ஒவ்வொரு ஆண்டும் - தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் - ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 அன்று - சிறந்த மருத்துவர், சிறந்த ஆசிரியர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் என மூன்று விருதுகளை வழங்கி வருகிறது. இவ்வாண்டு வாழ்நாள் சாதனையாளர் (LIFETIME ACHIEVEMENT AWARD) விருதினை பெற திருநெல்வேலியில் பணியாற்றி வரும் காயல் பூர்விக குழந்தைகள் மருத்துவர் டாக்டர் முஹம்மது தம்பி M.B., M.D. (Paed.), DCH தேர்வு செய்யப்பட்டார். இந்த விருது செப்டம்பர் 5 அன்று காலையில் ௦ பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.
இந்த விருதினை தமிழக சட்டசபையின் சபாநாயகர் பி.ஜெயகுமார் வழங்கினார். அந்நிகழ்ச்சியின் புகைப்படத் தொகுப்பு:-
1. அன்பொழுகும் உள்ளதால் வாழ்த்துகிறேன் ! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (Yanbu)[08 September 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21966
வாழ்நாள் சாதனை பட்டம் பெற்ற Dr.தம்பி அவர்களை அன்பொழுகும் உள்ளதால் வாழ்த்துகிறேன் !
பாதிப்புக்குள்ளான தன் பிஞ்சுள்ளத்தை பதைபதைக்கும் மனதோடு மழலை மருத்தவரிடம் கூட்டிவரும் தாயின் பயத்தை முதலில் தனியவைத்து, கனிவான வார்த்தைகளை கூறி,
உறிய முறைகள் அம் மழலைக்கு மருத்துவம் செய்து
அத் தாயையும் திருப்தியோடு அனுப்பிவைக்கும்
தம்பி டாக்டரின் அறிய சேவையை அகம் மகிழ மனதார புகழும் இதேவேளையில்,
ஓரிரு மழலை மருத்துவர்கள் தங்களை நாடி வருபவர்களிடம் நயமாக பேசக்கூட தெரியாமல், நம் மனதை நோகடிகிறார்களே அப்பேற்பட்ட மருத்துவர்களெல்லாம், தம்பி டாக்டரை பார்த்தாவது பக்குவமடைய யமாட்டார்களா யா அல்லாஹ்!
தன்னுடைய மருத்தவ சேவை நம் எல்லோருக்கும் கிடைக்கும் வண்ணம் தன் தொழில்தூரத்தின் எல்லையை நெல்லையாக அமைத்து, அனைவர்களுக்கும் எளிதான தொடர்பை ஏற்படுத்தி தந்திருக்கும் தம்பி டாக்டரின் தூயதொண்டு வாழ்நாள் காலமெல்லாம் வெற்றியடைய வல்ல அல்லாஹ்
உதவி செய்வானாக ஆமீன்!
2. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[08 September 2012] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21970
அஸ்ஸலாமு அலைக்கும்
ஜனாப். டாக்டர் முஹம்மது தம்பி மாமா அவர்களுக்கு. இந்த சிறப்பான வாழ்நாள் சாதனையாளர் விருதினை DR . M.G.R. மருத்துவ பல்கலைக்கழகம் வழங்கி இருப்பதை அறிந்து நம் ஊர் மக்கள் அனைவர்களுக்கும் ரொம்பவும் மகிழ்சியாக உள்ளது & DR.மாமா ஹக்கில் துவா கேட்கிறோம்.
இந்த சாதனையாளர் விருதுக்கு ரொம்பவும் பொறுத்தமானவர்கள் தான்.DR.மாமாவால் நம் ஊர்க்கு மேலும் பெருமைதான்.
வல்ல இறைவன் டாக்டர் முஹம்மது தம்பி மாமா அவர்களின் ஆயுளை நீடித்து மேலும் நம் ஊர் மக்களுக்கு சேவை ஆற்றிட அருள் புரிந்தருல்வானாகவும் ஆமீன்.
இந்த சாதனையாளர் விருதினை அவர்களின் நற் சேவைக்கு எப்போதே வழங்கி....... மரியாதை குரிய டாக்டர் முஹம்மது தம்பி மாமா அவர்களை சிறப்பித்து இருந்து இருக்கலாம்.
3. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[08 September 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21974
நான் தூரத்தில் இருந்து பார்த்து பார்த்து ரசித்து ஆனந்தப்படும் மனிதர்களில், மரியாதைக்குரிய தம்பி டாக்டர் அவர்களும் ஒருவர்..
பலமுறை மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தும் போது, எனக்கு காயல்பட்டினம் என்று சொன்னவுடன், அவர்கள் அடுத்தது வினவுவது "தம்பி டாக்டர் ஊரா?" என்பது தான்.
ஏன், இந்த பள்ளிக்கூடம் நல்லதா, அந்த பள்ளிக்கூடம் சிறந்ததா?, இந்த பள்ளிக்கூடத்தில் தான் படிப்பு திறமாக உள்ளது, அங்கு படிப்பது சிறந்த்தது அல்ல, என்ற சர்ச்சை வரும்போது எல்லாம், உடனே உதாரணம் சொல்லுவது " தம்பி டாக்டர் எல்லாம் இந்த பள்ளிக்கூடத்தில் படித்து பெரிய ஆளாக வரவில்லையா..!!" என்பது தான்.
பலருக்கு முன்மாதிரியாக திகழும் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட விருது, சிறந்த விருது தான், சாலச்சிறந்த விருது தான். ஆனால் லேட் ஆக கொடுத்து உள்ளார்கள். ஓகே.
தாங்கள் மன நிம்மதியுடன், நீண்ட நாட்கள் வாழ்ந்து, இன்னும் வரக்கூடிய தலைமுறைகளுக்கு முன்மாதிரியாக திகழ வாழ்த்துகி.. இல்லை இல்லை.. வல்ல ரஹ்மானிடம் இறைஞ்சுகிறேன்.
4. பாராட்டுக்கள் posted bySalai Sheikh Saleem (Kayalpatnam)[09 September 2012] IP: 59.*.*.* India | Comment Reference Number: 21978
குழந்தைகள் நல மருத்துவத்தில் முடிசூடா மன்னராக திகழும் என் பெரியப்பா மரியாதைக்குரிய தம்பி டாக்டர் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்தது நமதூருக்கு மேலும் ஒரு மைல் கல்.
பாராட்டுகிறேன், உங்களின் நீடித்த ஆயுளிர்க்காக துஆ செய்கிறேன்.
5. Re:...தந்தையே போல் பிள்ளை posted byRuknudeen Sahib (China)[09 September 2012] IP: 116.*.*.* China | Comment Reference Number: 21984
அஸ்ஸலாமு அலைக்கும் தனது வாழ்நாளில் பெரும் பகுதியே மற்றவர்களின் சந்தோசத்துக்காக அற்பணிதிருக்ககூடிய எம் கே டி அப்பா அவர்களின் மகனாகிய டாக்டர் தந்தைக்கு சளைத்தவர் அல்ல என்பதை நிருபித்திருக்கிறார்கள். முதல் புகை படத்தை பார்க்கையில் தந்தை எம் கே டி அப்பா அவர்களே நேரில் பார்த்தது போல் இருக்கிறது. எல்லாம் வல்ல ரஹ்மான் டாக்டர் அவர்களின் ஆயுளை நீடித்து இன்னும் பல விருதுகள் பெற்று அதனால் நம் ஊரின் பெருமயேயும் உயர்த்துவானாக ஆமீன்
6. Re:... posted byAbubacker Thariq (Dubai)[09 September 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21993
டாக்டர் பெரியப்பா அவர்களுக்கு எங்கள்ளுடைய வாழ்த்துக்கள். அல்லா அவர்களுக்கு நீடித்த ஆயுளை கொடுப்பனஹா. இன்னும் பல விருதுகளையும் கொடுப்பனஹா இம்மையுளும் , மறுமையிலும்.
7. Re:... posted bySalai Syed Mohamed Fasi (AL Khobar Saudi Arabia)[09 September 2012] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21995
Greetings
My hearty wish to my brother Dr Mohamed Thamby Kaka for his great achievement.He is a magnanimous and also very good planner.He dedicated his life for the welfare of the peoples.Really its very great triumph to our town.
8. Re:...குறை கூற வேண்டாம் posted bySoofi (Riyadh)[10 September 2012] IP: 168.*.*.* United States | Comment Reference Number: 22005
டாக்டர் தம்பி அவர்களை பாராட்டமல் இருக்க முடியாது இந்த தருணத்தில், அவர்கள் பெரிய சாதனை புரிந்திருக்கிறார்கள். இந்த சேவையை தொடர அல்லாஹ் அவர்களின் ஆயுளை நீட்டித்து, ஆரோக்கியமான வாழ்வை கொடுத்தருள்வானாக ஆமீன். அதே நேரத்தில் அவர்கள் நமதூரில் KMT ஆஸ்பத்திரியில் வந்து நிரந்தர பணி எடுக்க கொஞ்சம் பரிசிலிக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.
மீண்டும் மீண்டும் சொல்லிகொள்வது கருத்து என்ற பெயரில் எழுதுபவர்கள் மற்றவர்களை பாடம் படிக்க சொல்வது இத்தருணத்தில் உகந்ததல்ல. யாருடைய திறமையும் குறை கூற வேண்டாம் என்ற கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.
வஸ்ஸலாம்.
9. Re:... posted bySiddique (US)[11 September 2012] IP: 68.*.*.* United States | Comment Reference Number: 22016
Assalaamu Alaikum Mama,
Mabrook!!! Our Heartfelt Congratulations to You! Masha Allah, we are very thrilled to hear this news.
May Allah extend your life to continue serve the people in need. May Allah make your services and achievements an inspiration for all of us to do THE BEST in our professions. May Allah reward you and your family abundantly in this world and in the hereafter? Ameen!
10. Re:... posted byDr D Mohamed Kizhar (chennai)[08 February 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25431
Congratulation to my mentor...who made pediatric field cakewalk for me..who induce me to choose this pediatric profession..May Allah bless him with healthy life...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross