முந்தைய பாகத்தில் - அன்றாடும் பயன்படுத்தும் முக்கிய சாதனங்களின் மின்சார பயனீட்டு அளவினை கண்டோம். இதே சாதனங்கள் வேறு
சக்தியிலோ, அல்லது வேறு சாதனங்களோ தங்களிடம் இருப்பின் அவற்றின் மின்சார பயனீட்டு அளவினை எவ்வாறு கணக்கிடுவது என இப்போது காண்போம்.
ஒரு சாதனத்தின் சக்தி 50 W என வைத்துக்கொள்வோம். அதனை நீங்கள் தினசரி 5 மணி நேரம் பயன்படுத்துகிறீர்கள் என்றும் வைத்துக்கொள்வோம்.
50 W -யையும், 5 மணி நேரத்தையும் பெருக்கினால் - கிடைப்பது 250 Watt Hour. 1000 Watt Hour என்பது ஒரு யூனிட். ஆகவே - இந்த
சாதனத்தின் ஒரு நாள் பயனீடு, கால் (௦0.25) யூனிட் ஆகும். ஒரு மாத பயனீடு - 250 Watt Hour * 30 நாட்கள் = 7500 Watt Hour; அதாவது 7.5
யூனிட் மாதத்திற்கு (7500 / 1000).
இப்போது நாம் அன்றாடும் பயன்படுத்தும் சாதனங்களை எவ்வாறு முறையாக பயன்படுத்தி - மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம் என காணலாம்.
(a) மின் விளக்கு
<> தேவையில்லாத போது மின் விளக்கையும், மின் விசிறிகளையும் அணைத்து விடுங்கள்
<> வாய்ப்பிருக்கும்போது சூரிய ஒளியினை முடிந்த அளவு பயன்படுத்துங்கள்
<> வீடு கட்டும் போது - போதிய அளவு சூரிய ஒளியும், காற்றோட்டமும் கிடைக்கும் விதத்தில் கட்டவும்
<> மெல்லிய வண்ண (Light Colour) மதில்கள் - நிறைந்த அளவு வெளிச்சத்தை பிரதிபலிக்கும். அதன் மூலம் குறைந்த அளவு மின் விளக்குகளை
பயன்படுத்தலாம்
<> தேவைப்படும் இடத்திற்கு வெளிச்சம் பாய்ச்சும் (Task Lights) மின் விளக்குகளை பயன்படுத்தவும்
<> சாதாரண பல்புகளுக்கு பதிலாக CFL விளக்குகளை பயன்படுந்துங்கள்
<> 36 W மெல்லிய டியூப்லைட் - 40 W சாதாரண டியூப்லைட் அளவிற்கான ஒளியினை தரும்
<> டியூப்லைட்களுக்கு மின்னியல் (electronic) ballast / choke பயன்படுத்துங்கள். அவை குறைந்த அளவு மின்சாரத்தை பயன்படுத்தும்
<> ஜீரோ வாட் பல்பு 12 முதல் 15 வாட் வரை மின்சாரத்தை பயன்படுத்தும். அவற்றுக்கு பதிலாக 5 W, 7 W, 9 W, 11 W - CFL விளக்குகளை பயன்படுத்துங்கள்
<> மின்விளக்கை தானாகவே இயக்க / அணைக்க - Infrared sensors, motion sensors, automatic timers, dimmers, solar cells - போன்ற பல சாதனங்கள் உள்ளன
<> பல்புகளையும், டியூப்லைட்களையும் அவ்வப்போது சுத்தம் செய்யவும். அப்போது தான் போதிய வெளிச்சம் கிடைக்கும்
(b) மின்விசிறிகள் / மோட்டார்கள்
<> குறைந்த எடை / மின்சாரம் மிச்சம் செய்யும் மின் விசிறிகளை பயன்படுத்தவும். அவை குறைந்த அளவு மின்சாரத்தை பயன்படுத்தும்
<> மோட்டார்களை ரீவைண்ட் செய்வதை தவிர்க்கவும்
<> மின்விசிறியின் இறக்கைகளை அவ்வப்போது சுத்தம் செய்யவும்
<> மோட்டார் Bearing பொருளை அவ்வப்போது உராய்வு நீக்கம் (lubricate) செய்யவும்
(c) அரவை எந்திரம் (Grinders)
<> மின்சாரம் மிச்சப்படுத்தும் மோட்டார்களையே - அரவை எந்திரத்திற்கு பயன்படுத்துங்கள்
<> அரவை எந்திரங்களுக்கு - நைலான் பெல்ட் பயன்படுத்தவும்
<> அரவை எந்திரங்களை முழுவதுமாக நிரப்பி பயன்படுத்தவும்
<> அரவை எந்திர பாகங்களை அவ்வப்போது சுத்தம் செய்து, உராய்வு நீக்கம் (lubricate) செய்யவும்
(d) சலவை எந்திரம் (Washing Machine)
<> சலவை எந்திரத்தை முழுவதுமாக நிரப்பி பயன்படுத்தவும்
<> Dryer - யை பயன்படுத்துவதை முடிந்த அளவு தவிர்க்கவும்
(e) குளிர் சாதனம்
<> தேவைக்கு ஏற்ற சரியான திறன் கொண்ட குளிர் சாதனத்தை பயன்படுத்தவும்
<> ஏ.சி. அறையை அடிக்கடி திறந்து மூடுவதை தவிர்க்கவும்
<> ஏ.சி. பில்டர்களை அடிக்கடி சுத்தம் செய்யவும்
<> ஏ.சி. அறையில் இருந்து எந்த வித கசிவும் இருக்க கூடாது
<> வெட்ப அளவினை 25 டிகிரி வைத்திருந்தால், குறைந்த செலவில், போதிய இதம் கிடைக்கும்
<> மின்சாரம் சிக்கனம் நட்சத்திரம் பெற்ற புது குளிர் சாதனத்தையே பயன்படுத்தவும். ரிப்பேர் செய்யப்பட்ட குளிர் சாதனங்களை தவிர்க்கவும்
(f) இஸ்திரி செய்வது
<> ஒன்று, இரண்டு ஆடைகளை இஸ்திரி செய்வதை தவிர்த்து, மொத்தமாக நிறைய ஆடைகளை இஸ்திரி செய்யவும்
(g) குளிர் சாதன பெட்டி
<> போதிய காற்றோட்டம் கிடைக்க மதில்களுக்கு அப்பால் குளிர் சாதன பெட்டிகளை வைக்கவும்
<> அடிக்கடி குளிர் சாதன பெட்டியை திறந்து, மூடுவதை தவிர்க்கவும்
<> சூடான பொருட்களை, சற்று குளிர்ந்த பின்னரே, குளிர் சாதன பெட்டிகளுக்குள் வைக்கவும்
<> உணவு பொருட்களை - மூடியே - குளிர் சாதன பெட்டிகளுக்குள் வைக்கவும்
<> Freezer - யை அடிக்கடி பனி அகற்றவும் (defrost)
<> குளிர் சாதன பெட்டியின் வெட்ப நிலையை - சீதோசன நிலைக்கு ஏற்றவாறு சரி செய்யவும்
<> மின்சார சேமிப்பு நட்சத்திரம் பெற்ற குளிர் சாதன பெட்டியையே பயன்படுத்தவும்
(h) தண்ணீர் பம்ப்
<> மின்சார சேமிப்பு நட்சத்திரம் பெற்ற தண்ணீர் பம்ப் பயன்படுத்தவும்
<> சரியான அளவு PVC பைப்புகளை இணைப்புகளுக்கு பயன்படுத்தவும்
<> கசிவுகளை சரிப்பார்க்கவும்
<> சரியான அளவில் தண்ணீர் பம்புகள் மின்சாரம் பயன்படுத்த - capacitor என்ற சாதனத்தை பொருத்தவும்
<> தண்ணீர் பம்புகளை - தொட்டி நிறைந்தவுடன் தானாகவே அணைக்கும் சாதனங்களை (level controller) பயன்படுத்தவும்
(i) தண்ணீர் சூடாக்கி (water heater)
<> முடிந்த அளவு சூரிய ஒளியில் இயங்கும் தண்ணீர் சூடாக்கியை பயன்படுத்தவும்
<> தண்ணீர் கசிவினை சரி பார்க்கவும்
<> வெப்பத்தை தக்கவைத்துக்கொள்ள - குழாய்களுக்கு பாதுகாப்பு வளையம் (insulate) பொருத்தவும்
(j) கணினிகள்
<> தேவையில்லாத போது கணினி போன்ற பொருட்களை அணைக்கவும். 24 மணி நேரமும் அணைக்கப்படாமல் இயங்கும் கணினி - மின்சாரம் சேமிக்கும் குளிர் சாதனப்பெட்டியை விட அதிக அளவில் மின்சாரத்தை பயன்படுத்தும்
<> கணினியை அணைக்கமுடியாத சூழல் என்றால், திரையினை (Monitor) அணைத்துவிடவும். கணினியின் பாதி மின்சக்தி திரைக்குதான் செல்கிறது.
<> கணினி, திரை, பிரிண்டர் ஆகியவைகளை ஸ்லீப் மோடில் (Sleep Mode) வைத்தால் சுமார் 40 சதவீதம் மின்சாரம் சேமிக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன
<> Screensavers - கணினி திரைகளை தான் பாதுகாக்கும், மின்சாரத்தை மிச்சம் செய்யாது. கணினியை - அணைத்து, மீண்டும் துவக்குவது - அதிக மின்சாரத்தை பயன்படுத்தாது. தேவையில்லாத போது - கணினியை அணைப்பதினால், பாகங்கள் நீண்ட நாள் உழைக்கும்; மேலும் மின்சாரத்தையும் மிச்சப்படுத்தலாம்
[பாகம் 1] | [பாகம் 2] | [பாகம் 3] | [பாகம் 4]
[முற்றும்]
மூலம்:
தமிழ்நாடு மின்சார வாரியம் |