ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் (ஜக்வா) அமைப்பின் தலைவர் ஹாஜி பிரபு எஸ்.ஏ.முஸ்தஃபா கமால் 12.09.2012 புதன்கிழமை இரவு 09.00 மணியளவில், ஜெய்ப்பூரில் காலமானார். அவருக்கு வயது 65.
அன்னாரின் ஜனாஸா, ஜெய்ப்பூரிலிருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து நாற்சக்கர வாகனத்தில் இன்று காலையில் காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.
காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியில் இன்று ஜும்ஆ தொழுகை நிகழ்வுகள் நிறைவுற்ற பின்னர், ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டது. பள்ளியின் கத்தீபும் - முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ ஜனாஸா தொழுகையை வழிநடத்தினார்.
பின்னர், அங்கிருந்து அல்ஜாமிஉல் கபீர் பெரிய குத்பா பள்ளி மையவாடிக்கு ஜனாஸா கொண்டு வரப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது.
நிறைவில், அன்னாரின் மகன் ஹாஃபிழ் பிரபு எம்.கே.முஹம்மத் பாதுல் அஸ்ஹப் குத்புத்தீன், தன் தந்தையான - மறைந்த ஹாஜி எஸ்.ஏ.முஸ்தஃபா கமால் அவர்கள் தம் வாழ்வில் யாருக்கேனும் கொடுக்கல் - வாங்கலில் நிலுவை வைத்திருப்பின் அதனை அவர்களின் மக்களாகிய தங்களிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளுமாறும், கொடுக்க வேண்டியிருந்தால் மக்களிடம் தருமாறும், அவர்கள் வாழ்வில் அறிந்தோ - அறியாமலோ யார் மனதையேனும் புண்படுத்தியிருந்தால், அவர்களை மன்னிக்குமாறும் உருக்கத்துடன் வேண்டுகோள் வைத்ததோடு, அவர்களின் பிழை பொறுப்பிற்காக துஆ - பிரார்த்தனை செய்தார்.
ஜனாஸா தொழுகை மற்றும் நல்லடக்க நிகழ்வுகளில், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான், குத்பா சிறிய - பெரிய பள்ளிகளின் நிர்வாகி ஹாஜி ஜவாஹிர் உள்ளிட்ட அங்கத்தினர், குருவித்துறைப் பள்ளி இணைச் செயலாளர் ஹாஃபிழ் கார்ப்பரேஷன் இஸ்மாஈல், மகுதூம் ஜும்ஆ பள்ளியின் நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஜி என்.எஸ்.நூஹ் ஸாஹிப், புதுப்பள்ளியின் செயலாளர் ஏ.எஸ்.அஷ்ரஃப், மஸ்ஜித் மீக்காஈல் - இரட்டை குளத்துப் பள்ளியின் நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஜி முஹ்யித்தீன் தம்பி என்ற தம்பி ஸாஹிப், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ,
மார்க்க அறிஞர்களான மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ, மவ்லவீ மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ,
காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், அதன் 06ஆவது வார்டு உறுப்பினர் ஹாஜி ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன்
ஜெய்ப்பூர் காயல் நல மன்ற (ஜக்வா) செயலாளர் ஹாஜி எம்.ஏ.எஸ்.செய்யித் அபூதாஹிர்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ஏ.கே.மஹ்மூத் சுலைமான்,
நகரப் பிரமுகர்களான ஹாஜி சோல்ஜர் அப்துல்லாஹ் ஸாஹிப், ஹாஜி வாவு சித்தீக், ஹாஜி மொகுதூம் கண் ஸாஹிப், ஹாஜி பிரபுத்தம்பி, ஹாஜி வட்டம் ஹஸன் மரைக்கார்,
ஐக்கிய விளையாட்டு சங்க அங்கத்தினரான பல்லாக் அப்துல் காதிர் நெய்னா, ஏ.எஸ்.புகாரீ,
இளைஞர் ஐக்கிய முன்னணியின் செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் தலைவர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத், அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த - ஆசிரியர் இசட்.ஏ.ஷேக் அப்துல் காதிர், எம்.எம்.ஷாஹுல் ஹமீத் உள்ளிட்ட நகர பிரமுகர்களும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
|