 |  |
செய்தி எண் (ID #) 9122 | |  | செவ்வாய், செப்டம்பர் 11, 2012 | தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் 13 உறுப்பினர்கள் பட்டியல் முடிவானது! (செய்தி திருத்தப்பட்டது) | செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 4046 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய | |
தமிழ்நாடு வக்ஃப் வாரியம் 13 உறுப்பினர்கள் கொண்டு இயங்கும் அமைப்பாகும். இதுவே - தமிழகத்தில் உள்ள அனைத்து வக்ஃப் சொத்துகளையும் கண்காணிக்கும் பொறுப்பு கொண்டது. 2011 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த தமிழக சட்டசபைக்கான தேர்தலில் புதிதாக அ.தி.மு.க. அரசு பதவியேற்றப்பிறகு, முந்தைய ஆட்சி காலத்தில் பொறுப்புக்கு வந்த - வாரிய தலைவர் கவிக்கோ அப்துர் ரஹ்மான் - உட்பட அனைத்து உறுப்பினர்களும் பதவி விலகினர்.
கடந்த ஜூன் மாதம், தமிழக அரசு - தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு 9 பேரை நியமித்தது. அவர்கள் விபரம் வருமாறு:
1. ஜே.எம். ஹாரூன் ரஷீத் (பாராளுமன்ற உறுப்பினர்)
2. எஸ். அமீர் அலி ஜின்னாஹ் (பாராளுமன்ற உறுப்பினர்)
3. ஏ. முஹம்மது ஜான் (சட்டமன்ற உறுப்பினர்)
4. எஸ். அப்துர் ரஹீம் (சட்டமன்ற உறுப்பினர்)
5. சலாஹுதீன் முஹம்மது அய்யூப் (சுன்னி மார்க்க அறிஞர்)
6. குலாம் அஹ்மத் மெஹ்தி கான் (ஷியா மார்க்க அறிஞர்)
7. ஏ. தமிழ்மகன் ஹுசைன் (பிரபல இஸ்லாமிய அமைப்பின் பிரதிநிதி)
8. எஸ்.ஏ. பாரூக் (பிரபல இஸ்லாமிய அமைப்பின் பிரதிநிதி)
9. முஹம்மது நசீமுத்தீன் IAS (அரசு பிரதிநிதி)
தமிழ்மகன் ஹுசைன் - அ.தி.மு.க. கட்சியின் - எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராகவும் உள்ளார். ஈரோடை சார்ந்த எஸ்.ஏ. பாரூக் - அ.தி.மு.க. கட்சியை சார்ந்தவர்.
எஞ்சியுள்ள 4 இடங்களில் இரண்டு முத்தவல்லிகளுக்கும், இரண்டு தமிழ்நாடு பார் கவுன்சிலில் உள்ள முஸ்லிம் உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்பட்டது. முத்தவல்லிகளுக்கான தேர்தலில் பங்கேற்க - ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய்க்கும் மேல் வருவாய் பெறும் வக்ஃப்களின் முத்தவல்லிகள் தகுதியானவர்கள். அந்த இடங்களுக்கான தேர்தல் - ஆகஸ்ட் 29 அன்று நடைபெற்றது.
பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கான இடத்திற்கு -
1. ஏ.எஸ். பீபி ஜான்
2. எம்.கே. கான்
ஆகியோர் தேர்வாகினர்.
முத்தவல்லிகளுக்கான இடத்திற்கு -
1. எம். முஹம்மது சிக்கந்தர்
2. டாக்டர் ஹாஜா கே. மஜீத்
ஆகியோர் தேர்வாகினர்.
வாரிய உறுப்பினர்கள் 12 பேரில் (அரசு பிரதிநிதியை தவிர்த்து) ஒருவர் - அவர்கள் மத்தியில் நடக்கும் தேர்தலில் தலைவராக தேர்வு செய்யப்படுவார். இந்த தேர்தல் விரைவில் நடந்து, புது வக்ஃப் வாரியம் அதிகாரப்பூர்வமாக செயல்படத் துவங்கும் என தெரிகிறது.
[செய்தி திருத்தப்பட்டது @ 7:40 pm / 19-9-2012] |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
 |
|
|