Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:07:10 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9129
#KOTW9129
Increase Font Size Decrease Font Size
வியாழன், செப்டம்பர் 13, 2012
ஜெய்ப்பூர் கா.ந.மன்ற (ஜக்வா) தலைவர் மறைவுக்கு கத்தர் கா.ந.மன்றம் இரங்கல்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2494 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் (ஜக்வா) அமைப்பின் தலைவர் ஹாஜி பிரபு எஸ்.ஏ.முஸ்தஃபா கமால் 12.09.2012 புதன்கிழமை இரவு 09.00 மணியளவில், ஜெய்ப்பூரில் காலமானார்.

அன்னாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, கத்தர் காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-



ஜெய்ப்பூர் காயல் நல மன்றத்தின் தலைவர் ஹாஜி பிரபு எஸ்.ஏ,முஸ்தஃபா கமால் அவர்கள் காலமான செய்தியறிந்து மிகவும் கவலையுற்றோம்.

நல்ல காரியங்களில் அனைவரோடும் இணைந்து நாமும் பணியாற்ற வேண்டும் என்ற உயர் நோக்கத்திலேயே அன்னார் தம் மன்றத்தின் தலைமைப் பொறுப்பு தன்னைத் தேடி வந்தபோது தவிர்க்காமல் ஏற்றுக்கொண்டார்கள்.

அல்லாஹ்வின் நாட்டப்படி நம்மை விட்டும் பிரிந்து சென்றுவிட்ட மர்ஹூம் அவர்களின் நற்கிரியைகள் அனைத்தையும் வல்ல அல்லாஹ் அங்கீகரித்தருள்வானாக...

அன்னார் அறிந்தோ - அறியாமலோ அன்னார் செய்த பாவப்பிழைகளை கருணையுள்ள அல்லாஹ் பொருத்தருள்வானாக....

அன்னாருக்கு மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், உற்றார் - உறவினர், ஜெய்ப்பூர் காயல் நல மன்ற (ஜக்வா) நிர்வாகிகள் - உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை இறையோன் வழங்கியருள்வானாக...

என எம் மன்றத்தினர் யாவரும் துஆ செய்வதோடு, அன்னாரின் மறைவுக்கு எம் மன்றத்தின் சார்புில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


இவ்வாறு கத்தர் காயல் நல மன்றத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
துணைத்தலைவர் முஹம்மத் யூனுஸ் மூலமாக,
எஸ்.கே.ஸாலிஹ்,
உள்ளூர் பிரதிநிதி,
கத்தர் காயல் நல மன்றம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அனைவருக்கும் நன்றி - ஜஸாக்குமுல்லாஹு கைரா!
posted by Prabu Qutbuddeen (Kayalpatnam) [14 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22159

அன்பார்ந்த காயலர் நன்னெஞ்சங்கள் அனைவருக்கும் மர்ஹூம் பிரபு முஸ்தஃபா கமால் ஹாஜி அவர்களது மக்கள் உள்ளிட்ட குடும்பத்தாரின் அகங்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹ்...

வல்ல அல்லாஹ்வின் நாட்டப்படி, எங்களன்புத் தந்தையார் நம் யாவரை விட்டும் பிரிந்து, அழியப்போகும் இவ்வுலகை விட்டு - நிரந்தர உலகை நோக்கி சென்றுவிட்டார்கள்... இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

வல்லோனின் கட்டளைக்கிணங்க, தாங்க முடியாத இந்த இழப்பைப் பொருந்திக்கொள்ள நாங்கள் ஆயத்தமாகி வருகிறோம்...

எங்களன்புத் தந்தையின் மறைவையொட்டி, இணையதளங்களின் வாயிலாகவும், தொலைபேசி - மின்னஞ்சல் வாயிலாகவும் - அவர்களின் மஃபிரத்திற்காக பிரார்த்தனை செய்து, நாங்கள் மனம் நொந்து போயுள்ள இந்நேரத்தில் எங்கள் நெஞ்சங்களை வருடும் வகையில் ஆறுதலான வாக்கியங்களையும் தெரிவித்த அனைத்து நல்ல நெஞ்சங்களுக்கும் கருணையுள்ள அல்லாஹ் எல்லா நற்கூலிகளையும் வழங்கியருள்வானாக என்று இந்நேரத்தில் உளமார பிரார்த்திக்கிறோம்.

எங்கள் பாசத்திற்குரிய தந்தையவர்கள், தங்கள் வாழ்நாளில் தங்களில் யாருக்கேனும் அறிந்தோ - அறியாமலோ, தங்களின் சொல்லாலோ - செயலாலோ மனதைக் காயப்படுத்தியிருப்பின் அவர்கள் சார்பில் அவர்களின் மக்களாகிய நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். தாங்கள் யாவரும், அல்லாஹ்வுக்காக - அவனது திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காக மனம் பொருத்தருள அன்புடன் வேண்டுகிறோம்.

அத்துடன், எங்கள் அன்புத் தந்தையவர்கள், தங்கள் வாழ்நாளில் தங்களில் யாருக்குனும் பணமோ - பொருளோ தர வேண்டியிருந்தால், அவர்களின் மக்களாகிய நாங்கள் அதற்குப் பொறுப்பேற்க ஆயத்தமாக உள்ளோம். அதுபோல, எங்கள் தந்தைக்கு தங்களில் யாரேனும் பணமோ - பொருளோ கொடுக்க வேண்டியிருந்தாலும் அதற்காகவும் எங்களைத் தொடர்புகொள்ளலாம்.

சம்பந்தப்பட்டவர்கள் இதன் கீழுள்ள எங்கள் தொலைபேசி எண்களிலோ, மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்புகொண்டு தகவல் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

நிறைவாக, எங்கள் தந்தை ஜெய்ப்பூரில் காலமானவுடன், அங்கு அவர்களை குளிப்பாட்டி - கஸஃப் மாற்றி, அனைத்து கிரியைகளையும் எங்கள் குடும்பத்தார் போல முன்னின்று பொறுப்பேற்று செய்த ஜெய்ப்பூர் காயல் நல மன்றத்தின் அனைத்து நிர்வாகிகள் - உறுப்பினர்கள் மற்றும் இதர காயலர்கள், குறிப்பாக, எங்கள் தந்தையின் மேல் பற்றும் பாசமும் கொண்டு, அவர்கள் காலமான நேரத்திலிருந்து, அவர்களது ஜனாஸா அங்கிருந்து அனுப்பப்படும் வரை நமதூர் மக்களுடன் இணைந்து கடமையாற்றிய ஜெய்ப்பூர் ஜமாஅத்தைச் சேர்ந்த பூர்விக குடிமக்களாகிய எங்கள் அன்புச் சகோதரர்கள் யாவருக்கும் எங்கள் உள்ளங்குளிர மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஜஸாக்குமுல்லாஹு கைரா...

ஜெய்ப்பூரிலிருக்கும், எங்கள் அன்பிற்குரிய சகோதரர் பிலால் அவர்கள் இத்தகவலை, அங்குள்ள நமதூர் மக்கள் யாவருக்கும் தெரிவிப்பதுடன், குறிப்பாக ஜெய்ப்பூர் ஜமாஅத்தைச் சேர்ந்த பூர்விக குடிமக்களுக்கும் எங்களது இந்த நன்றியறிவித்தலை பொறுப்பேற்று தெரிவித்து உதவுமாறு அன்புடன் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம்.

கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் அவர்களது பாவப் பிழைகளைப் பொருத்தருளி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில், நபிமார்கள் - ஷுஹதாக்கள் - ஸித்தீக்கீன்கள் - ஸாலிஹீன்களுடன் அவர்களையும், நம்மையும் சேர்த்தருள்வானாக, ஆமீன்.

மிகுந்த அன்புடன்,
பிரபு எம்.கே.செய்யித் அஹ்மத் கபீர் ரிஃபாய்
[தொடர்பு எண்: +966582971947
Email: rifaiprabu@gmail.com]

ஹாஃபிழ் பிரபு எம்.கே.முஹம்மத் பாதுல் அஸ்ஹப் குத்புத்தீன்
[தொடர்பு எண்: +91 9840945442 - இந்தியா;
+971554145590 - துபை
Email: Prabuqutub@gmail.com]

பிரபு எம்.கே.செய்யித் இஸ்மாஈல் ஜமாலுத்தீன்
[தொடர்பு எண்: +91 9790123057
Email: jamaludeen17@gmail.com]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved