறையில், மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு குறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், சிராஜுல் மில்லத் பயிற்சிப் பாசறை என்ற பெயரில் மேடைப் பேச்சு பயிற்சி, கடந்த ஜூன் மாதம் 26ஆம் தேதி துவக்கப்பட்டது. இரண்டாவது பயிற்சி வகுப்பு ஜூலை 08ஆம் தேதியன்று நடைபெற்றது. ரமழான் மாதத்தை முன்னிட்டு பாசறை நடைபெறவில்லை.
ரமழான் மாதம் நிறைவுற்றதையடுத்து, மீண்டும் 02.09.2012 அன்று இரவு 08.00 மணிக்கு பயிற்சிப் பாசறை துவங்கியது.
முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமை தாங்கினார். நகர பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், ஹாஜி எம்.கே.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாசறை மாணவர்களான பி.இசட்.ஏ.முஹம்மத் அலீ கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைக்க, ஏ.அப்துல் ரஸ்ஸாக் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, காயிதேமில்லத் பேரவை நகர அமைப்பாளர் ஆசிரியர் மு.அப்துல் ரசாக் சிறப்புரையாற்றினார்.
பின்னர், மாணவர் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில், பாசறை மாணவர்களான டி.எம்.ஐ.முஹம்மத் அப்துல்லாஹ், எம்.ஏ.ஆர்.அய்யாஷ் ரஹ்மான், கே.இஸ்மத் ஹாரிஸ், எம்.கே.இப்றாஹீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
போட்டியின் நிறைவில், டி.எம்.ஐ.முஹம்மத் அப்துல்லாஹ் முதற்பரிசையும், எம்.ஏ.ஆர்.அய்யாஷ் ரஹ்மான் இரண்டாம் பரிசையும் பெற்றனர்.
பயிற்சிப் பாசறை ஏற்பாடுகளை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளையின் மாணவரணி மற்றும் காயிதேமில்லத் பேரவை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |