Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:17:24 PM
புதன் | 20 ஜுன் 2018 | ஷவ்வால் 6, 1438 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4012:2503:5206:4307:59
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:00Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:15
மறைவு18:37மறைவு---
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4305:1005:37
உச்சி
12:19
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0019:2719:55
 (1) {20-6-2018} காயல்பட்டினத்தில் முதலாவது புத்தகக் கண்காட்சி! (ஜூன் 18, 19, 20 இல்!!) அனைவருக்கும் அழைப்பு!!!
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9132
#KOTW9132
Increase Font Size Decrease Font Size
வியாழன், செப்டம்பர் 13, 2012
ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளியின் முன்னாள் பொருளாளரும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முன்னாள் மேலாளருமான எம்.ஏ.எஸ்.ஹமீத் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2675 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (28) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நெசவுத் தெரு ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளியின் முன்னாள் பொருளாளரும், காயல்பட்டினம் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முன்னாள் மேலாளருமான ஹாஜி எம்.ஏ.எஸ்.ஹமீத் இன்று மதியம் 01.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 72.

அன்னார் மர்ஹூம் முஹம்மத் அலீ என்பவரின் மகனும், மர்ஹூம் மொகுதூம் முஹம்மத் என்பவரின் மருமகனும், மர்ஹூம் எம்.ஏ.பி.அப்பாஸ் - மர்ஹூம் எம்.ஏ.எஸ்.காதர் ஆகியோரின் சகோதரரும், ஹாஜியானி எம்.எம்.உமர் ஆயிஷா என்பவரின் கணவரும், எச்.ஹைதர் அலீ - எச்.அனீஸா ஃபாத்திமா ஆகியோரின் தந்தையுமாவார்.

கடந்த 1995ஆம் ஆண்டு வரை புதுடில்லியிலுள்ள Ministry of Defence - உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் Civil Departmentஇல் இவர் பணியாற்றியதன் காரணமாக “டில்லி ஹமீத்” என்று அழைக்கப்பட்டார்.

பணி ஓய்விற்குப் பின், காயல்பட்டினம் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியில் சில ஆண்டுகள் மேலாளராகப் பணியாற்றினார்.

காயல்பட்டினம் ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளியின் பொருளாளராக சேவையாற்றிய அன்னார், கடந்த ஆண்டு சுகவீனமுற்று படுக்கையிலானதையடுத்து அப்பொறுப்பிலிருந்து விடைபெற்றார்.

மறைந்த ஹாஜி எம்.ஏ.எஸ்.ஹமீத் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் 14.09.2012 அன்று (நாளை) காலை 09.00 மணியளவில் ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
H.ஹைதர் அலீ
(மறைந்த ஹாஜி எம்.ஏ.எஸ்.ஹமீத் அவர்களின் மகன்)
பெரிய நெசவுத் தெரு, காயல்பட்டினம்.
(கைபேசி எண்: +91 78457 22563)

படம்:
M.M.செய்யிது முஹம்மது புஹாரீ
(தம்மாம்)


[செய்தி திருத்தப்பட்டு படம் இணைக்கப்பட்டது @ 18:31/13.09.2012]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:
posted by S.D.Segu Abdul Cader (Qayide Millath Nagar) [13 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22094

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter. அஸ்ஸலாமு அலைக்கும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
_ نَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَ4ة -78 =4-l
4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!

20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ
20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம். Wassalam.

S.D.Segu Abdul Cader.
Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by H.I.RUGNUDEEN BUHARY (KERALA) [13 September 2012]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 22097

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை தருவானாக!ஆமீன்.

அன்னாரின் பிரிவால் மீளா துயரத்தில் வாடும் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆறுதல் சலாம் சொல்லி சபூர் செய்ய வேண்டுகிறேன்.

அன்புடன்,
ஹ.இ.ருக்னுதீன் புஹாரி, கேரளா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இன்னாலில்லாஹி...
posted by N.S.E. மஹ்மூது ( காயல்பட்டணம் ) [13 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22098

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவன பதவியை கொடுத்தருள்வானாக - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து , சுவர்க்கத்தின் வாசனையை நுகரச் செய்வானாக ஆமீன்.

அவர்கள் பிரிவால் வாடும் குடும்பத்தார், உற்றார், உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ்! சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை தந்தருள வேண்டுகிறேன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Hameed Sirajudeen (Pondicherry) [13 September 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 22099

இன்னா நில்லாஹி வ இன்னா இலஹி ராஜிஹூன். அன்னாரின் மறு உலக வாழ்க்கையில் வல்ல ரஹ்மானின் அருள் புரிவானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இன்னாஹ் லில்லாஹி வொ இன்னா இலைஹி ராஜிவூன்
posted by S.A.SALMAN FARIS (YANBU SAUDI ARABIA) [13 September 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22100

இன்னாளில்லாஹி வஇன்னா இலாஹி ராஜிஊன்

மர்ஹூம் அவர்களின் பிழைகளை அல்லாஹ் மன்னித்து மேலான சுவன பதியை கொடுப்பானாக ஆமீன் .

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பட்டார்களுக்கு அலலாஹ் சுபுரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுப்பானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by mohideen thambi s a m (jeddah) [13 September 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22102

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை தருவானாக ஆமீன்.

அன்னாரின் பிரிவால் வாடும் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது சலாம் சொல்லி சபூர் செய்ய வேண்டுகிறேன். அஸ்ஸலாமு அலைக்கும். (வரஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [13 September 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 22103

இன்னாளிலாஹி வ இன்ன இலிஹி ராஜி ஊன் யா... அல்லாஹ் அன்னாரின் பாவபிழை பொருத்து சுவனபதி நல்ஹிடு வாயாக ஆமீன். குடும்பத்தினர்கள் யாவர்களுக்கும் என் சலாம் (அஸ்ஸலாமு அழைக்கும் ) அல்லாவுக்காக சபூர் செய்யவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Shaik Dawood (Kayalpatnam) [13 September 2012]
IP: 112.*.*.* India | Comment Reference Number: 22106

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை தருவானாக!ஆமீன்.

அன்னாரின் பிரிவால் மீளா துயரத்தில் வாடும் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆறுதல் சலாம் சொல்லி சபூர் செய்ய வேண்டுகிறேன்.

G .M .Shaik Dawood


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Ar. Habeeb Rahman (Abu Dhabi) [13 September 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22109

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன். உருவத்திலும் குரலிலும் ஒரு கம்பீரம் இருக்கும்.! எப்போதுமே கலகலப்பாக பேசும் அவர்களின் உருவம் இன்னும் என் முன் நிழலாடுகின்றது.நான் சமீபத்தில் ஊரில் இருந்த சில நாட்களில், அவர்களின் சுகவீன செய்தி எனக்கு தாமதமாக கிடைத்ததனால் அவர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்களின் அனைத்து பாவங்களையும் வல்ல இறைவன் பொறுத்தருளி மேலான சுவனபதியை கொடுப்பானாக! அவர்களை இழந்து வாடும் ஹைதர் அலி காக்காவிற்கும் அவர்களின் அனைத்து சொந்தகளுக்கும் வல்லோன் பொறுமையை கொடுக்க துவா செய்கின்றேன்!

ஹபீப் ரஹ்மான்
நூருல் அமீன்
மற்றும் குடும்பத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by saburudeen (dubai) [13 September 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22110

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியில் அவர்களை நுழையச் செய்வானாக...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by mackie noohuthambi (kayalpatnam) [13 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22112

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எங்கள் உறவு 40 வருடங்களை கடந்தது. சகோதரர் ரியால் அவர்களும் ஹமீத் அவர்களும் எனக்கு உடன் பிறந்த சகோதரர்கள் மாதிரி. பால்ய நண்பர்களும் கூட. இலங்கையில் நாங்கள் ஒன்றாக கண்டி பெரதேனியாவில் சந்தித்து பேசிக்கொள்வோம். ஊரிலும் கூட அந்த நட்பு தொடர்ந்தது. ரியாதில் நான் பணியாற்றிய காலங்களில் அவர்கள் மகன் ஹைதர் அவர்களுடன் நட்பு ஏற்பட்டபோது அவர்கள் வாப்பாவுடன் எனக்கு இருக்கும் நெருக்கத்தை சொல்லி பெருமை பட்டுகொள்வேன். நேற்று ஒரு மறுமண நிகழ்ச்சியில் ஹைதர் அவர்களை சந்தித்தபோது கூட அவர்கள் தந்தையின் உடல் நலம் பற்றி விசாரித்தேன்..ஆனால் நோய்வாய்பட்டு இருப்பதை அறியாமல் இருந்துவிட்டேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை பொருந்திக்கொள்வானாக, தவறுகளை மன்னித்து அருள்வானாக. அவர்களின் மண்ணறையை வெளிச்சமானதாகவும் விசாலமானதாகவும் ஆக்குவானாக. மேலான சுவர்க்க பதியில் வாழசெய்வானாக. அவர்கள் குடும்பத்தினருக்கு நல்ல பொறுமையை கொடுத்து அருள்பாலிப்பானாக.. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by Kudack Mohudoom Mohamed (Kuwait) [13 September 2012]
IP: 31.*.*.* Kuwait | Comment Reference Number: 22115

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by sulaiman (abudhabi) [13 September 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22118

அஸ்ஸலாமு அழைக்கும் , இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:..Innalillahi wainna ilaihi rajuhoon.
posted by S.A.Shaik Mohamed (Periyanesavoo st) (Dubai) [13 September 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22120

Dear Hyder,

Assalamualaikum. My deepest condolense to you and your family members on the demise of your father. The loss is unbearable but the memories are sweet. I share your pain and sorrows. Your father is great person. Our jamath has lost one of the well deciplined,and good administrator.He is friendly with every body .

My prayers and well wishes are with you during this time of grief.

May Allah forgive all his sins and placed him in Jannathul firdous in ahirath. Aameen. Take care.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by kudack thamby (qatar) [13 September 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 22121

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

வல்ல நாயகன் மர்கூம் அவர்களுடைய பாவ பிழைகளை பொருத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியை கொடுதருவனாக ஆமீன் .

குடாக் தம்பி
குடாக் புஹாரி
எஸ் எ மொஹிதீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by mohamed abdul kader (dubai) [13 September 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22125

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவன பதவியை கொடுத்தருள்வானாக - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து , சுவர்க்கத்தின் வாசனையை நுகரச் செய்வானாக ஆமீன்.

அவர்கள் பிரிவால் வாடும் குடும்பத்தார், உற்றார், உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ்! சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை தந்தருள வேண்டுகிறேன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (Yanbu) [13 September 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22126

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியில் அவர்களை நுழையச் செய்வானாக ஆமீன்! சகோதரர் ஹைதர் அவர்களே அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்படிந்தவர்களாக பொறுமையை கைகொண்டு, பாசமிகு தாந்தைக்காக படைத்தவனிடம் துவா கேட்கவும். பெற்ற பிள்ளைகளின் துவா தான் அவர்களுக்கு நேரடியாக சென்று நன்மைகளை சேர்த்துவைக்கும் என்பதும் தாங்கள் அறிந்ததே.

தந்தையை இழந்து துயரசூழ்நிலையில் தவிக்கும் தாங்கள் முதல் தங்கள் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும், என்னுடைய அனுதாபமும் ஆறுதலும் கலந்த ஸலாத்தினை தெரிவித்து கொள்கிறேன்.அஸ்ஸலாமு அழைக்கும்!

சபூர் செய்தியுடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by Muhammad Ibrahim (Guangzhou) [14 September 2012]
IP: 183.*.*.* China | Comment Reference Number: 22129

இன்னாளில்லாஹி வஇன்னா இலாஹி ராஜிஊன்

மர்ஹூம் அவர்களின் பிழைகளை அல்லாஹ் மன்னித்து மேலான சுவன பதியை கொடுப்பானாக ஆமீன் .

மர்ஹூம் அவர்களின் குடும்பட்டார்களுக்கு அலலாஹ் சுபுரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுப்பானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. I MISS YOU PA!
posted by sharfudeen (coimbatore) [14 September 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 22133

இன்னா நில்லாஹி வ இன்னா இலஹி ராஜிஹூன். அன்னாரின் மறு உலக வாழ்க்கையில் வல்ல ரஹ்மானின் அருள் புரிவானாக.

எனக்கும் அமீர் அப்பாவுக்குமான உறவு வெறும் பேர - பிள்ளை என்பதாக மட்டுமில்லாமல் நிறைய உலக விசயங்களை அலசும் ஆசிரியர் - மாணவன் உறவும் இருந்தது.

சென்னை வந்தால் எங்கள் வீட்டில் இரண்டொரு நாட்களாவது தங்கும் காலங்களில் நிறைய விவாதித்திருக்கிறோம், உலக அரசியல், மதம், பொருளாதாரம் என்று எனது அடிப்படை உலக ஞானத்தை சிறிய அளவிலாவது உயர்த்தியவர் என்ற வகையில் அமீர் அப்பா அவர்களுக்கு நிறையவே கடன் பட்டிருக்கிறேன்.

பொதுவாக ஒருவர் மறைந்துவிட்டால் 'பெரிய இழப்பு ' என்று குறிப்பிடுவார்கள்., என்னை பொறுத்தவரையில் எனக்கு ஆத்மார்த்தமான உறவினர்களில் இவர் மிக மிக முக்கியமானவர், நிறைய கருத்து வேறுபாடுகளை கருத்து வேறுபாடுகள் என்று மட்டுமே என்னுடன் விவாதித்தவர்.. we miss you pa!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by செய்யது குதுபுதீன் (சென்னை ) [14 September 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 22136

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவன பதவியை கொடுத்தருள்வானாக - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து , சுவர்க்கத்தின் வாசனையை நுகரச் செய்வானாக ஆமீன்.

வருத்தத்துடன் ,
செய்யது குதுபுதீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by Mohamed Salih (Bangalore) [14 September 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 22137

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை தருவானாக!ஆமீன்.

அன்னாரின் பிரிவால் மீளா துயரத்தில் வாடும் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆறுதல் சலாம் சொல்லி சபூர் செய்ய வேண்டுகிறேன்.

பெங்களூர் ரில் இருந்து.
முஹம்மத் ஸாலிஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
posted by M.A.K.JainulAabideen,President,Kaakkum Karangal Narpani Mantram, (Kayalpatnam) [14 September 2012]
IP: 112.*.*.* India | Comment Reference Number: 22138

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவப்பிழைகளைப் பொருத்து "ஜென்னத்துல் பிர்தௌஸ்"என்னும் மேலான சுவனத்தை வழங்குவானாக ஆமீன். மர்ஹூம் அவர்களை இழந்து வாழும் குடும்பத்தினர்களுக்கு மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக.ஆமீன்.அஸ்ஸலாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by சாளை S. Mohamed Abdul Cader (Hong Kong) [14 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22139

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை தருவானாக!ஆமீன்.

அன்னாரின் பிரிவால் மீளா துயரத்தில் வாடும் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆறுதல் சலாம் சொல்லி சபூர் செய்ய வேண்டுகிறேன்.

ரேகர்ட்ஸ்,
அப்துல் காதர். ஹாங் காங்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...
posted by Haddadh (Thrissur) [14 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22149

இன்னாலில்லாஹி ஒ இன்னாஇலைஹி ராஜுஹூன்..................

ஹத்தாத் - திருச்சூர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..............
posted by S.K.Shameemul Islam (Chennai) [14 September 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 22156

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

ஹமீத் மாமா அவர்கள் டெல்லியில் இருக்கும்போதே மறைந்த என் அருமை தந்தை SK அவர்களின் மிக நெருங்கிய நண்பர். டெல்லி வாழ்வில் இருவரும் இருந்த காலத்தில் ஒருவரை ஒருவர் சந்திக்காமல் நாட்கள் கழியாது.

என் தந்தையின் மிக உவப்பான பிள்ளைகளில் ஒருவர்தான் மர்ஹூம் அவர்களின் மகனாகிய அருமைச் சகோதரர் ஹைதர் அவர்கள்.

மர்ஹூம் அவர்கள் காயல் வாழ்வில் ஆயிஷா சித்தீகா மத்ரஸாவில் பொறுப்புடனும் புன்னகை மாறாமலும் பணியாற்றிய நாட்கள் என்றும் மறக்க முடியாதவை.

மிகுந்த சமூக அக்கறை கொண்டவர்.

மேலும் காயல்பட்டணத்தில் ஜமாஅத்தே இஸ்லாமியின் ஆரம்ப காலப் பணிகளில் மர்ஹூம் அவர்களின் குடும்பத்தவர்களும் முக்கியமானவர்கள்.

பேரருளாளன் அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து அவர்களின் ஃகப்ர் வாழ்விலும் மறுமை வாழ்விலும் உயர் பதவிகளையும் மகத்தான வெற்றியையும் தந்தருள்வானாக. ஆமீன்.

ஷமீமுல் இஸ்லாம் SKS & குடும்பத்தினர்கள்.
காயல்பட்டணம் & சென்னை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. சிங்கம் மறைந்துவிட்டது!
posted by S.K.Salih (Kayalpatnam) [14 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22162

என் பாசத்திற்குரிய ஹமீத் தோழப்பா அவர்கள் காலமான செய்தி கேள்வியுற்று மிகவும் வருந்தினேன்.

அவர்களின் மரணச் செய்திக்குப் பிறகுதான் அவர்கள் சுகவீனமுற்றிருந்த செய்தியே எனக்குத் தெரிய வந்தது. ஊரிலிருந்தும், அவர்களது சுகவீனத்தின்போது ஒருமுறை கூட அவர்களை நேரில் சென்று நலம் விசாரிக்கும் பாக்கியத்தைப் பெறாதது என் மனதைக் குடைந்துகொண்டே இருக்கிறது.

மர்ஹூம் அவர்கள் தம் வாழ்நாளில் அனைவருக்கும் உதவியாகவே வாழ்ந்தவர்கள்... அவர்கள் பாசம் வைத்துள்ள மக்களிடம் அதிகளவில் கலந்துரையாடல் செய்வார்கள்... அனைத்துமே சமூக நலம் நாடும் விஷயங்களாகவே இருக்கும்.

ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியில் அவர்கள் பொறுப்பேற்றிருந்த காலம் தொட்டு, ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளியின் பொருளாளராக அவர்கள் இருந்த வரை அனைத்து தருணங்களிலும் அவர்களோடு கலந்துரையாடும் பாக்கியம் பெற்ற நான், அவர்களுடன் பழகிய காலத்தில், அடுத்தவர் குறித்து ஒருபோதும் அவர்கள் குறைபேசி அறியேன்.

அவர்களோடு சூடாக விவாதிப்பதே ஒரு தனி மகிழ்ச்சியைத் தரும் அம்சம்தான்! அவர்களுடன் பேசி முடிக்கும் வேளை ஒரு நற்செயலின் துவக்கமாகவே இருக்கும்.

இப்போது அவர்கள் நம்முடன் இல்லை. ஆனால், அவர்கள் இருக்குமிடத்திற்கு நாமும் செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம்.

கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவப்பிழைகளைப் பொருத்தருளி, மேலான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக, ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும், எங்களன்புச் சகோதரர் ஹைதர் காக்கா உள்ளிட்ட அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் அகங்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

நெஞ்சம் நிறைந்த துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் அவர்களின் குடும்பத்தார்,
காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:...
posted by SHAJAHAN (DAMMAM) [15 September 2012]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22176

அஸ்ஸலாமு அலைக்கும். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:
posted by SUPER IBRAHIM.S.H. (RIYADH - K.S.A.) [15 September 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22177

இன்னாலில்ளஹி வ இன்னா இலிஹி ராஜ்ஹிவூன். அஜ்ஜமள்ளஹு அஜ்ஜரக்!!!

கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவப்பிழைகளைப் பொருத்தருளி, மேலான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக, ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும், எங்களன்புச் சகோதரர் ஹைதர் காக்கா உள்ளிட்ட அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் அகங்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

ஆழ்ந்த இரங்கலுடன்,

சூப்பர் இப்ராகிம். எஸ்.எச். + குடும்பத்தினர்
கவிஞ்சர். ஷேய்க் அப்துல் காதிர்.
கே. இப்ராகிம் ஜமீல்.
ஹபிய்சா. நஹ்வி. சடகதுல்லாஹ்.
எல். எஸ். செய்து அகமது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2018. The Kayal First Trust. All Rights Reserved