தூத்துக்குடி மாவட்ட திட்டக்குழுக்கான (DISTRICT PLANNING COMMITTEE) தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 18 ம் தேதி அன்று நடைபெறும். இதற்கான வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 4 முதல் 7 வரை நடைபெற்றது. வேட்புமனுக்கள் பரிசீலனை செப்டம்பர் 8 அன்று நடைபெற்றது. வேட்புமனுக்கள் திரும்ப பெற இறுதி நாள் செப்டம்பர் 10 ஆகும்.
ஊரக பகுதிகளுக்கு 7 உறுப்பினர்களும், நகர்புற பகுதிகளுக்கு 5 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தேர்தல் - மாவட்ட ஆட்சியகத்தில் செப்டம்பர் 18 அன்று காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும்.
இத்தேர்தலுக்கு நகர்புற பகுதிகள் வாக்காளர்களாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் 407 உறுப்பினர்கள் ஆவார்கள். ஊரக பகுதி வாக்காளர்களாக 17 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ஆவார்கள்.
திட்டக்குழுவின் தலைவராக மாவட்ட பஞ்சாயத் தலைவர் இருப்பார். துணைத் தலைவராக மாவட்ட ஆட்சியர் இருப்பார். திட்டக்குழுவின் முக்கிய பணி - மாவட்ட வளர்ச்சி குறித்து பரிந்துரைகள் வழங்குவது.
மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர்கள், நகராட்சி தலைவர்கள், டவுன் பஞ்சாயத் தலைவர்கள் ஆகியோர் - இத்திட்டக்குழு கூடும்போது, சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொள்வர்.
புதிதாக அமைக்கப்படும் இத்திட்டக்குழுவின் முதல் கூட்டம் செப்டம்பர் 24 அன்று நடைபெறும். |