ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் (ஜக்வா) அமைப்பின் தலைவர் ஹாஜி பிரபு எஸ்.ஏ.முஸ்தஃபா கமால் 12.09.2012 புதன்கிழமை இரவு 09.00 மணியளவில், ஜெய்ப்பூரில் காலமானார்.
அன்னாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
ஜெய்ப்பூர் காயல் நல மன்றத்தின் தலைவர் ஹாஜி பிரபு எஸ்.ஏ,முஸ்தஃபா கமால் அவர்கள் காலமான செய்தி எம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கொடையுள்ளமும், உயர்ந்த சிந்தனையும், சிறந்த செயல்திறனும் நிறைவாகப் பெற்ற பெருந்தகை அவர்களின் மறைவு அன்னாரின் குடும்பத்தாருக்கும், நம் சமுதாயத்திற்கும், நமதூருக்கும் பேரிழப்பாகும்.
அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தார், உற்றார் - உறவினர், ஜெய்ப்பூர் காயல் நல மன்ற (ஜக்வா) நிர்வாகிகள் - உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், மர்ஹூம் அவர்கள் அறிந்தோ - அறியாமலோ செய்த பிழைகளை கிருபையுள்ள அல்லாஹ் பொருத்தருளி, அவர்களின் நற்கருமங்கள் அனைத்தையும் ஏற்று, அவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...
இவ்வாறு சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில், அதன் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |