தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில், நடப்பாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பயணியருக்கு தடுப்பூசி முகாம், இன்று காலை 09.30 மணியளவில் காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
கே.எம்.டி. மருத்துவமனை நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ முகாமைத் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் இளநிலை உதவியாளர் ஃபக்ருத்தீன் அலீ அஹ்மத், அதன் தன்னார்வ சேவையாளர்கள் அபூ நாஸர், நெய்னா முஹம்மத் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்ற இம்முகாமில், மாவட்ட சுகாதாரத் துறையின் இணை இயக்குநர் டாக்டர் கே.சந்தோஷ் குமார், அவரது உதவியாளர் காதர் ஷா, கே.எம்.டி. மருத்துவமனையின் பொது மருத்துவர் டாக்டர் ராணி டப்ஸ், சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், வட்டார சுகாதார ஆய்வாளர்களான சங்கர சுப்பு, ஜெய்சங்கர், சோமசுந்தரம், ஆனந்தராஜ், செவிலியர் எஸ்.கோமதி, கே.அழகு மீனாட்சி, ஏ.கஸ்தூரி பாய் ஆகியோரடங்கிய மருத்துவக் குழுவினர் கலந்துகொண்டு, ஹஜ் பயணியருக்கு தடுப்பூசி போட்டனர்.
நடப்பாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் - தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 100 ஆண் - பெண் பயணியர் இம்முகாமில் கலந்துகொண்டனர்.
முகாம் ஏற்பாட்டுப் பணிகளை, கே.எம்.டி. மருத்துவமனை செயலாளர் ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம், மேலாளர் அப்துல் லத்தீஃப், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், மாவட்ட - நகர நிர்வாகிகளான ஹாஜி பி.எம்.எஸ்.அமானுல்லாஹ், ஹாஜி எம்.கே.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா, அரபி ஷாஹுல் ஹமீத், எஸ்.இ.அஹ்மத் தம்பி, ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை, எஸ்.ஏ.உமர் ஸாஹிப், எம்.எம்.எஸ்.இப்றாஹீம் அத்ஹம் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர். |