டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்படுவதாக பிரதமர் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் இல்லத்தில் இன்று மாலை நடைபெற்ற மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்துவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு (எல்.பி.ஜி) ஆகியவற்றின் மீதான விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.5.50 குறைக்கப்படுவதாகவும், சமையல் எரிவாயு மானிய விலையில் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே வழங்குவது எனவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விலையேற்றைத்தை தொடர்ந்து சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.48.91 ஆக உயர்வு. பழைய விலை ரூ.43.91. காயல்பட்டினத்தில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.49.39 ஆக உயர்வு. பழைய விலை ரூ.44.39.
1. Re:... posted byAbdul Wahid S. (Kayalpatnam.)[13 September 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 22122
போன முறை பெட்ரோல் விலை உயார்வை காரணம் காட்டி டீசலில் ஓடுகிற ஒரு சில Auto கார்களும் கட்டணத்தை உயர்த்தினார்கள். இந்த முறை டீசல் விலை உயர்வை காரணம் காட்டி பெட்ரோலில் ஓடுகிற Auto rickshaw காரர்கள் கட்டணத்தை ஏற்றாமல் இருந்தால் சரி. நியாயமா பார்த்தால் அவர்கள் கட்டணத்தை குறைக்க வேண்டும்.
2. டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது posted byV D SADAK THAMBY (Guangzhou,China)[14 September 2012] IP: 113.*.*.* China | Comment Reference Number: 22143
டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது.ஒவ்வொரு முறையும் பெட்ரோலுக்கு மட்டுமே விலையை உயர்த்த சொல்லுவது நியாயமில்லை.
""பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகளுக்கிடையே உள்ள விகிதாச் சாரத்தைக் குறைக்கும் வகையில், இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சீனா போன்ற வளரும் நாடுகளில் எல்லாம் பெட்ரோல் - டீசல் க்கிடையே விலையில் அதிக வேறுபாடு கிடையாது.நம் நாட்டில் மட்டும் ஏன் இந்த வேறுபாடு?
நம் நாட்டில் மிகுதியான பொதுத்துறை வாகனங்கள் டீசலில் இயங்குவதாலேயே , அரசு ஒவ்வொரு முறையும்( சர்வதேச சந்தையில் என்னை விலை ஏறும்போதெல்லாம் ) டீசலின் விலையேற்றத்தை தவிர்த்து , பெட்ரோலில் மட்டுமே அதிகமாக விலையேற்றுகிறது. இதனால் பெருமளவில் டீசல் வாகனங்களே சாலையில் பயணிக்கின்றன. விளைவு , காற்று அதிகளவில் மாசு படுகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகளுக்கிடையே உள்ள விகிதாச்சாரம் குறைவதால் - சாலைகளும் அதிகமான பெட்ரோல் வாகனங்கள் ஓட வழிபிறக்கும். இதனால் காற்று மாசு படுவது படிப்படியாக குறையும்.
நியாயமாக பார்த்தல் எரிவாயுவுக்கு இன்னும் விலையை குறைக்க வேண்டும். அதன்மூலம் சாலைகளில் LPG வாகனங்கள் அதிகரிக்கும். காற்று மண்டலம் மாசுபடுவதும் குறையும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross