ஜித்தா காயல் நலமன்றத்தின் மக்கா உறுப்பினர்களின் ஒன்றுகூடல் மற்றும் கலந்தாலோசனைக் கூட்டம் செப்டம்பர் 7 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. அது குறித்து அம்மன்றம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
கடந்த 07-09-2012 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்குப் பின் மக்காவில் பணியாற்றி வரும் ஜித்தா காயல் நலமன்றத்தின் உறுப்பினர்கள் பெரும்பாலானோர் மக்கா லீ-மெரிடியன் ஹோட்டலில் நடந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் ஜித்தாவிலிருந்து மன்றத்தின் தலைவர் மற்றும் செயலாளர்கள் ஆகியோர் தந்திருந்தனர். சிறப்பு விருந்தினராக அல்-ஃபத்தாஹ் ஹஜ் சர்வீஸ் (பி) லிட் உரிமையாளர் அல்ஹாஜ் ஏ.அபுல் ஹஸன் அவர்களும் பங்கெடுத்து சிறப்பித்தார்.
மஃரிப் தொழுகையை புனித ஹரம் ஷரீஃபில் நிறைவேற்றி விட்டு, நிகழ்ச்சிக்காக வந்தவர்களை லீ-மெரிடியன் மக்கா ஹோட்டலில் பணியாற்றி வரும் எம்.என்.எல்.முஹம்மது ரபீக் வரவேற்றதோடு குளிர்பானங்கள் வழங்கி உபசரித்தார். நிகழ்ச்சியின் ஆரம்பமாக அல்ஹாஃபிழ் எம்.என். முஹம்மது சாலிஹ் திருமறை வசனங்களை ஓதி துவக்கி வைத்தார். பொறியாளர் ஜனாப் எஸ்.எம். பஷீர் அஹ்மது அவர்கள் தலைமையில், குளம் எம்.ஏ. அஹமது முஹிய்யத்தீன் (மன்றத்தின் தலைவர்), எம்.ஏ.செய்யது இபுறாஹீம் (செயலாளர்), சட்னி செய்யது மீரான் (செயலாளர்), சீனா எஸ்.எச். மொஹுதூம் முஹம்மது (செயற்குழு உறுப்பினர்) மற்றும் எம்.என்.எல். முஹம்மது ரபீக் ஆகியோர் வரவேற்புரை வழங்கினர்.. ஹாஜி ஏ. அபுல் ஹசன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
ஆர்வத்தோடு அனைத்து உறுப்பினர்களும் பங்கெடுத்த இந்நிகழ்ச்சியில் மக்காவுக்கு வேலை நிமித்தம் புதிதாக வந்தவர்களும், தம்மை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். கூட்டத்தில் நலமன்றத்தின் செயல்பாடுகள், நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக நமதூரிலிருந்து மக்கா வரும் ஹாஜிகளுக்கு வழிகாட்டல், மருத்துவ உதவிகளைப் அரசாங்கம் அனுமதிக்கப்பட்ட முகாம்களிலிருந்து பெற வழி செய்தல், காணாமல் போன பொருட்கள், பணம் ஆகியவற்றை எவ்வாறு? எங்கே பெறவேண்டும்? என்பது குறித்த விளக்கம் ஹாஜிகளுக்கு அளித்தல், இடம் தெரியாமல் போவோருக்கு அவர்கள் தொடர்பு கொள்ள வசதியாக உறுப்பினர்களின் பெயர் மற்றும் கைபேசி எண்கள் அடங்கிய கையேடு வழங்குவது போன்ற உதவிகளைச் செய்வது குறித்து ஆலோசணை நடத்தி அதற்காக ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. இதில் பெரும்பாலானோர் தாமே முன் வந்து தமது பெயர்களையும் கைபேசி எண்களையும் பதிவு செய்தனர்.
இறுதியாக ஹாஜி எம்.அஹமது மீரா (மக்கா ஷுஹதா ஹோட்டல்) அவர்கள் நன்றியுரையாற்றினார். வந்திருந்த அனைவருக்கும் இரவு உணவிற்காக பஃபே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மற்றும் செலவுகளை பொறியாளர் எஸ்.எம்.பஷீர் அஹமது அவர்கள் ஏற்றுகொண்டதோடு அல்லாஹ்வின் கருணையால் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்ந்துலில்லாஹ்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சட்னி செய்யது மீரான் (செயலாளர்)
புகைப்படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன் |