புதிய கட்டண முறைப்படி செலுத்தவேண்டிய மாதிரிதொகையினை காண்போம்.
99 யூனிட் பயன்படுத்துபவர் 99 ரூபாய் கட்டுவார்.
100 யூனிட் பயன்படுத்துபவர் 100 ரூபாய் கட்டுவார்.
ஆனால் - 101 யூனிட் பயன்படுத்துபவர் 152 ரூபாய் கட்டுவார்.
100 யூனிட் பயன்படுத்துபவர் சராசரியாக தினமும் 1.6 யூனிட் பயன்படுத்துவார். மின்சார நிலைய ஊழியர்கள் கணக்கெடுப்பதில், 3 தினங்கள் கால தாமதமானால் - சுமார் 5 யூனிட் அதிகமாகவே பதிக்கப்படும். உதாரணமாக அந்த மாத (60 நாட்கள்) பயன்பாடு - 98 யூனிட் என்று வைத்துக்கொள்வோம். 3 நாட்களுக்கான பயன்பாடு 5 யூனிட்டுடன் இணைத்து 103 யூனிட் பயன்பாடு என பதிவு செய்யப்பட்டால், சரியான தொகையை விட சுமார் 50 ரூபாய் அதிகமாக கட்ட வேண்டிய சூழல் வரும்.
199 யூனிட் பயன்படுத்துபவர் 299 ரூபாய் கட்டுவார்.
200 யூனிட் பயன்படுத்துபவர் 300 ரூபாய் கட்டுவார்.
ஆனால் - 201 யூனிட் பயன்படுத்துபவர் 403 ரூபாய் கட்டுவார்.
200 யூனிட் பயன்படுத்துபவர் சராசரியாக தினமும் 3.3 யூனிட் பயன்படுத்துவார். மின்சார நிலைய ஊழியர்கள் கணக்கெடுப்பதில், 3 தினங்கள் கால தாமதமானால் - சுமார் 10 யூனிட் அதிகமாகவே பதிக்கப்படும். உதாரணமாக அந்த மாத (60 நாட்கள்) பயன்பாடு - 198 யூனிட் என்று வைத்துக்கொள்வோம். 3 நாட்களுக்கான பயன்பாடு 10 யூனிட்டுடன் இணைத்து 208 யூனிட் பயன்பாடு என பதிவு செய்யப்பட்டால், சரியான தொகையை விட சுமார் 100 ரூபாய் அதிகமாக கட்ட வேண்டிய சூழல் வரும்.
499 யூனிட் பயன்படுத்துபவர் 1297 ரூபாய் கட்டுவார்.
500 யூனிட் பயன்படுத்துபவர் 1300 ரூபாய் கட்டுவார்.
ஆனால் - 501 யூனிட் பயன்படுத்துபவர் 1801 ரூபாய் கட்டுவார்.
500 யூனிட் பயன்படுத்துபவர் சராசரியாக தினமும் 8.3 யூனிட் பயன்படுத்துவார். மின்சார நிலைய ஊழியர்கள் கணக்கெடுப்பதில், 3 தினங்கள் கால தாமதமானால் - சுமார் 25 யூனிட் அதிகமாகவே பதிக்கப்படும். உதாரணமாக அந்த மாத (60 நாட்கள்) பயன்பாடு - 498 யூனிட் என்று வைத்துக்கொள்வோம். 3 நாட்களுக்கான பயன்பாடு 25 யூனிட்டுடன் இணைத்து 523 யூனிட் பயன்பாடு என பதிவு செய்யப்பட்டால், சரியான தொகையை விட சுமார் 500 ரூபாய் அதிகமாக கட்ட வேண்டிய சூழல் வரும்.
இது குறித்து காயல்பட்டினம் மின்சார நிலையத்தில் விசாரித்ததில் - இதுபோன்ற நெருக்கமான அளவீட்டின் போது தாங்கள் கவனமாக இருப்போம் என தெரிவித்தனர். இருப்பினும் - இந்த முறையில், இவ்வாறு அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் வரும் என்பதனை மக்கள் அறிந்திருக்கவேண்டும்.
[தொடரும்]
[பாகம் 1] | [பாகம் 2] | [பாகம் 3] | [பாகம் 4] |