தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை - கல்வி உதவித்தொகை குறித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு கல்வி அறக்கட்டளையின் சார்பில் ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2012 - 2013 ம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை வழங்குவது தொடர்பான நிர்வாகக் குழு கூட்டம் தமிழக ஆளுநர் ரோசையா தலைமையில் செப்டம்பர் 4 ம் தேதி நடந்தது. இந்தக் கூட்டத்தில் இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ரூபாய் 4500, முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ரூபாய் 5000, மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ரூபாய் 5,500 , பி.எச்.டி. படிக்கும் மாணவர்களுக்கு ரூபாய் 6,500 ம் வழங்க தீர்மானிக்கப்பட்டது.
இந்த உதவித் தொகையை பெற விரும்பும் இளங்கலை, முதுநிலை பட்டபடிப்பு மற்றும் மருத்துவம், பொறியியல், பி.எச்.டி. தொழில்நுட்ப பட்டப்படிப்பு ஆகியவற்றில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 15 வரை வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்டோபர் 31 ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். 60 சதவீத மதிப்பெண்ணும் அதற்கு மேலும் பெற்றுள்ள மாணவர்கள் இந்த கல்வி உதவித்தொகை பெற தகுதி உள்ளவர்கள்.
விண்ணப்ப படிவத்தை கௌரவ செயலர், தமிழ்நாடு அறக்கட்டளை, ராணி சீதை மன்றம், 6 - வது தளம், எண் 603 அண்ணா சாலை, சென்னை - 600 006 என்ற முகவரிக்கு சுய முகவரியிட்ட உரையில் ரூபாய் 10 க்கான அஞ்சல் தலை ஒட்டி பெற்றுக்கொள்ளலாம்.
தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்டுள்ள மேற்காணும் செய்தி குறிப்பினை காயல்பட்டினத்தை சார்ந்த, பல்வேறு கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் அறிந்துக்கொண்டு , வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளும்படி - காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையத்தின் (KCGC) - கல்விக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஹெச்.எம். அஹ்மத் தெரிவித்துள்ளார்.
தகவல்:
வழக்கறிஞர் ஹெச்.எம். அஹ்மத்,
கல்விக்குழு, காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC).
|