தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவராக ஏ. தமிழ்மகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள தலைவரும், உறுப்பினர்களும் - தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்தனர். அப்போது - பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முஹம்மது ஜான் உடனிருந்தார்.
பிறகு வாரியத் தலைவர் - வடசென்னையில் அமைந்துள்ள - வக்ஃப் வாரிய அலுவலகத்திற்கு சென்று தனது பணிகளை துவக்கினார். அப்போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முஹம்மது ஜான், சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, சுற்றுலாத் துறை அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோர் உடன் இருந்தனர்.
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
தலைமைச் செயலகம், சென்னை. |