மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபலை தலைவராகவும், இத்துறையின் இணையமைச்சர் இ.அஹமதுவை துணைத்தலைவராகவும் கொண்டு மதரஸா கல்வி மேம்பாட்டிற்கான தேசிய ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு, தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அம்மன்றத்தின் தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாடு முழுவதிலுமுள்ள அனைத்து மத்ரஸாக்களின் கல்வி மேம்பாட்டிற்காக மத்திய அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு குழுவில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அவர்களும் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது மிகுந்த மனமகிழ்வைத் தருவதாக உள்ளது...
தகுதியுள்ள ஒருவருக்கு தரப்பட்டுள்ள தரமான இப்பொறுப்பை அவர் அழகுற பயன்படுத்தி, இன்றைய நவீன கால சவால்களை - இஸ்லாமிய மரபு மாறாமல் சந்திக்கும் அளவில் மத்ரஸா கல்வியை மேம்படுத்த தம் குழுவுடன் இணைந்து செயலாற்றிட வேண்டும்... அவ்வாறு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அனைத்து மத்ரஸாக்களுக்கும் பலன் தரத்தக்கதாய் அமைய வேண்டும்...
என்று தெரிவித்துள்ளார்.
தகவல்:
கம்பல்பக்ஷ் அஹ்மத் இர்ஃபான் |