காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையத்தின் (KAYALPATTINAM - CHENNAI GUIDANCE CENTRE) வருடாந்திர பொதுக்குழு கூட்டம் சென்னையில்
கடந்த ஞாயிறு அன்று (செப்டம்பர் 9) நடந்தது. அதில் மருத்துவ முகாம் மற்றும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியை செப்டம்பர் 23 அன்று
சென்னையில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அது குறித்து அவ்வமைப்பின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
நமது காயல்பட்டணம் - சென்னை வழிகாட்டு மையத்தின் (Kayalpatnam - Chennai Guidance Centre) வருடாந்திர பொதுக்குழு கூட்டம்
சென்னை கிரீம்ஸ் சாலையின் உள்ள கிரீம்ஸ் துகர் கட்டிட வளாகத்தின் ஐந்தாவது மாடியில் அமைந்துள்ள Hindustan Chamber of Commerce என்ற
கூட்ட அரங்கில் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
கூட்டத்திற்கு KCGC யின் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் ஆடிட்டர் ரிப்பாய் அவர்கள் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் நமது KCGC
உறுப்பினர்களும், சிறப்பு அழைப்பாளர்களும் கலந்து கொண்டு சிறபித்தனர்.
கூட்டத்தின் ஆரம்பமாக இறைமறையாம் திருக்குர்ஆனின் வேத வசனத்தை தனது இனிய குரலால் ஹாபிஷா புஹாரி அவர்கள் ஓதி நிகழ்ச்சியை
தொடங்கிவைத்தார். அவரை தொடர்ந்து அமைப்பின் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் H.N. சதகதுல்லாஹ் அவர்கள் வரவேற்ப்புரை நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து நமது KCGC கடந்து வந்த பாதைகள், இதுவரை அது ஆற்றிய மக்கள் பணிகள் போன்றவற்றை விளக்கும் படக்காட்சிகளை
PROJECTOR மூலம் நமது KCGC யின் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் ஷமீமுல் இஸ்லாம் அவர்கள் அனைவருக்கும் புரியும் வண்ணம்
விளக்கமளித்தார்.
KCGC யின் வேலைவாய்ப்பு குழு சார்பாக நடத்திய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பயன் அடைந்த இருவரை மேடைக்கு அழைத்து அவர்களின்
கருத்துக்கள் பெறப்பட்டது. அதில் நமது நிகழ்ச்சி எவ்வாறெல்லாம் அவர்களுக்கு பயன்பட்டது என்பது குறித்து சுருக்கமாக விளக்கமளித்தார்கள்.
அதனை தொடர்ந்து கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றன. அதில் ஹாஜி குளம் இப்ராகிம், ஹாஜி M.M. அப்துல் காதர் (முத்து வாப்பா), குளம்
முஹம்மத் தம்பி, பல்லாக் சுலைமான், டாக்டர். நவாஸ், H.M. ஷபியுல்லாஹ், கிதுரு முஹியதீன், S.H. அப்துல் சமது,
M .S முஹம்மது சாலிஹு, ஹாபிள் புஹாரி, துளிர் அஹ்மத், சேக் சுலைமான் மற்றும் பலர் தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர்.
இக்கூட்டத்தில் கல்வி குறித்தே அதிகமாக விவாதிக்க பட்டது. கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களின்
சாராம்சம்:
புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் பல்வேறு உயர் கல்வி தொடர்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை விழிப்புணர்வு பெற செய்ய
வேண்டும்.
ஒரு நீண்ட கால திட்டமாக 6 முதல் 8 வரை பயிலும் மாணவர்களை தேர்வு செய்து அவர்களை கல்வி திறன் மற்றும் IQ போன்றவற்றை ஆராய்ந்து
அவர்கள் என்ன விதமான விசயங்களில் இன்னும் அவர்கள் தேர்ச்சிபெற வேண்டுமோ அதை அவர்கள் பயிலும் பள்ளி பருவத்திலேயே கற்க ஏற்பாடுகள்
செய்திட வேண்டும்.
அடிப்படை கல்வியின் முக்கியதுவதை மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும், உணர்ந்து செயல்பட வேண்டும். எப்படி படிக்க வேண்டும்,
எப்போது படிக்க வேண்டும், என்ன படிக்க வேண்டும் என்று நாம் வழிகாட்டிட வேண்டும்.
சென்னையில் உள்ள I.I.T, ANNA UNIVERSITY, திருச்சியில் உள்ள N.I.T, பெங்களுரில் உள்ள I.I.S. போன்ற கல்வி நிறுவனங்களுக்கு
மாணவர்களை அழைத்துச்சென்று பார்வையிட வைக்க வேண்டும். இதுபோன்ற உயர் கல்வி கூடங்களில் இடம் கிடைப்பது சுலபமில்லை என்றாலும்
அவ்விடங்களுக்கு அவ்வபோது சென்றுபார்வையிடுவதன் மூலமும், ஓயாமல் அதற்காக செய்யும் முயற்சிகள், மற்றும் திட்டங்களின்
அடிப்படையிலும் அக்கல்வி கூடங்களில் இடம் கிடைப்பது சாத்தியம் ஆகும். அதற்கு தேவையான அனைத்து செயல்பாடுகளிலும் நமது அமைப்பு
உறுதுணையாக இருக்கும்.
உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் நமதூரின் கற்ற சிறந்த அறிஞர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு, அவர்கள் சம்மந்தமான DATA
களை சேகரித்து, அவர்களை தொடர்பு கொண்டு அவர்களின் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். இன்னும்
அவர்கள் அனைவரையும் அமைப்பு சார்பாக ஒன்றிணைக்க வேண்டும்.
இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களை முறையாக பதிவு செய்து அவற்றின் தரவரிசையை பட்டியலிட்டு வைத்துகொள்ள வேண்டும்.
தேவைபட்டால் உலகமுழுவதுமுள்ள கல்வி நிறுவனங்களின் பட்டியலையும் வைத்துகொள்வது நல்லது.
நமதூரின் மாணவர்கள்,அவர்களின் பெற்றோர்கள் ஆகியவர்களின் விபரங்கள் அடங்கிய பதிவேடை தயாரித்து வைத்துகொள்ள வேண்டும்.
படித்துவிட்டு வேலை தேடும் மாணவர்களின் RESUMEகள் அவர்களிடம் பெற்று முறையாக கோப்புகள் செய்து தயார் படுத்திக்கொள்ள வேண்டும்,
எங்கெல்லாம் வேலை காலியாக உள்ளது என்ற விபரங்களை நமது உறுப்பினர்கள் தெரியபடுத்த வேண்டும்.
நமது குழந்தைகளுக்கு சிறுவயது முதலே கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். அதற்கு தேவையான நடவடிக்கைகளை நமது
அமைப்பு செய்து வந்தாலும், இனி வரும் காலங்களில் இன்னும் அதிகமாக செய்திடவேண்டும்.
நம் மக்களுக்கு ROLEMODEL இல்லை. அவர்கள் எந்த கல்வி கூடங்களில் படித்தால் சிறந்தது என்ற விபரங்கள் தெரியவில்லை. தகுதி இல்லாத
கல்லூரிகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றும் லட்ச கணக்கில் பணம் கொடுத்து சேர்கின்ற அவலம் நமதூரில் தொடர்கிறது. எனவே நமது அமைப்பு
அவ்விசயத்தில் முழு கவனம் கொள்ள வேண்டும்.
நமதூர் மாணவர்கள் எந்தெந்த கல்விகூடங்களில் படிக்கிறார்கள் என்ற விபரம் அடங்கிய பட்டியல் வேண்டும்.
கல்வி துறை பொறுத்தவரை அரசாங்கம் மாணவர்களுக்கு கடன் தருகிறது. மேலும் MOULANA ABULKALAM AZAD FOUNDATION போன்ற அரசு
நிறுவனங்கள் மாணவர்களுக்கு, குறிப்பாக சிறுபான்மை மாணவர்களுக்கு SCHOLARSHIP வழங்குகிறது. இதுபோன்ற எத்தனையோ உதவிகள்
அரசாங்கம் செய்து வருகிறது. ஆனால் நம் சமூகத்தினர் குறிப்பாக நமதூர் வாசிகள் அதை பயன்படுத்துவதும் இல்லை. அதை பற்றி அறியவும்
விருப்பப்படுவதும் இல்லை.
நமதூரில் சிறந்த கல்வி ஞானமுடிய மக்கள் நிறைய இருக்கிறார்கள் அவர்களை ஒன்றிணைப்பது நமது அமைப்பின் அத்தியாவசிய பணியாக
இருக்கவேண்டும், மேலும் நமதூரில் சிறந்த மருத்துவர்கள், சிறந்த பொறியாளர்கள், சிறந்த அரசுசார் பணியாளர்கள் போன்றவர்கள் இருந்தும் நம்
மக்கள் வெளியூர் மோகதில்தான் இருக்கிறார்கள். அத்தகைய சிறப்பாளர்கள் வெளியூரில் சென்றுதான் பணியாற்ற முடியும் என்ற நிலைக்கு
தள்ளப்படுகிறார்கள். எனவே இந்நிலையை மாற்றுவதற்கு நமது KCGC பாடுபடவேண்டும்.
இஸ்லாமிய உளவியல், இஸ்லாமிய பொருளாதாரம், இஸ்லாமிய குழந்தை வளர்ப்பு இதுபோன்ற கல்வியையும் நமது பெண்களுக்கு வழங்க ஏற்பாடு
செய்திட வேண்டும்.
நமது அடுத்த கூட்டங்களில் மாணவர்களை அதிகம் பங்குபெற செய்ய வேண்டும்.
நமதூர் மாணவர்கள் பயிலும் கல்லூரிகளில் நமது அமைப்பின் பிரதிநிதியை நியமிக்கப்பட வேண்டும்.
சென்னையில் நமதூர் வாசிகள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சென்று மாணவர்களிடமும், வேலைதேடுபவர்களிடமும் நாம் அதிக சந்திப்புக்களை
ஏற்படுத்தவேண்டும்.
கல்லூரியில் சேரகூடியவர்கள் நமது அமைப்புடன் நேராக தொடர்புகொண்டு ஆலோசனைபெரும் பொருட்டு தகவல் தொடர்புகளை விரிவாக்க வேண்டும்
ஏனெனில் நல்ல கல்லூரியில் இடம் கிடைத்தும் அந்த கல்லூரியின் மதிப்பு தெரியாமல் அதை நிராகரித்துவிட்டு அதைவிட தரவரிசையில் கீழ்
நிலையில் உள்ள கல்லூரியை நம் மாணவர்கள் தேர்தெடுத்த சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளது.இந்த நிலையை மாற்ற வேண்டுமானால்
அவர்களுக்கு நாமே நேரடியாக வழிகாட்ட வேண்டும்.
நம் மாணவர்கள் அவர்களின் குறிக்கோள்களை உயர்வாக வைத்து கொள்ள வேண்டும். அவர்களை I.I.T. போன்ற பெரிய கல்வி நிறுவனங்களில்
படிக்க வேண்டுமென்ற ஆசையை சிறுபிராயத்திலிருந்தே ஊட்டி வளர்க்க வேண்டும்.
இது போன்ற விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. நிச்சயமாக இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்துகொள்ளபட்ட கருத்துக்கள் யாவும் பயனுள்ளதாக அமையும்
என்பதில் ஐயமில்லை. இந்த கருத்துக்களை நமது KCGC அமைப்பானது அதன் எதிர்கால செயல்பாடுகளுக்காக மிகுந்த கவனத்துடன் பதிவு செய்து
கொண்டது.
இரவு 9 மணிவரை நடைபெற்ற இந்நிகழ்ச்சி இரவு விருந்தோம்பல் நிகழ்வுடம் முடிவுற்றது. வஸ்ஸலாம்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|