இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களைக் கேலி செய்து படமெடுத்து, இணையதளத்திலும் வெளியிட்ட அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவரைக் கண்டிக்காத அந்நாட்டு அரசைக் கண்டித்து, தூத்துக்குடி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், 15.09.2012 சனிக்கிழமை மாலை 03.00 மணியளவில், தூத்துக்குடியிலுள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டதிற்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பி.மீராசா தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், அமெரிக்க அரசைக் கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய ஆர்ப்பாட்ட முழக்கங்களை முன்மொழிய, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் உரத்த குரலில் அதனை வழிமொழிந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாநகர தலைவர் நவ்ரங் சஹாபுத்தீன், செயலாளர் உவைஸ், மாணவரணி ரஹ்மான், மாவட்ட இளைஞரணி செயலாளர் கே.மீராசா, தூத்துக்குடி நகர நிர்வாகிகளான சுலைமான், முஹம்மத் ரஃபீக், மில்லத் இம்ரான் கான், காயல்பட்டினம் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ், பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், நகர நிர்வாகிகளான ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், ஹாஜி பி.எம்.எஸ்.அமானுல்லாஹ், ஹாஃபிழ் எஸ்.எல்.ஷெய்கு அப்துல் காதிர், ஹாஜி எஸ்.டி.கமால், அரபி ஷாஹுல் ஹமீத், ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை, ஆத்தூர் அப்பாஸ் உட்பட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
|