காயல்பட்டினம் நகராட்சியால் வினியோகிக்கப்படும் குடிநீரை அடிபம்பு மற்றும் பொது குடிநீர் குழாய் மூலம் மட்டுமே பெற்றுக்கொள்ள அனுமதியுள்ளது. ஆனால், மின் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சிப் பெறுவது நகரின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள பொதுமக்களால் செய்பப்பட்டு வருதால், அது தற்காலத்தில் பெரும்பாலும் ஒரு தவறாகவே கருதப்படுவதில்லை.
நகராட்சியால் வினியோகிக்கப்படும் குடிநீரை மின் மோட்டார் மூலம் உறிஞ்சுவோரின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் அவ்வப்போது பொதுமக்களுக்கு எச்சரிக்கப்பட்டு வந்தது.
அதனைத் தொடர்ந்து, இம்மாதம் 05ஆம் தேதியன்று காயல்பட்டினம் மேலப்பள்ளி தெரு, பெரிய நெசவுத் தெரு ஆகிய பகுதிகளில் - காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் அஷோக் குமார் தலைமையில் நடத்தப்பட்ட திடீர் சோதனையின்போது 6 மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தற்போது, - இனி இதுபோன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன் என எழுத்துப்பூர்வமாகப் பெற்று, பறிமுதல் செய்யப்பட்ட 6 மோட்டார்களும் நகராட்சி ஆணையர் அஷோக் குமார் மூலம் அதன் உரிமையாளர்களிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது. |