தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்க வேண்டி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியின் போது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பூஜித்த பிறகு நீர்நிலைகளில் கரைக்கப்படும் வழக்கம் உள்ளது. ஆனால் சமீப காலமாக ரசாயன வண்ணப்பூச்சுகளுடன் கூடிய விநாயகர் சிலைகளை வழிபட்ட பின் நீர்நிலைகள் மாசுபடுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் முத்தையாபுரம், திரேஸ்புரம், திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம். களிமண்ணால் செய்யப்பட்ட, சுடப்படாததும் மற்றும் ரசாயன கலவை இல்லாத விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டும். இந்த சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கலாம். ரசாயனம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கக்கூடாது.
கடற்கரை மற்றும் ஏரிகளில் விநாயகர் சிலைகளை கரைக் காமல் கடலினுள் குறைந்தது 500 மீட்டர் தூரம் வரை எடுத்துச்சென்று கரைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எனவே பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை பாரம்பரிய வழக்கப்படி சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு கொண்டாட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross