இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களைக் கேலி செய்து படமெடுத்து, இணையதளத்திலும் வெளியிட்ட அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவரைக் கண்டிக்காத அந்நாட்டு அரசைக் கண்டித்து, தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், 15.09.2012 சனிக்கிழமை மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டதிற்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்ட தலைவர் அப்பாஸ் தலைமை தாங்கினார். அதன் பிரச்சாரகர் மசூது யூசுபி கண்டன உரையாற்றினார்.
தொடர்ந்து, அமெரிக்க அரசைக் கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய ஆர்ப்பாட்ட முழக்கங்களை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் முழங்கினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான ஆண்களும் - பெண்களும் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்ட ஏற்பாடுகளை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர தலைவர் எஸ்.ஷம்சுத்தீன், துணைத்தலைவர் முஹம்மத் அப்துல் காதிர் என்ற சாளப்பா, ஷஃபீக், இப்றாஹீம் உட்பட பலர் செய்திருந்தனர். |