ஆத்தூர் குடிநீரேற்று நிலையத்திலிருந்து காயல்பட்டினம், ஆறுமுகநேரி, ஆத்தூர் மற்றும் திருச்செந்தூர் பகுதிகளுக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் அளவு செப்டம்பர் 10ஆம் தேதி (நாளை) முதல் அதிகரிக்கப்படுகிறது என மேலாத்தூர் குடிநீரேற்று நிலைய பொறியாளர் பால சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
காயல்பட்டினம், ஆறுமுகநேரி, ஆத்தூர் மற்றும் திருச்செந்தூர் பகுதிகளுக்கு மேலாத்தூரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய சுத்திகரிப்பு மற்றும் குடிநீரேற்று நிலையத்திலிருந்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
காயல்பட்டினம் நகராட்சிக்கு 12 லட்சம் லிட்டர் வழங்கப்பட்டு வந்தது 13 லட்சம் லிட்டராக (முழு அளவு 23 லட்சம் லிட்டர்) வழங்கப்படவுள்ளது.
ஆறுமுகனேரி பேரூராட்சி பகுதிக்கு 11 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது திங்கட்கிழமை முதல் 12 லட்சம் லிட்டராக (முழு அளவு 21 லட்சம் லிட்டர்) வழங்கப்படும்.
திருச்செந்தூர் பகுதிக்கு பற்றாக்குறையினால் 8 லட்சம் லிட்டரே வழங்கப்பட்டு வந்தது. திங்கட்கிழமை முதல் 9 லட்சம் விட்டர்(முழு அளவு 15.4 லட்சம் லிட்டர்) குடிநீர் வினியோகிக்கப்படும்.
ஆத்தூர் பேரூராட்சி மன்ற பகுதிக்கு 3.25 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது திங்கட்கிழமை முதல் 4 லட்சம் லிட்டராக (முழு அளவு) வினியோகிக்கப்படும் என்றார்.
மழை பெய்து ஸ்ரீவைகுண்டம் அணையின் தென்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டால் முழு அளவு குடிநீர் வினியோகம் செய்ய இயலும் என்றார் பொறியாளர் பாலசுப்பிரமணியன். ஏற்கனவே 01ஆம் தேதி குடிநீர் வினியோக அளவு அதிகரிக்கப்பட்டது.
3. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[09 September 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21998
அஸ்ஸலாமு அலைக்கும்
நல்ல செய்தி தான் தந்து இருக்கிறீர்கள்..........ok ...இப்பவாது நம் ஊர் பைப்புகளில் நல்ல தண்ணீர் வாரம் ஒரு முறை ஒழுங்காக வருமா ?? நாங்கள் எதிர் பார்க்கலாமா............கூடுத்தால் குடி தண்ணீரை நாங்கள் மகிழ்சியோடு எதிர் பார்த்து காத்துள்ளோம்.
நம் நகர் மன்ற தலைவியும் & உறுப்பினார்களும் ஒற்றுமையாக இருந்து செயல் பட்டு.பொது மக்களாகிய எங்களின் முக்கியமான பிரைச்சனையை ( தண்ணீர் ) தீர்த்து வைத்தாலே....போதும். நாங்கள் மன நிம்மதியாகிவிடுவோம்.
இவர்களின் ஒற்றுமைதான் ..... பொது மக்களாகிய எங்களின்... பலம் ....நோ ...நோ ...நம் ஊரின் ... பலம் ..... வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross